மருத்துவம்

யோகா செய்யும் பொது உஷ்ணம் மீறி வெப்பு, கொப்புளம் ,கண் எரிச்சல்   ஆகியவற்றிற்கு மருத்துவம்

வீட்டில் வாசியோகம் பாடத்தில் சொன்ன கரிசாலை , கத்தாழை கடுக்கை கற்பங்கள்  நடைமுறை செய்யுங்கள் . 
காலையில் டி , காபி பருகாதீர்கள் 

காலையில் , சாத்துக்குடி சாறு, இளநீர் , பதநீர் அருந்துங்கள் .  
வாரம்  ஒருமுறை நல்ல என்னை காய்ச்சி தலை உடல் முழுக்க தேய்த்து  தலை முழுகுங்கள் .
தலையில்  தினமும் என்னை வையுங்கள் 
பழங்கள் உண்ணுங்கள். தர்பூசணி வெள்ளரிக்காய் உண்ணுங்கள் .

 
உஷ்ணம் தணிக்க மூதண்டகியாழம்
 
கைப்பிடி அருகம்புபுல்லை  ஒருபாத்திரத்தில் போடுங்கள், அதில்   ஒரு லிட்டர்  தணணீர ஊற்றுங்கள்  . அதில் 25gm மிளகுபோடுங்கள்.   பாத்திரத்தை அடுப்பில் வைத்து  125 மில்லிலிட்டராக வத்த வையுங்கள் .கடைசியாக 10 கிராம் வெண்ணை அதில் சேர்த்து இறக்குங்கள்.   மூதண்ட கியாழம் தயார் ..

இதை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள் .
மூன்றுநாட்கள் சாப்பிட்டால் போதும் . .  மூலாதாரவெப்பு ,அரிப்பு . கொப்புளம் , பெண்கள் வெள்ளைப்பாடு மற்றும் ஆண்கள் இந்திரியம் வெளியேறல் தீரும் .

மஞ்சன கழிம்பு

கொப்புளம், தீபட்டபுன் .மூலத்தில் எரிச்சல் , மூல கடுப்பு   வேனல் கட்டி , வெட்டுக்காயம்  குணமாகும்
 மஞ்சள் மெழுகு 100 கிராம் வாங்கி அதை சிறு துண்டுகளாக வெட்டவும் . 200 கிராம் தேங்காய் என்னை சேர்த்து சிறு தீயில் 2௦ நிமிடம் காய்ச்சவும் . . ஆறியபின் அது கழிம்பாக இருக்கும் .. அதை ஆசனவாய் உள்ளே வெளிய தடவவும் .  

கொப்புளங்களில் தடவவும் .  எரிச்சல் வலி குறையும் . தீ பட்ட புண் தழும்பு இல்லாமல் ஆறும் . வெட்டு காயம் வலி குறைந்து ஆறும் 

 
தலை முழுக்க என்னை .

நல்லஎண்ணெய்   500மில்லி
மிளகு தூள் 10கிராம்
சிவப்பு சம்பா மிளகாய் வத்தல்  காம்பு நீக்கியது அல்லது தூள்   10 கிராம்
கடுக்காய் பொடி 10 கிராம் 
விரலி மஞ்சள்தூள் 5 கிராம்  
ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து . காய்ச்சி  இறக்கி ஆற வைக்கவும்.. 
இந்த எண்ணையை    பெண்கள் செவ்வாய் அல்லது  வெள்ளி கிழமையும் ஆண்கள்  புதன் அல்லது சனி கிழமையும் தலை உடல் முழுவதும் தேய்த்து   15 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பின் சீகக்காய் தேய்த்து குளிக்கவும்
ஆண்கள் தலை முழுக்கு செய்த நாளில் உடல் உறவு செய்யக்கூடாது, இது கட்டாயம்.  பெண்ணிற்கு   இந்த கட்டு பாடு தலை முழுக்கு செய்த நாளில் இல்லை  ..


நன்மைகள்
உடல் அசதி வலி நீங்கும் . 
 உடல் மிருதுவாகவும் , பளபளப்பாகவும், தேஜஸ் பெறும் 

 
பொடுகு நீங்கும் 
 முடி கொட்டாது வளரும் 

 விந்து  இறுகும் 

 நரம்பு தளர்ச்சி நீங்கும் .

 உடல் காங்கை என்ற உஷ்ணம் குறையும் .

 கண்எரிச்சல் நீங்கும் 

 மூக்கில் நீர்வடிதல்  மற்றும் தலை நீர் , தலை நோய்கள் தீறும்