திருவள்ளுவர் - பகுதி 2

“ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”
திருவள்ளுவர்பற்றி சித்தர்கள் பதிவு செய்த உண்மைகள்


திருவள்ளுவர் சித்தர்

கூடாத நெற்றிக்கண் திறந்த தாலே 
குறுமுனியோ ஆகலைய நாரதாதி 
வாடாத மனந்தானுந் தழ்ந்திடாத ,
வசிஸ்டரென்ன அகஸ்தியரும் விஸ்வாமித்திரன் 

.................
வாதனே கெவுனமதில் லேகினானே
வல்லபங்கள் செய்த வள்ளுவ நாதன்றானே

காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 782 மற்றும் 783


ஒளி வெளிமதி தாண்டி –சிவ சிவ 
ஒன்பது வாசலும் கட்டறுத்து 
தெளியவும் பொறி புலனும் –சிக்கறுத்து 
சிந்தை யகற்றி மனதை ஒருமை படுத்தி 
பொழியவும் அமிர்தரசம் – பொசிக்கவின்பம் 
பூசிக்க பூசிக்க ஞானம் பூரணமதாய் 
சுழிதனிலெழுந்த தொரு வாசி என்னும் 
சோதியை கண்டவனும் நான் காணும் 

ஞானவெட்டியான் பாடல் 36


செங்கதிராய் புவிதனிலும் சூழ்ந்து மேவும் 

திருவுருவாய் நின்றுபரஞ் செப்பினார்காண் 
அங்கெனவே யானனறிந்து அறிவினாலும் 
அருள் அறிந்து அரூபநிலை யானும் பெற்றேன் 

ஞானவெட்டியான் பாடல்687


கருதுகின்ற சரியையுடன் கிரியை யோகம் 
துறையறிந்த ஞானமிது நாலுவேதம் 
சொல்லிவைக்க வேண்டினார்கள் 
நிலையறிந்து அவரவர்க்கு லபித்தாரீசன் 

ஞானவெட்டியான் பாடல் 680


திருவள்ளுவரின் குரு

நாடதனில் ஒரு நூலும் சொல்லாதப்பா 
ஆனாலும் பிரம்மகுல வள்ளுவன்தான் 
நாடதனில் இதைப்பார்த்து தேடி தேடி 
நாடினான் ஞானம் மென்ற பாதை யொன்றே

அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி பாடல் 319


குறிப்பாக கும்பமுனி பாதம் போற்றி
குரு அருளால் குண்டலியை தொழுதென் பாரே 

ஞானவெட்டியான் பாடல் 1559


சற்குரு அகத்தியர் தன தாழ்பணியலுற்றோம்

திருவள்ளுவர் நவரத்தின வைத்திய சிந்தாமணி பாடல் 39


திருவள்ளுவர் ஒருவர பலரா ?


பெருநூல்கா நாயிரத்து தைநூரின்னூல் 
முன்னமேயான் பாடிவிட்டேன் னாயிரத்து முன்னூறு 
முடித்து வைத்தேன் குறளதுவ யுலகோர்க் காண்டே

ஞானவெட்டியான் பாடல் 1748


கேளப்பா ஈரடியாய் வேதம் சொன்னேன் 
கேடியாக இவ்உலகோர் பிழைக்க வேண்டி 
கேளப்பா பரிபாசை கூரில்லாமல் 
கொட்டினேன் ஆயிரத்தை நூற்றுக்குள்
தாலப்பா யதை குறுக்கி எண்ணூறு சொன்னேன் 
தயவாக யதைகுறுக்கி ஐநூறு சொன்னேன் 
மூலப்ப யதை குறுக்கி முன்நூறுஞ்சொன்னேன் 
முக்கியமாய் யதை குறுக்கி நூறுஞ் சொன்னேன்.

திருவள்ளுவர் சூத்திரம் 16 பாடல் 3


திருவள்ளுவர் குலம்

அந்தணர் வேதியர்கள் என்குலத்தை
அசட்டு பறையனென தள்ளினார்கள்

ஞானவெட்டியான் பாடல் 42

எங்க குலம் சுக்கிலத்தா லெடுத்தவாறு
மெண்ணறிய சுரோணிதத்தால் வளர்ந்தவாறு 

ஞானவெட்டியான் பாடல் 26 


ஔவ்வையார் குலத்தில் வந்த வள்ளுவனெனும்
ஆதிபீடம் நான் காணும்

ஞானவெட்டியான் பாடல் 31 


துய்யவெளி அருந்ததியின் குலந்தானாகும்
அவள்குலம் மென்றன் குலத்தில் லமைந்தவாறு 

ஞானவெட்டியான் பாடல் 685


மட்டமரும் பூங்குழல் வாலாம்பிகைப்பெண்
வங்கிசத்தி லுதித்த சாம்புவனு நான்

ஞானவெட்டியான் பாடல் 643


சரஸ்வதியின் கருவிலேதான் அறிவறிந்த பலநூல்கள் 
புவியிலேதான் அறிந்தமட்டும் வகுத்துரைத்து பிறந்தேனாண்டே 

ஞானவெட்டியான் பாடல் 36

செத்ததோர் மாடெடுப்போம் – சிவசிவ 
சுடுகாடு தினம் காத்திருப்போம் 
சுத்த வீரசைவமுடன் வாசிவாவாவெனும் 
தோத்திரம் செய்தே பொசித்திருப்போம்

ஞானவெட்டியான் பாடல் 37


கட்டையும் அடிக்கி கொள்வோம் பிணமதற்கு 
காற்பணமும் முழ துண்டும் வாங்கி கொள்வோம் 

ஞானவெட்டியான் பாடல் 38 


ராஜாங்கம் செய்த நடத்தையின் குறி 
வேத ஆகமத்தில் விதித்தவாரல்லகான் 

ஞானவெட்டியான் பாடல் 575


திருவள்ளுவர் தொழில் மற்றும் வாழ்கை முறை


சாதியில் லுயர்ந்தவன் காண் நவரத்தின 
சங்க பலகையின் மேலிருந்த வன்காண்
வேதியர் சாஸ்திரியர் துதிசெயும் 
விருது பெற்ற வீர சாம்புவனான்காண்

ஞானவெட்டியான் பாடல் 41 


பூணூல் தரித்து கொள்வோம் –சிவ சிவ
பொறியுமைம் புலனை தொழுது கொள்வோம் 
வேன விருதுகளும் விகிதமாய் 
வெண்குடை வெண்சாமரமும் பிடித்துகொள்வோம்
வானவர் முனிவர் தொழும் பொன்விசிறி 
மரகத குண்டலத்தின் கவசங்களும்
ஞானபிரகாச ஒளி –திவ்வியரச 
நாத விந்தர்சனைகளில் நாம் துதிப்போம் 

ஞானவெட்டியான் பாடல் 40

குளிகைரச மாதுகர்ப்ப குகையின்மூலம் 
வழியறிவு மவிழ்தமொடு நோய்கள் தீர 
வழலை முப்போ வைத்தியமும் லேகியம் 
வழிமடவா வாலாம்பிகை பெண்அருளினாலே 
விவேகமணி மாத்திரையும் பஸ்பம்தானும்
தெளிவுபெறு சுண்ணமொடு செந்தூரங்கள் 
திராகவமும் செயநீரும் சென்னி காப்பாம் 

ஞானவெட்டியான் பாடல் 11


திருவள்ளுவர் சித்தர்


திருவள்ளுவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் என்பதை காகபுசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 782 மற்றும் 783 இல் பதிவு செய்து உள்ளார். நெற்றிக்கண் திறக்கபெற்றதால், வசிஷ்டருக்கும் , விசுவாமித்திரருக்கும், அகத்தியருக்கும் சமமான 18 சித்தர்கள் வரிசையில் வள்ளுவர் உள்ளார். 

கெவுணம் என்னும் பிரபஞ்ச பயணம் செய்தவர் . வேதைகள் மற்றும் வாதவித்தைகள் செய்தவர். பல வல்லபங்கள் செய்தவர் , சித்தர்கல்வி வல்லுனர். எனவே வள்ளுவர் என சித்தர் மரபுப்படி பெயர் பெற்றார் (ஒரு சித்தர் ,ஒரு யோகியை சித்தர் என்று அங்கீகாரம் செய்தால் அவர் சிதார் என்று பட்டம் பெறுவார் .விசுவாமித்திரரை பிரம்ம ரிஷி என வசிஷ்டர் அழைத்தார் .ஆகையால் விசுவாமித்திரர் சித்தர்களில் உயர்ந்த பட்டமான பிரம்ம ரிஷி ஆனார் . சித்தர் மரபு இது).

காகபுசுண்டரால் வள்ளுவனாதன் என்ற பெயர் பெற்றார் திருவள்ளுவர். சித்தர்களில் நாதாந்தம் கண்டவர் நாதர் . (நாதர் மற்றும் சித்த பரமேஷ்டி , என்ற பட்டங்கள் ஜைன மத குருமார்களுக்கும் உண்டு .)

திருவள்ளுவர், அகத்தியரின் நூல்களை கற்றார் . அதன் அடிப்படையில் உலகில் யாரும் சொல்ல முடியாத ஞானத்தை , பிரம்மகுல திவள்ளுவர் ஞான வெட்டியான் என்ற ஞானபாதையில் சொன்னார் . இதை அகத்தியர் , அந்தரங்க தீட்சா விதி பாடல் 319 இல் சொல்லியுள்ளார் . அகத்தியரால் சித்தர் என்றும் அவரின் மாணவர் என்றும் உறுதி செய்யப்பட்டவர் திருவள்ளுவர். 

பிரம்ம குலம் என்பது பிரம்மம் என்ற இறைவனை அறிந்தவர்கள் பிரம்மகுலம் . வாசியோகத்தில் சுழிமுனையில் பேரொளியாகிய பிரம்மத்தை தரிசித்தவர் பிரம்மகுலத்தவர்களான சித்தர்கள். எனவே வள்ளுவர் பிரம்மகுலம். 

வாசி யோகத்தில், மனதை ஒருமைபடுத்தி ஒன்பது வாசல்களை அடைத்து, பத்தாம் வாசல் திறந்து , பர வெளியில் மற்றும் சுழிமுனையில் ஜோதிகண்டவர். பூரண ஞானம் பெற்று அமிர்தம் உண்டவர் எனவே வள்ளுவர் பிரமமகுலமதில் வந்த சித்தர் (ஞானவெட்டியான் பாடல் 36 ).

ஒளிவடிவான இறைவன் சொன்னதை எனது அறிவால் அறிந்து அரூப நிலை அடைந்தேன் (ஞானவெட்டியான் பாடல் 687 ) எனவே வள்ளுவர் தனது பூத உடலை கட்டி இழுக்க செய்து மரணம் அடைந்தார் என்பது உண்மை இல்லை .


இறைவன் அவரவர் தகுதிக்கு ஏற்ப செய்யகூடிய செயல்களுக்கு உத்தரவு தருகிறார் அதன் படி எனக்கு சரியை, கிரியை , யோகம் , ஞானம் ஆகிய நான்கு வேதங்களை எழுத உத்தரவிட்டார் . அதன் படி நான்கு வேதங்களை சொன்னேன் . “ஞானவெட்டியான் பாடல் 680. 

எனவே சித்தர்களின் நான்கு வேதங்கள் என்பது வேத வியாசர் வகை படுத்திய ரிக் , யஜூர் , சாம, அதர்வண வேதங்கள் இல்லை . எனவே திருவள்ளுவர் சித்தர் மட்டும் இல்லை சித்தர் கல்வியை உலகிற்கு சொன்ன மகாகுரு ..

திருவள்ளுவரின் குரு

அகத்தியர், திருவள்ளுவறை தனது மாணவன் என்று சொன்னதை மேலே பார்த்தோம் .
ஞானவெட்டியான் பாடல் 1559 இல் தனது குருவான கும்பமுனி என்ற அகத்தியரின் அருளால் குண்டலியால் உருவான ஒளியாகிய வாலையை தரிசித்ததாக சொல்கிறார் . மேலும் “சற்குரு அகத்தியர் தன தாழ் பணியலுற்றோம்” என்று திருவள்ளுவர் நவரத்தின வைத்திய சிந்தாமணி பாடல் 39 இல் சொல்கிறார் . இவற்றால் நாம் அறிவது திருவள்ளுவர் ஒரு சித்தர் .அவர்ரின் குரு அகத்தியர் என்பது முடிவாகிறது .

திருவள்ளுவர் ஒருவர பலரா ?

திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் வேறு . ஞானவெட்டியான்1500 மற்றும் பிற சித்தர் நூல்கள் எழுதிய திருவள்ளுவ நாயனார் வேறு என்ற கருத்தை சொல்பவர் உண்டு . இது பற்றி திருவள்ளுவர் சொல்வதை பார்ப்போம்.

ஞானவெட்டியான்1500 பாடல் 1748இல் “ நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த பெருநூல ஞானவெட்டியான்1500 என்பது . இதற்க்கு முன் 1300 பாடல்கள் கொண்ட திருக்குறளை உலக மக்களின் நன்மைக்காக பாடயுள்ளேன் “ என்கிறார்.

திருவள்ளுவர் சூத்திரம் 1 6 என்றநூல் 3 ஆம் மற்றும் 4 ஆம் பாடல்களில்
“ உலகமக்கள் நேர்மையுடன் வாழ இரண்டு இரண்டு வரிகளாக திருக்குறள் என்ற வேதத்தை பரிபாசை இல்லாமல் எழுதி உள்ளேன் . ஞானவெட்டியான்1500 , நவரத்த்தின வைத்திய சிந்தாமணி 800, பஞ்சரத்தினம் 500, கற்பம் 300 ,திருவள்ளுவர் 100 முப்பு 30, சூத்திரம் 16 ஆகிய நூல்களைநான் எழுதி உள்ளேன் “ . என்கிறார் . 

எனவே திருக்குறள் எழுதிய திருவள்ளுவரும் மற்றும் ஞானவெட்டியான்1500 மற்றும் பிற நூல்கள் எழுதிய திருவள்ளுவ நாயனார் , திருவள்ளுவ நாதன் ஆகிய பெயர்களில் உள்ளவரும் : திருவள்ளுவர் என்ற சித்தர் ஒருவரே ஆவார் .

திருவள்ளுவர் காலம்

திருவள்ளுவர் செய்த நூல்களில், செய்யுள் அமைப்புகளும் மற்றும் அவை சொல்லிய பொருள்களும் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவை . இவற்றில் சில நூறு ஆண்டு கால வேறு பாடுகள் உண்டு . இது உண்மை . ஆகையால் திருவள்ளுவர் பெயரில் பலர் பல கால கட்டங்களில் நூல்கள் எழுதி உள்ளார்கள் என்பது தவறான முடிவு . 

சித்தர்களின் அறிவியல் இன்றைய அறிவியலால் கணிக்க முடியாதது . சித்தர்கள் தனது வாழ்நாளை நீடிக்கும் சக்தி பெற்றவர்கள் . குறிப்பாக இறவாநிலை பெற்றவர்கள் . . எனவே அந்த அந்த காலகட்டத்திற்கு ஏற்ப நூல்களை ஒருவரே செய்துள்ளார் என்பதே சரியான முடிவு .
திருவள்ளுவரின் காலத்தை ஆராய்ந்த வல்லுனர்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று கணித்தனர் . அதை பின்பற்றி வள்ளுவர் ஆண்டு என்றமுறை பின்பற்றப்பட்டது .
ஆனால் காகபுசுன்டரின் தகவல்படி இவர் ராமாயான காலத்திற்கு முற்பட்டவர் என்கிறது . வசிஸ்டரும் விசுவாமித்திரரும் ராமாயாண காலத்திற்கு முற்பட்டவர்கள் . அவர்களின் வரிசையில் திருவள்ளுவர் உள்ளார் . எனவே இவரின் காலம் ராமாயான காலத்திற்க்கும் முற்பட்டது

திருவள்ளுவர் குலம்

திருவள்ளுவர் சாதிய வேறுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார் . இதை பல பாடல்களில் சொல்லிவுள்ளார் .

திரு வள்ளுவரை வேதியர் சாஸ்திரிகள் அசட்டு பறையன் என தள்ளினார்கள் . காரணம் சிறுவயதில் அவரும் அவரை சார்ந்தவர்களும் செய்த வெட்டியான் தொழில் . அவர்கள் சுடுகாடு காப்பார்கள் . விறகு கட்டைகள் அடுக்கி பிணத்தை எரிப்பார்கள் . அதற்கு கட்டணமாக கால் பணம் முழ துண்டும் பெற்றுகொள்வார்கள் ..
. .
செத்த மாட்டை எடுத்து சென்று அதன் தோலை உறிபார்கள். அந்ததோலை கொண்டு பறை எண்ணும் தோல் இசை கருவி செய்வார்கள் . அதன் மூலம் உலக மக்களுக்கு செய்தி சொல்வார்கள். இசை செய்வார்கள் . ஆயினும் வள்ளுவர் வீரசைவராக வாழ்ந்து , siddharyogam.comசித்தர் கல்விகற்று , வாசி யோகம் செய்து அமிர்தம் உண்டு ஞானம் பெற்றவர் . ஆகையால் தன்னை அஞ்ஞானத்தை எரிக்கும் ஞான வெட்டியான் என்றார் . மேலும் தனது நூலுக்கும் இந்த பெயரை சூட்டினார் .. .
. பறையன் என்று இகழ்ந்த , வேதியர்கள் மற்றும் சாஸ்திரிகள் . வணங்கும் அல்லது அடைய முடியாத பல விருதுகளை பெற்றார் ஆகையால் அவர் தன்னை அவர்களை விட அறிவில் உயர் குலத்தவர் என்றார்.

தான் எந்த ஒரு சாதிய சமுதாய குலத்தை சார்ந்தவன் இல்லை என்றார். தான் சுக்கிலத்தில் பிறந்து சுரோநிதத்தால் உருவாகும் கருப்பையில் பிறக்கும் உயிர்களின் குலம் என்றார்.

அதுமட்டும் இல்லை சமுதாயத்தில் தனது குலத்தை சொல்பவர்கள் தனது தந்தை ஆகிய ஆணின் குலத்தை சொல்லுவார்கள் . வசிஸ்டர்குலம் , விசுவாமித்திரர் குலம் , காசிபர் குலம் ஆகியவை இன்றும் நடைமுறையில் உள்ளது ஆனால் திருவள்ளுவர் தன்னை “ ஔவ்வையார் , அருந்ததி , சரஸ்வதி , வாலாம்பிகை குலம்” என்ற பெண்களின் குலம் என்று சொல்லி உள்ளார் . . அறிவில் சிறந்தவர்கள் பெண்களிலும் உண்டு அத்தகைய பெண்களை தனது முன்னோராக சொல்லியுள்ளார் . இது சித்தர்கள் மரபு.

சாதி என்பது அரசாங்கத்தால் ஒருவரை அடையாளம் காண சொல்லப்பட்ட குறியீடு . வேதங்களிலோ அல்லது ஆகமங்களிலோ சொல்லப்படவில்லை என்று சொல்லியுள்ளார் ..
. (ஞானவெட்டியான் பாடல்21, 26, 31 ,36,37 ,38,575, 643 , 680, 685 )

வள்ளுவர் தொழில் மற்றும் வாழ்கை முறை

திருக்குறளை மதுரையில் பாண்டியர் அவையில் அரங்கேற்றினார் அதனால் சங்க புலவராக அங்கீகாரம் பெற்றார். பாண்டியர்களின் காலத்தில், மதுரையில், அரசருக்கு ஆலோசனைகள் சொன்னவர்கள் தமிழ் சங்க புலவர்கள். அவர்கள் அமரும் நவரத்தின சங்க பலகையில்,. சங்க புலவர்களுள் ஒருவராக அமர்ந்தவர்.

வேதியர்களும் சாஸ்திரிகளும் அடைய முடியாத பல விருதுகள் பெற்றவர் .
வாசியோகம் மூலமாகவும் , மாது கற்ப குகை என்ற குளிகை என்ற வழலை என்ற முப்பூ மூலமாகவும் , குருவை பூஜித்தது மூலமாகவும் குண்டலி மற்றும் வாலாம்பிகை மூலமாகவும் வைத்தியம் கற்றார் 
. அவிழ்தங்கள் , கிருதங்கள் , லேகியங்கள் , , திராவகங்கள் , ஜெயநீர்கள் , பஷ்பங்கள் , சுண்ணங்கள் , செந்தூரங்கள் செய்தார் . அவற்றை கொண்டு தீராத கன்மம் என்ற மரபணு சார்ந்த நோய்களையும் தீர்த்து பொருள் ஈட்டினார் . மேலும் அரசுக்கு தனது வருமானத்தில் ஒன்றின் கீழ் ஆறுபாகம் ( 16.66%) வரி செலுத்தினார்.

திருவள்ளுவர் பூணூல் அணிந்துகொண்டார் அரசர்களுக்கு சமமாக வென்கொற்ற குடை கீழ் வென் சாமரம் வீச பொன்விசிறி வீச , மரகத குண்டலம் அணிந்து அரசரை போல் வாழ்ந்தார் . ராமானுஜருக்கு முன்பாக பூணூல் அணிந்தவர்மட்டும் இல்லை அதற்க்கு அங்கிகாரம் பெற்றவர் . எனவே பூணூல் என்பது பிறப்பால் ஒரு இனத்தவரையோ அல்லது குலத்தவரையோ அடையாளப்படுத்துவதில்லை. அறிவு மிக்க அறவோர்கள் அணிவது . இத்தகைய திருவள்ளுவர் படம் வரைய வேண்டும் . எனவே வீதிகளில் அழுக்கு பிடித்து கிடப்பவர்கள், கோவில் வாசல்களில் பிச்சை எடுப்பவர்கள், அல்லது குகைகளில் வசிப்பவர்கள் மட்டும் தான் சித்தர்கள் எனகருதுவது தவறு .

திருவள்ளுவர் மனைவி வாசுகி பற்றி

அடிசிற் கினியாளே யன் புடயாளே
பதி சொற் றவறாத பாவாய்- யடிவருடி
பின் தூங்கி முன்னெழுந்த பேதையே போதியே
வென்றூங்கு மென் கண் ணிரா


திருவள்ளுவர் தனது இணையாகிய வாசுகியை இழந்த போது பாடியதாக சொல்லப்படுகிறது . உயர்ந்த உணவுகளை கணவரின் விருப்பம்போல் சமைத்து அன்பாக பரிமாறி இனியவளாக வாழ்ந்தவர் வாசுகி . இனிமையான அன்பு கொண்டவர் . கணவன் உறங்க கால்களை அமுக்கி பணி செய்து றங்கவைத்தபின் தான் உறங்குவார் . கணவர் விழித்து எழும் முன் கண்விழித்து எழுந்துவிடுவார் . கணவன் சொல்லியதை தவறாது செய்பவர் . பல நேரங்களில் அவருக்கு ஆலோசணைகள் சொல்லி போதனை செய்துள்ளார் . வசுகியாரின் துணையால் வள்ளுவர் பெரும் சாதனைகள் செய்தார் . இத்தகைய மனைவியை இழந்த என்னுடைய கண்கள் என்று தூங்கும் . என் கண்கள் இனி இருக்காது ( நான் மரணிப்பேன் ).. 
வாசுகி அம்மையாரின் சித்த தன்மை பற்றி வேறு பதிவில் பார்ப்போம்.

முடிவு
ஆரம்ப காலங்களில் ஏழ்மை யான பின்தங்கிய சூழ்நிலையில் வாழ்ந்தவர் திருவள்ளுவர் . சித்தர் கல்வி கற்று வாசியோகம் செய்து , சித்தர் ஆனார். முப்பூ மற்றும் அறிய மருந்துகள் செய்து , தீர்க்க முடியாத நோய்கள் தீர்த்து , பொருள் ஈட்டினார் . பெருதர்கறிய மனைவி வாசுகியை பெற்று அறவழியில் இல்லறம் நடத்தினார்.வாசுகியாரின் பராமரிப்பால் காலத்தால் அழிக்க முடியாத நூல்கள் செய்து காலத்தை வென்றார் ..மதுரையில் சங்கபலகையில் அமர்ந்து அரசனை போல் வாழ்ந்தார் ... தனது சித்த சக்தியால் அரூப நிலை அடைந்தார்.