திருவள்ளுவர்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு

இந்த வரிகள் இன்று உண்மை ஆகி உள்ளது. இந்தியா மற்றும் பிறநாடுகளில் வள்ளுவன் எழுதிய திருக்குறள் போற்றப்படுகிறது. காரணம் மனிதர்கள் அறநெறியில் வாழும் முறையை இனம் மொழி சாதி , மதம் வேறுபாடுக்கு அப்பாற்பட்டு, மனித இனம் முழுவதற்கும் சொல்லி உள்ளார் . இது அஷ்டாங்க யோகம் என்ற வாசியோகத்தில் எட்டு அங்கங்களில் முதல் இரண்டு அங்கங்களான இயம, நியமம் ஆகும் . அஷ்டாங்க யோகத்தில் பிற ஆறு அங்கங்களை ஞான வெட்டியான் என்ற சித்தர் கல்வி நூலிலும் மற்றும் நூல்களிலும், சித்தர் திருவள்ளுவர் சொல்லி உள்ளார் .


திருவள்ளுவர் யார்?  இவர் சித்தரா ?  இவர் குரு யார் ?  இவர் காலம் எது ?  இவர் ஒருவரா பலரா ? இது போன்ற பல கேள்விகளுக்கு பலவித பதில்கள் ஊகங்கள் சொல்லப்பட்டு உள்ளது .

இந்த கேள்விகளுக்கு திருவள்ளுவர் சொன்ன பதில்களும் . , பிற சித்தர்கள் சொன்ன பதில்களையும் பார்ப்போம் . . 

அதற்கு முன் இவர் பற்றி சொல்லப்படும் செவிவழி செய்திகளை சொல்கிறேன்.

வள்ளுவரின் முன்னோர்கள்

பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் உருவான பரம்பரையில் வந்த பகவான் என்பவருக்கும் பிராமண குலத்தை சேர்ந்த பெண் ஆதி என்பவருக்கும் திருவள்ளுவர் மகனாக தோன்றினார் .
ஆதி பிராமண குலத்தை சேர்ந்தவராயினும் அவர் பறையர் ஒருவரால் வளர்க்கப்பட்டார். பறையாரால் வளர்கபட்டபோது ஆதியை சந்தித்த பகவான் அவர் தாழ்ந்த இனத்தவர் என்று தலையில் அடித்து காயப்படுத்தி துரத்தி விட்டார் . அதன் பின் பகவான் காசி சென்றுவிட்டார்.

பின்பு. நீதி அய்யர் என்ற சத்திர காப்பாரால் ஆதி வளர்க்க பட்டார் . மிகுந்த அழகும் அறிவும் பெற்ற பெண்ணாக இருந்தார் ஆதி

காசியில் இருந்து திரும்பிய பகவான் நீதி அய்யர் சத்திரத்தில் அழகிய ஆதியை சந்தித்தார் . ஆதிமீது அன்பு கொண்ட பகவான், ஆதியை மனம் முடித்தார்.

திருமண சடங்கின் போது ஆதியின் தலையில் இருந்த வடுவை பார்த் பகவான் , தான் முன்பு தலையில் அடித்த பெண் என்று அறிந்தார் .எனவே , ஆதியை பறையர் குல பெண்ணாகவே கருதி ஆதியுடன் வாழ மறுத்தார் . ஆதியின் அன்பால் சமாதானம் அடைந்த பகவான் ஆதியிடம் “நமக்கு பிறக்கும் குழந்தைகளை ஆங்காங்கே விட்டுவிடவேண்டும்” என்ற நிபந்தனையுடன் வாழ தொடங்கினார்.

அவர்களுக்கு ஔவ்வையார், அதியமான் மற்றும் சில குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் மயிலாப்பூரில் இருந்த போது திருவள்ளுவர் பிறந்தார். அந்த குழந்தையை அங்கேயே விட்டு சென்றனர் . இது ஆதாரம் அற்றது என்பார்கள்.

சிறுவயதில்இவர் வெட்டியான் வேலைகளில் ஒன்றாகிய பிணம் எரிக்கும் புதைக்கும் வேலை செய்ததாக சொல்வதுண்டு. எனவே இவர் பறையர் இனத்தவர் என்பார்கள் சிலர் இவரை வேளாளர் வீட்டில் வளர்ந்தார் என்பர் . வேறு சிலர் இவர் வள்ளுவர் இனத்தில் உதித்தவர் என்பார்கள் . வேறு சிலர் இவர் நெசவு செய்யும் குலத்தில் பிறந்தவர் என்பர் . சிலர் இவரை நாயனார் குளத்தை உடையவர் என்பார்கள் . சிலர் அரசராக பிறந்தார் என்பர் . இவர் சமண மதத்தவர் என்பார்கள் சிலர் புத்தபிட்சு என்பர் இந்த சர்சைகளை ஒதுக்கிவிடுவோம் . . அவரின் ஞான கல்வியை போற்றுவோம் கடைபிடிப்போம்.


வள்ளுவர் திருமணம் - திருக்குறள் அரங்கேற்றம்

பகவான் விட்டுசென்ற குழந்தையை வெட்டியான் வேலை செய்பவர் கண்டு எடுத்து வளர்த்தார் என்பார்கள் , சில இவர் பறையர் குடிலில் பிறந்தார் என்பார்கள்
சிறுவயதில் . கல்விகற்க பல இடங்கள் சென்றார் . சித்தர்கல்வி கற்று பெரும் ஆற்றல் பெற்றார் .
அப்பொழுது காவேரி பாக்கம் என்ற ஊரில் மார்கசகாயம் என்ற பெரும் நிலகிழாரின் வயல்கள் முழுவதும் ஒரு வேதாளம் நாசம் செய்தது மட்டும் இல்லாது பல உயிர்களையும் அழித்தது . இந்த துன்பத்தை திருவள்ளுவரிடம் சென்று முறையிட்டார் . அந்த வேதாளத்தை அடக்கி மக்களுக்கு பாது காப்பு தந்தார் திருவள்ளுவர் . இதனால் கவரப்பட்ட மார்கசகாயம் தனது மகளான வாசுகியை திருவள்ளுவருக்கு மனம் முடித்து கொடுத்தார்.

திருக்குறள் அரங்கேற்றம்

பின்பு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் . அப்பொழுது இருந்த மதுரை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய ஔவ்வையார் உதவியை நாடினார் . மதுரை தமிழ் சங்கத்தில் திருக்குறளை பாடி காண்பித்தார் . இதை கேட்ட புலவர்கள் “திருக்குறளில் சிவனை பற்றியோ , பாண்டிய அரசர் பற்றியோ வீடு பேறு பற்றியோ சொல்ல படவில்லை “ . எனவே ஏற்க முடியாது என்று மறுத்தனர் ..
இதை கேட்ட ஔவ்வையார் “இந்நூலின் பாயிரம் எல்லாம் வல்ல இறைவனை துதிக்கிறது . பாண்டிய நாட்டிற்கு மட்டும் இல்லாது உலகம் முழுவதற்கும் உள்ள நாடுகளுக்கு சொல்ல பட்டது . உலகத்தில் உள்ள நாடுகளில் இருக்க வேண்டிய அமைப்பையும் , மன்னார்கள் இருக்க வேண்டிய தன்மையையும் இந்நூல் சொல்கிறது . எனவே பாண்டிய நாட்டிற்கு மட்டும் இல்லாது உலகம் முழுவதற்கும் உள்ள நாடுகளுக்கு சொல்ல பட்டது .இந்நூல் உலக மக்களுக்கு , உலக வாழ்க்கைக்கான நெறிமுறையை கூறுவதால் ,உலக நீதி நூலாக ஏற்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதை கேட்ட மன்னர் குழப்பம் அடைந்தார்.

“இந்த குழப்பத்தை தீர்க்க மதுரை மீனாக்ஷி அம்ம்மன் பொற தாமரை குளத்தில் உள்ள பலகையில் திருக்குறளை வைத்து குளத்துள் அனுப்புவோம் . அது திரும்பி வந்தால் அன்னை ஏற்று கொண்டதாக நூலை ஏற்ப்போம்” என்றார் மன்னர் .
அதன்படி திருக்குறள் பொற தாமரை பலகையில் வைக்கப்பட்டு பொற்தாமரை குளத்துள் அனுப்ப பட்டது . நூல் திரும்பி வந்து கரை சேர்ந்தது . அனைவரும் மகிழ்வுடன் நூல் அரங்கேறியதாக ஒப்புக்கொண்டனர் . திருவள்ளுவரை தமிழ் சங்க புலவராக ஏற்றனர் . ஆயினும் அவர்களுடன் சங்க பலகையில் அமர இடம் இல்லை என்று கூறினார்கள். 
இதைகேட்ட ஔவையார் “நூலை சங்க பலகையில் வைப்போம் அது இடம் கொடுத்தால் திருவள்ளுவர் சங்க புலவர்களுடன் அமரட்டும்” என்றார்.
அதன் படி திருக்குறள் சங்க பலகையில் வைக்க பட்டது. சங்க பலகை விரிவடைந்து திருவள்ளுவருக்கு இடம் கொடுத்தது .. அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் . திருக்குறளை புகழ்ந்து ஔவ்வையார்

“ அணுவை துளைத்து ஏழ கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்”எனறு பாடினார் 

பிற புலவர்களும் திருக்குறளை புகழ்ந்து பாடினார்கள் .இந்த பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவர் மாலை என்று பெயர் பெற்றது .

திரு வள்ளுவரின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகள்

திருவள்ளுவரின் தலைமை சீடர் ஏலேலோசிங்கர். இவர் பெரும் தனக்காரர் .. கப்பல் வியாபாரி . ஒருமுறை இவரின் கப்பல் தரை தட்டிவிட்டது . பல முயற்சிகள் செய்தும் கப்பலை கடலுக்குள் தள்ள முடியவில்லை . இதனால் ஏலேலோசிங்கருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது . வள்ளுவரிடம் இதை பற்றி சொல்லி கப்பலை மீட்டுத்தர வேண்டினார் . வள்ளுவர் , தரை தட்டிய கப்பலிடம் அழைத்து செல்லப்பட்டார். தரை தட்டிய கப்பலை தனி ஒருவராக கடலுக்குள் தள்ளிவிட்டு , கப்பலை இயங்க செய்தார் . அனைவரும் ஆச்சரியபட்டனர்.

திருவள்ளுவர் வாழ்கை துணைவியர் வாசுகி . இருவரும் உன்னத இல்லறம் நடத்தினர் . வாசுகியார் கற்புடமையை தவமாக கொண்டு சித்தி பெற்றவர். ஒருநாள் வாசுகி குடத்தை கயரில்கட்டி கிணற்றிலே கையால் நீர் இறைத்து கொண்டு இருந்தார். அப்பொழுது திருவள்ளுவர் அவரை வரும்படி அழைத்தார் . குடம் கிணறின் ஆழத்தில் பாதியில் இருந்தது. அதை அப்படியே விட்டுவிட்டு வள்ளுவரிடம் வந்து அவர் சொன்ன பணிகளை செய்து முடித்தார் .
பின்பு கிணற்றுக்கு சென்றார் . அந்த நீர்க்குடம் அப்படியே பாதி வழியில் நின்றது .. அதை மீண்டும் மேலே தூக்கி நீர் இறைத்தார் .

இன்றும் திருமணமான தம்பதியினரை வாழ்த்தும் போது
“ வள்ளுவரும் வாசுகியும் போல் வாழ்க “ என்று வாழ்த்துவதுண்டு


“வாசுகியார் போல் வாழந்து ஞானம் பெறுக” என சித்தர் போகர் தனது மாணவர் கொங்கணருக்கு அறிவுரை செய்தார் . இதை பின்பு வேறுபதிவில் விரிவாக பார்போம்.
வாசுகியார் மரணம் எய்தியபின் வள்ளுவர் தனது பரு உடலை துறக்க விரும்பினார் . தனது சீடர் ஏலேலோ சிங்கரை அழைத்து “ நான் சமாதி நிலை ஆனபின் , எனது தேகத்தை ஒரு கயிற்றால் கட்டி தரையில் கிடத்தி இழுத்து செல்லவேண்டும் பின்பு சதை நரம்பு ஆகியவை பிய்ந்து போனபின், மீதம் உள்ள உடல் பகுதியை அப்படியே விட்டுவிடவேண்டும் “என்று ஆணை யிட்டார்.
ஆயினும் ஏலேலோ சிங்கருக்கு மனம் வராமல் அவரை ஒரு தங்கபேழையில் கிடத்தி அடக்கம் செய்ய முடற்சித்தார் .. அப்பொழுது வள்ளுவர் கண் திறந்து தனது மாணவரிடம் “நான் சொல்லியபடி செய் இல்லையேல் குருசாபம் பெறுவாய் “என்றார்
எனவே வள்ளுவர் திருமேனியை ஒரு கயிரால் கட்டி ஒரு குதிரையில் பிணைத்து இழுத்து சென்றார் . அதனால் சிதறிய தசைகளை உண்ட பறவைகள் பொண் உடம்பு பெற்றன .
எஞ்சிய பகுதி இருந்த இடத்தில் அவருக்கு கோவில் அமைக்கபட்டது.
இச்செய்தியை சிலர் மறுப்பார்கள் . திருவள்ளுவர் மயிலாப்பூரில் சமாதி அடைந்தார் என்பார்கள் . இன்றும் மயிலாபூரிலும் கேரளாவிலும் பிற இடங்களிலும் இவருக்கு கோவில் உண்டு .

திருவள்ளுவர்பற்றி சித்தர்கள் பதிவு செய்த உண்மைகள் ..பற்றி திருவள்ளுவர் – சித்தர் பகுதி 2 இல் சொல்கிறேன்.