பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் முதன்மை சித்தர்கள் 18 பேரில் ஒருவராவார் .பாம்பாட்டி
சித்தர். கார்த்திகை மாதம் மிருகசீரிசம்
நட்சத்திரத்தில் பிறந்தவர்.

siddharyogam.com

கோயம்பத்தூர் அருகில் உள்ள மருதமலை ஸ்ரீ
சுப்பிரமணியர் திருக்கோவில் வளாகத்தில் மூலவர்க்கு சற்று தூரம் தள்ளி
கீழே படிக்கட்டில் இருந்து கீழே சென்றால் பாம்பாட்டி சித்தர் கோவில்
அமைந்துள்ளது . இந்த இடத்தை பாம்பாட்டி சித்தரின் குகை என்றும் ஜீவசமாதி
என்றும் கூறுவது ஆய்வுக்குரியது .


பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு . மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர்குகைக்கு வழி உள்ளதாகவும் அதன் வழியே பாம்பாட்டி தினம் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.


சர்ப்ப ரூபத்தில் சித்தர் நடமாடுவதாகவும் அந்த சர்ப்பத்திற்கு சில பக்தர்கள்
பால் இட்டு பாதுகாப்பதாகவும் அந்த சார்பத்தையே பாம்பாட்டி சித்தராக
வழிபடுவோரும் உண்டு. பாம்பாட்டி சித்தர் பாடல் , சித்தாரூடம் நூலை
எழுதியவராவார் .மனிதர்களின் மனதை பாம்பாக ஒப்பிட்டு பாடல்கள் புனைந்தவர். குண்டலினியோகம் , கூடு விட்டு கூடு பாயும் சித்தி பல அஷ்டமாசித்துக்கள் அறிந்தவர் .


இளமைக்காலம் :


பாம்பாட்டி சித்தர் இளமைக்காலத்தில் பாம்பு பிடிப்பது, விஷமெடுப்பது,
என பல காடுகளில் திரிந்து தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்க ஒரு முறை மருதமலை அடிவாரம் வந்த போது பாம்பாட்டி சித்தர் பற்றி அறிந்தவர்கள் மலை மேலே நவரத்தினம் மாணிக்க கல் உடைய நாகசர்ப்பம் உள்ளது எனவும் , இந்த பாம்பை பிடித்தால் கோடிஸ்வரனாகி விடலாம் என ஆசைகூற பாம்பாட்டி சித்தருக்கும் ஆசை ஏற்பட மருதமலே ஏறி மாணிக்கல் உடைய பாம்பை தேடினார்.


இரவு நிசியில் அடந்த காட்டில் பாம்புக்காக காத்திருந்த பாம்பாட்டி சித்தருக்கு திடிரென வெளிச்சத்துடன் தெய்வீக வாசனையுடன் ஒருவர் நிற்க..!


ஐயா தாங்கள் யார் என வேண்ட?

siddharyogam.com
பாம்பாட்டியாரே நான் சட்டை முனி சித்தர் தாங்கள் இந்த காட்டில் இருட்டில் எதை தேடுகிறீர்கள் எனக்கேட்க !அதற்கு பாம்பாட்டியாரோ ஐயா நான் நவரத்தின மாணிக்ககல் உடைய பாம்பை தேடி
வந்தேன் எனக்கூற சட்டை முனி சித்தர் சிரித்தார் .


´´ அதை விடவிலைமதிப்புடைய பாம்பு குண்டலினி சக்தி என்ற பெயரில் உன் உடலில் ஓடுகிறது, அதைக் கண்டுபிடித்தாயா?


அப்படியா ?


என்றவாறே வியந்து சட்டமுனியை நோக்கி


´´எமக்கு அதை காண அருள்வீரா´´


எனக்கேட்க , குண்டலினி ,கூடு விட்டு கூடுபாய்தல் ,பிராயணமப் பயிற்சிகளை பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி மறைந்தார் சட்டைமுனி சித்தர் .தன் கடுமையான பயிற்சியால் பணத்தை தேடுவதை விட்டொழிந்து உலகில் யோகங்களை தேடி வெற்றிகண்டார் .பல சித்துகளை அற்புதங்களை நிகழ்தினார் . இவரை வணங்குபவர்களுக்கு ராகு கேது மற்றும்
சர்ப்பதோஷ நிவர்த்தியாகும்


மருதமலையில் யோக சமாதியானார் பாம்பாட்டி சித்தர் மற்றும் 7000 கூற்றுப்படி இவர் ஜீவசமாதியானது மருதமலையே என உணர்த்துகிறது . ஒரே சித்தர் 8 இடங்கள் வரை ஜீவசமாதி ஆகமுடியும் என்ற கருத்திற்கேற்ப,,துவாரகை , விருத்தாச்சலம் (பழமலை) சங்கரன் கோவில் மேற்கு கோபுர வாசல்அருகில் புளியாங்குடி செல்லும் வழியில் உள்ள பாம்பாட்டி சித்தர் ஜீவசமாதிபீடம் ஆகிய இடங்களில் ஜீவசமாதியாகி உள்ளார் என்ற கருத்தை ஆய்வு செய்துஉணர வேண்டி உள்ளது .