திருமூலர் பிரபஞ்சப் பயண அனுபவம் 5

சித்தர்கள் பிரபஞ்சப் பயணம் தொடர்ச்சி 

திருமூலர் பிரபஞ்ச பயணத்தை தொடர்கிறார் 

இன்றைய ஸ்டார் வார் (Start Wars) திரைப்படங்களில் வருவது போன்று உண்மையில் திருமூலர் செய்த பிரபஞ்ச விரட்டை இப்பதிவில் காண்போம் .
சென்ற பதிவில் வேற்று உலக சித்தர்களிடம் திருமூலர் ,” சொரூப குளிகை செய்முறையும் அதன் பயனும் நந்தி என்ற சிவன் சொன்னார்அதன் உதவியால் அண்டங்கள் சுற்றி வருகிறேன் . இதுவே 1 7 ஆம் பகுதியில் சிவன் மறைத்தது .” என்றார் .மேலும் நடந்ததை சொல்கிறார் திருமூலர்.

ஒன்றே குளிகையை உத்தமாய் நான் பார்த்து
கண்டு கழிக்க கரத்திலே தாராயோ
பண்டே குளிகையை பார்த்து நீ சோபித்தால்
இன்டே ஏன் அண்டம் ஏரவும் கூடாதே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 379 

கூடாதே போகக் குளிகை எடுப்பாரோ
ஆடோ மாடோ நான் அறிவற்ற சென்மமோ 
நாடங் குளிகையை நானிட்டு தாறேன்காண்
தேடாங் குளிகையை சித்தியை பார்த்தென்றான்

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 380

என்றவன் வாயில் இட்டேன் குளிகையை 
இன்றிய பூரண மார்க்கத்தில் போய்விட்டார் 
நன்றே அருந்து அளாவினேன் காணாதே 
தாண்டி கமலினி தன்னால் தொடர்ந்தேனே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 
381 

தொடர்ந்து அண்டந்தோறும் துரத்தியே யான் செல்லிற்
கடந்தானே பேரண்ட ங்களை ஆயிரத்தெட்டும 
நடந்தானே புவனமும் நானும் பின் சென்றிட 
வடந்தான் பதந்தாண்டி அப்பால் பிடித்தேனே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 382

பிடிக்கில் பிரிந்தான் பெரிய வெளியுடே .
அடக்கிய முப்பாழும் அப்புறம் தாண்டினான் 
நடக்கும் மனோன்மணி நாயகி வாசலில் 
இடுக்கி பிடிக்கையில் ஏகினான் சித்தனே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 383

ஏகினான் நிஷ்கள ஏகவெளியிலே
ஆகினான் மட்டும் அவன்பின்னே சுத்தினேன் 
மாதி இளைதான் அவன்மைகை சிக்கினான் 
பாகியா வென்கை பறித்தேன் குளிகையே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 384

பரிப்பாயோ நீயென்று பாங்காக தர்கித்தான் 
செறிப்பாயே நானேறி திருந்தி வரும்முன்னே 
கறிபான கள்ளனோ காக்கனோ போக்கனோ 
குறிப்பாய் தொடர்ந்து குறிசொல்வீர் என்றானே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 385

குறியேது உனக்கு குறிகெட்ட சித்தரநீர்
பறியாச்சோ அண்டத்தில் பார்த்தோர் சிரியாரோ
அரறிவாட்சி இல்லாத அறிவிதுகாண் யான்தந்தேன் 
நெறியாச்சிது என்று நிமிஷத்தில் வந்தேனே 

திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 386

பொருள் 
அந்த அண்டத்தில் இருந்த ஒரு சித்தர் என்னிடம் (திருமூலரிடம்)
நீங்கள் சொன்ன குளிகையை தொட்டுபார்த்து மகிழ என் கையில் தர வேண்டுகிறேன் என்றார்
அதற்க்கு நான்நீங்கள் பார்கிறேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டு ஓடிவிட்டால் , நான் எனது அண்டத்திற்கு செல்ல முடியாதுஎன்றேன்

அந்த சித்தர்நீங்கள் உங்கள் அண்டம் செல்லா முடியாமல் செய்வதற்காக குளிகையை கேட்கவில்லை . அத்தகைய தவறு செய்யும் ஆடு அல்லது மாடு போன்ற மிருகம் நான் இல்லை .. உங்கள் குளிகையின் சித்தி என்ற சக்தியை நான் சோதித்து பார்த்துவிட்டு நான் தருகிறேன்என்றார் .
அவன் பேசியதை கேட்டு சொருப குளிகையை அவன் வாயில் இட்டேன் .
பூரண மார்க்கம் என்ற ஒளிஉடம்பு பெற்று சென்றுவிட்டார் . அவர் திரும்பி வராதது கண்டு அங்கு இருந்தவர்களிடம் கேட்டேன் . அதன்பின் அவர் குளிகையை திருடி சென்றுவிட்டார் என்று அறிந்தேன் . எனவே கமலினி குளிகையை வாயில் இட்டு அந்த திருட்டு சித்தரை தொடர்ந்து துரத்தி சென்றேன்
.

பல அண்டங்களை கடந்து துரத்தினேன் . பேரண்டங்கள் ஆயிரத்து எட்டு அண்டங்களை கடந்து சென்றான் . அந்த பேரன்டங்களில் உள்ள புவனமாகிய பல உலகங்களையும் கடந்து சென்றான் . நானும் பின் தொடர்ந்து துரத்தி சென்றேன் . நான் அவன் அருகில் சென்றதும் நாநிணான் அவனது தப்பிக்கும் முயற்ச்சியை முறியடித்து பிடித்துவிட்டேன் ..
ஆயினும் என்னிடம் இருந்து தப்பித்து என்னை பிரிந்து மீண்டும் பெரிய பரவெளியில் ஓடினான் . அந்தத பெருவெளியில் உள்ள உள்பாழ உள்வெளிபாழ வெளிபாழ் என்கிற முப்பாழ் வெளியை தாண்டி ஓடினான் . நான் எனது சுழிமுனையில் உள்ள மனோன்மணி தாய் உதவியால் நெற்றிக்கண் திறந்து அவனை இடுக்கி பிடித்தேன். ஆயினும் மீண்டும் ஓடினான் . அண்டங்களோ புவனங்க்களோ இல்லாத ஏகவெளியது. மனோன்மநணி தாயின் வாலை என்ற ஒளி சக்தியில் அவன் கலைப்புற்றான். சிக்கினான் வலுக்கட்டாயமாக அவன் வாயில் இருந்த குளிகையை பிடுங்கினேன். 
என்னிடம் உள்ள குளிகையை எப்படி நீ பிடுங்கமுடியும்என்று தர்க்கம் செய்தான் . 
நான்என்னுடைய குளிகையை திருடி செரிக்க முடியாதுஎன கூறி திரும்பிவர முயறேன் 
அப்பொழுது அவன்நான் கொடிய கள்ளன் ஏமாறறுகாரன் தவறான போக்கு உடையவன் . ஆயினும் என்னை மன்னித்து எனது அண்டத்திற்கு செல்ல உதவுங்கள்
. ல்லை என்றால் அழிந்து விடுவேன்என்று ஏமாற்று பேசினான் .அதற்குநான்எனது அறிவற்ற செயலால் உனக்கு குளிகை கொடுத்தேன் அதனால் நான் துன்பம் அடைந்தேன். நீ நற்குறி அடையாளம்கூட அற்ற . தீயவன் . உனக்கு உதவினால் அண்டததில் உள்ள பிற சித்தர்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள் .. நீ தண்டனை பெறவேண்டும். அதுவே அறநெறி என்று சொல்லிவிட்டு மறுநிமிடம் அங்கிருந்து வந்துவிட்டேன் . 

இந்தப்பகுதியில் நாம் அறிவது . !. 

  1. பிரபஞ்சத்தில் அண்டங்களோ புவனங்க்களோ இல்லாத பெரு வெளி உண்டு . அதன் ஒரு பகுதிக்கு முப்பாழ் என்று பெயர் . 
  2. இன்றைய ஒரு ராக்கெட்டை வேறு ஒரு ராக்கெட் துரத்தி பிடித்து அழிக்கும் தன்மை கொண்டது . அது போன்று தொழில் நுட்பம் சித்தர்கள் பயன்படுத்தினர் ..சொரூப குளிகையை கமலினி குளிகை துரத்தி பிடிக்கும் தன்மை கொண்டது . 
  3. அண்டவெளியிலும் மனோன்மணிதாய் என்ற வாலை சக்தி , வேற்று கிரக தீயவர்களின் சக்தியை ஒடுக்கும் . 
  4. பிற அண்டங்களிலும் திருடர்கள் , மோசடி செய்பவர் , ஏமாற்றுவோர் , நம்பிக்கை துரோகிகள் உண்டு. 
  5. அறிவு இல்லாமல் அவர்களை நம்பினால் பெரும் துயர் ஏற்படும் . 
  6. அத்தகையோரை மன்னிக்காமல் தண்டனை தருவதே அறச் செயல்