திருமூலர் பிரபஞ்சப் பயண அனுபவம் 4

சித்தர்கள் பிரபஞ்சப் பயணம் தொடர்ச்சி 

திருமூலர் பிரபஞ்ச பயணத்தை தொடர்கிறார் 


சென்றபதிவில் திருமூலர் சிவனின் நூலை குறுக்கி எழுதியதை வேற்றுகிரக சித்தர்கழுக்கு ( அறிவியலார்க்கு) சொன்னார் . அதை சரிபார்க்க சொன்னார். . இந்தபகுதியில் பிற அண்டங்களில் அவர் பெற்ற அனுபவத்தை பார்ப்போம் .
வாருங்காண் என்று வளமாய் மருவண்டம்
கூருங்காண் ஓடி கொடுந்தீயால் வேகுற்று
தாருங்காண் தப்பி தனியண்டம் விட்டுநான்
பாருங்காண் பாரென்றே பாரீர் அடுக்கொன்றே

திரு மூலர் கருக்க்கிடை வைத்தியம் பாடல் 373 

அடுக்கைக கடந்து அதுமேலே தான் தோற்ற
ஒடுக்கியே பாயில் உலாஉறு சித்தர்கள் 
தடுக்கிய மேனிதான்தங்கமும் ஒவ்வாது 
மடுகியே பார்த்தென்னை வாவென்றார் சித்தரே
 
திரு மூலர் கருக்க்கிடை வைத்தியம் பாடல் 374

சித்தரே எவ்விடம் சேர்ந்து இருப்பது 
பத்தித்த சித்தாலே பாய்தீரோ அண்டங்கள் 
முத்திக்கும் புத்திக்கும் முன்காய சித்திக்கும் 
எத்திக்கும் நூல் உமக்கேது என்றாரே

திரு மூலர் கருக்க்கிடை வைத்தியம் பாடல் 375

என்றநல சித்தர்கள் எய்திய நூல் கேளு
பண்டசிவன் சொல் பராபரி என்தாய்க்கு
கண்டே கடந்தேன் கவனித்தேன் இவ்வண்டம் 
உண்டே பதினேழறை எல்லாம் பார்த்தேனே

திரு மூலர் கருக்க்கிடை வைத்தியம் பாடல் 376

பார்க்க முறைதான் பதினாறல்லோ நூலில் 
ஏற்க ஒன்றேது என்னையா சொலஎன்றார்
சேர்கவே பாருங்கள் சேர்ஏழு லட்சமும்
ஆர்க்கவே பார்த்தோம் அதிலொன்றை காணோமே
 
திரு மூலர் கருக்க்கிடை வைத்தியம் பாடல் 377

காணாப் பொருளொன்று கடந்த சொரூபம்
வீனார்அவர் கூவி.வெளியாய் விடாது
தோனாப்பொருள் ஒன்று தோன்றும் சொரூபம் தான் 
பூநாக நந்தி புகழ்ந்த முறையொன்றே
 
திரு மூலர் கருக்க்கிடை வைத்தியம் பாடல் 378

பொருள்

அந்த அண்டத்தை தாண்டி மறு அண்டம் சென்றேன் . அந்தண்டம் நெறுப்பு மயமாய் எரிந்து கொண்டு இருந்தது . அதன் கொடிய தீயின் வெப்பத்தில் வெந்தேன். அங்கிருந்து தப்பி பிரபஞ்சத்தின் மறு அடுககுக்குள் நுழைந்தேன்

அந்த அடுக்கில் இருந்தஅண்டம் பாய்போல் தட்டையாக இருந்தது . அதில் சித்தர்கள் உலா சென்றுகொண்டு இருந்தார்கள். அவர்கள் உடல் தங்கத்தின் ஒளியைவிட பிரகாசமாக இருந்தது . அந்த சித்தர்கள் என்னை பார்த்து நிறுத்தி வா என்று அழைத்தார்கள்
என்னிடம்நீங்கள் யார் எங்கு இருந்து வருகிறீர்கள் நீங்கள் பெற்ற சித்தி என்ற அறிவு முதிர்ச்சி நிலையால் பிரபஞ்சதில் உள்ள அண்டங்களை சுத்தி வருகிறீர்களா? காய சித்தி என்ற அழியா உடல் பெறவும் . உயர்ந்த புத்தி என்ற அறிவுபெறவும் , முக்க்திபெறவும் வழிகாட்டும் நூல் siddharyogam.comஉங்களுக்கு எப்படி கிடைத்தது .” என்று கேட்டனர்

நான் அதற்கு “. நான் இந்த அறிவுகள் பெற்ற நூல் கேழுங்கள் .. ஆதிசிவன் எனது தாயாகிய பராபரியிடம் சொன்னநூல் . அது பதினேழு அத்தியாயம் கொண்டது . அதை முழுவதுமாக கற்று தேறினேன் . அதன்படி பிரபஞ்சத்தில் புகுந்து சுற்றிவருகிறேன் . அப்பொழுது இந்த அண்டத்தை கண்டேன்என்று சொன்னேன்

அதற்கு அவர்கள்நீ சொன்ன நூலில். இந்தநூல் ஏழு லட்சம் பாடல் கொண்டது . அவைகள் முழுவதும் ஆராய்ந்து விட்டோம். இந்தநூலில் பதினாறு அத்தியாயம் மட்டுமே உள்ளது . . நீங்கள் சொன்ன பதினேழு என்ற ஒரு அத்தியாயம் காணவில்லை .”
நான்காணாத அத்தியாயம் ஒன்று உண்டு . அதை நந்தி என்ற சிவன் மறைப்பாக சொல்லி உள்ளான்.. இதை அறிவீனர்களுக்கு தெரியகூடாது என்று மறைத்தார் .. அவர் மறைத் பதினேழாவது அத்தியாயத்தில் சொல்லி இருப்பது .சொருப குளிகை செய்முறை . இந்தகுளிகையால் நான் பிரபஞ்சதுள் புகுந்தேன். பல அண்டங்களை கடந்து இங்கு வந்தேன்

இந்த பாடல்களில் நமக்கு கிடைக்கும் செய்தி
1 .
இந்த கோள்களில் அறிவு முதிர்ந்த ஒளியுடல் கொண்ட மனிதர்கள் வசிக்கிறார்கள் 
2..
அவர்களும் சிவ வழி பாடு செய்து சிவன் எழுதிய நூலை கற்றனர் . ஆயினும் .
அவர்களுக்கு பிரபஞ்ச பயணம் செய்ய பயன்படும் சொரூப குளிகை செய்முறை தெரியாது .

3 . திருமூலார் வேற்று கிரக மனிதர்களுடன் பேசிய மொழி சிவன் எழுதிய நூலின் மொழி . அந்த மொழி பல அண்டங்களிலும் அறியப்பட்டது .
4.
அண்டங்களில் பாய் போன்று தட்டையான உருவ அமைப்பு கொண்ட அண்டங்களும் உண்டு 
5
நெறுப்பு கோளங்களும் உண்டு .

பிரபஞ்ச பயணம் தொடரும்..... 

 திருமூலர் பிரபஞ்சப் பயண அனுபவம் 5