முருகன்

பிரபஞ்ச தலைவன் . பரமகுரு ..எனது குரு . . தமிழ் தந்த பெருமான் . உலக மக்களுக்கு சித்தர் நெறி தந்த .முதல் தமிழ் சித்தன் ,.முதல் தமிழ் சங்க தலைவன் ,.உலக மக்களுக்கு வாழும் நெறி வகுத்தவன் .. அஷ்டாங்க யோகம் என்ற இறவாமை என்ற மாபெரும் நெறியை பிரபஞ்ச உயிர்களுக்கு கொடுத்தவன்.
நினைத்தவுடன் துயர் துடைக்கும் கருணை வள்ளல் 
எப்பெயர்களில் அழைத்தாலும் அப்பெயர்களில் இன்றும் அனைவர்க்கும் அருள் புரியும் இறைவன் முருகன்
அவனை அழைத்து அவன் அருள் பெறுக்!!!


Ponni Kanan :Raja Krishna Moorthy sir each and every post of yours touches my soul.I wish to learn more about the beautiful siddar. OmMuruga Potri

Raja Krishna Moorthy: Dear Ponni kannan , Lord murugan is worshiped as God in the Bakthimarkam . . it is Vethaantha .Tthe puranas and other literature about lord Muruga are Bakthi yoga or Bakthi path way to get Mukthi It based on experience and belief . Wast Literature are wrote about Lord Muruga and known by many Tamil speaking people.

Subramaiyar the Lord Muruga created many literature in siddhar science as the creator of Tamil siddhar markam or YogamarkkamOr Yoga pathway to get Mukthi . .It is called Siddhthanthawhich is based on proved scientific findings . The science Of immortality is the main theme in these literature which is called as Kaya siddhi .

Few of the literature are available today . Many of the Tamil siddhar literature are originated from the literature and teachings of lord Murugan. He taught them t.o his student Agathya who is one of the Saptha Rishes . Agaththiya is Guru to Pulathiyar , Theraiyar , Thiruvalluvar Vikkiramaathiththan and others . 
These siddhars are having their followers .. So it is called Lord Murugan paramparai . Agaththiya himself wrote seven lakhs verses in the Siddhar literature's. Similarly other siddhars wrote so many laksh of verses in Tamil language .

These Siddhars are immortal as Lord Muruga . . Lord Muruga is so graceful towards us so that he makes us as equivalent to him . By learning his science we can be immortal and can attain supernatural powers . It is called as Ashta masiddhi .
முருகன் மகிமை் குழுவில் பதியப்பட்டது

                                                        Murugan.part1
                                                       முருகன்

 முருகாபோற்றி!!!முருகாபோற்றி!!!முருகாபோற்றி!!!
 குருவாய்வருவாய்!!!அருள்வாய்குகணே!!!!
எனது குரு முருகன் அருள் ஆசியுடன் அவன் அனுமதி பெற்று இப்பதிவு செய்கிறேன்.
இன்றும் முருகனை குருவாய் வரவேண்டி மனது உருக பிரார்த்தித்தால் எனக்கு குருவாக வந்தது போல் உங்களுக்கும் குருவாக வந்து அருள்புரிவான் முருகன் .நம்புங்கள் நடத்தி காட்டுவான்.
 இதில்  சந்தேகம் பல வரும் . கேள்விகள் பல எழும். நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன? முருகன் கடவுளா ? சிவனின் மகனா? மனிதனா ?முப்பாட்டனாமுருகன் இன்றும் வருவான் என்றால் அவன் எப்படி இருக்கிறான் ?எப்படிவருவான்?
இவை அனைத்திற்கும் விடை கான்போம்..

முருகனை நாமறிந்தவிதங்கள்
முருகனை கடவுளாக காண்கிறார்கள் ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் . சிலர் அவதாரமாக பார்கிறார்கள்..செயர்கறிய செயல்களை செய்தவர்களை நமது கலாச்சாரம் கடவுளாகவும் அவதாரமாகவும் சித்தறிக்கிறது.. இவைகள் புராணங்ககளாகவும் ஆகம நூல்களாகவும் செய்யப்படுகிண்றன..இதன்படி கந்தபுராணாம் செய்யப்பட்டு அது பதினெட்டு புராணங்களில் ஒன்றாக உள்ளதுமுருகனை அவதாரமாக சொல்கிறது அய்யா வைகுண்டர் செய்த அகிலதிரட்டு ஆகம நூல்.. பல முருக பக்தர்கள் இந்த நூல்கலை ஆதாரமாக கொண்டு பலனூறு பக்தி இல்லக்கியங்கள் தமிழில் செய்துள்ளனர்
     சித்தர்கள் முருகனை முதல் தமிழ் சித்தனாக காண்கிறார்கள்.  தமிழ்  இலக்கணமான தொல்காப்பியத்திற்கு முந்தய  தமிழ் இலக்கண நூல் அகத்தியம். அதற்கும்முன்பு  அகத்தியர் செய்த சித்தர்வழி சித்தர் இலக்கி நூல்களிள் முருகனிடம் தமிழும், சித்தர்கல்வியும் கற்றதாக பல நூல்களிழும் சொல்லிஉள்ளார். அகத்தியர் முருகனை குருவாக கொண்டவர்  அகத்தியரும் பல சித்தர்களும் முருகனை குருவாக கொண்டு பல ஆயிரம் நூல்கள் செய்துள்ளனர்இதற்கும் முன்பு முருகன் பல சித்தர் இலக்கியங்கள் செய்துள்ளார். முருகன் செய்த பல நூல்களில் செய்த பல லட்சம் பாடல்களில் வெகு சிலபாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன. . முருகனை பற்றி பிற சித்தர்களும் குறிப்பாக சிவனுக்கும் முந்தய தமிழ் சித்தனான காகபுசுண்டர் கூறிய நூல்களிளும் பல செய்திகள் உள்ளன.
இந்த ஆதாரங்களை கொண்டும் இதன் அடிப்படையில் இன்றய அனுபவங்களை கொண்டும்  முருகனை புரிந்து கொள்வோம்.
 
கந்தபுராணம் சுருக்கம்
 முருகன் அவதாரம்.
சூரபத்மன் என்ற அசுரன் சிவ தவம் செய்து பலவரங்கள் பெற்றான் . ஐந்து தலை கடவுள்களால் மரணம் நேரகூடாது என்றும் பெண்னிடம் பிறந்தவர்களால் மரனம் ணேரக் கூடாது என்று வரம் பெற்றான் . . அதன் பின் இந்திர லோகத்தை வென்றான் . தேவர்களை சிறைபிடித்து அடிமை ஆக்கினான். இந்திரன் தப்பிசென்று சூரபத்மனை அழிக்க  சிவதவம் செய்தான் .    சிவன் , இந்திரனுடய தவத்திற்கு இறங்கி ஆறு தலையுடன் தோன்றினார்.. அவரின் ஒவ்வொரு தலையில் இருந்து ஒரு சுடர் தோன்றியது. .இந்த சுடர்களின் வீரியத்தால் சக்தியின் பாதங்களிலிருந்து வீரபாகு உட்பட ஒன்பது வீரர்கள் தோன்றினர் .  ஸக்தியால் சுடர்களின் வெப்பத்தையும் வீரியத்தையும் தாங்க முடியவில்லை. எனவே சிவன் ஆறுசுடர்களையும் வாயு பகவானிடம் ஒப்படைத்தார்   . வெப்பம் தாங்காத வாயு அக்கினி பகவானிடம் ஒப்படைத்தார்  அக்கினி பகவனும் வெப்பம் தாங்காமல் கங்கையிடம் ஒப்படைத்தார் .கங்கையும் வெப்பம் தாங்காமல் சரவண பொய்கையில் கொண்டு சேர்த்தார்.
     சரவண பொய்கையில் ஆறு குழந்தைகள் தோன்றின .. விஷ்னு ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்களிடம் கொடுத்து வளர்க சொன்னார் .  குழந்தைகள் சிறுவர்களாயினர். . வளர்ந்த சிறுவர்களை கண்ட சக்தி அறுவரையும் ஒன்றாக அனைத்தார். . இதனால் ஒரு உடல் ஆறுதலை பண்ணிரண்டு கைகளை கொண்ட முருகண் அவதாரம் செய்தார் .. சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணன் என்றும் , கார்திகை பெண்களால் வளர்க பட்டதால் கார்திகேயன் யென்றும் கங்க்கை கொண்டு சென்றதால் காங்கேயன் என்றும் பெயர் பெற்றார். .. பெண்னிடம் தோன்றாமல் ஆறு தலை கொண்ட அவதாரமாக முருகன் உருவானார்.

சுவாமிநாதன்……. சுவாமிமலை.
 முருகன் சிறுவனாக இருந்தபோது , பார்வதியிடம் பரமசிவன் ஓம் என்ற பிரணவத்திற்கு பொருள் சொன்னார் . இதை சிறுவன் முருகன் கேட்டுகொண்டு இருந்தார். ஒருநாள் பிரமா சிவனைகாணவந்தார். முருகன் அவரிடம்” நீங்கள்யார் என்ன செய்கிறீர்கள் “என்று கேட்டார் “நான் பிரம்மா படைத்தல் செய்கிறேன் என்றார். முருகன்  “அப்படிஎன்றால் “ஓம்” என்ற மந்திர பொருள் சொல்லுங்கள் “ என்றார் .பிரம்மா பொருள் தெரியாமல் விழித்தார். முருகன் பிரம்மாவை சிறையில் அடைத்து தாணே படைத்தல் செய்தார்.  சிவன் இதை அறிந்து முருகனிடம் “உனக்கு ஓம் பொருள் தெரியுமா” என்றார் . முருகன் சிவனுக்கு ஓம் என்பதன் பொருள் சொன்னார்..  எனவே முருகன் சிவனுக்கு குரு ஆனார் . ஆகையால் சிவகுரு , பரமகுரு என்ற பெயர் பெற்றார் .மரபுபடி குரு அப்பா மகன் சீடன் . எனவே தகப்பன் சாமி என்ற பெயரும் வந்தது.  அதனால் சுவாமிநாதன் என்று அழைக்கபட்டார். அதன் நினைவாக சுவாமி மலை என்ற படை வீடு அமைந்தது.
சூரசம்காரம்…திருசெந்தூர்.
தேவர்கள் சிவனிடம் சூரபத்மனிடம் இருந்து விடுதலை வேண்டி கதறினார்கள். முருகனைவைத்து சூரனை கொல்ல கெஞ்சினார்கள். முருகன் குமரபருவம். போரிட்டு அறியாதவன் . ஆகையால் சிவன் தயங்கினார். முருகன் சூரபத்மனிடம் போரிட தான் தயார் என்று  போர்செய்ய சிவன் அனுமதித்தார் . இதை அறிந்த சக்தி தனது அனத்து சக்தியையும் திரட்டி அதை வேலாக்கி முருகனிடம் சக்திவேலை கொடுத்தார் மேலும் வீரபாகு ஆகிய ஒன்பது வீரசகோதரர்களையும் முருகனுக்கு துனையாக போருக்கு அனுப்பினார்.. அதனால் சக்தி வேல் என்று அழைத்தனர்.  
      
        தேவர்களின் படை திரட்டபட்டது  படை தளபதியாக முருகன் பொறுப்பு ஏற்று போருக்கு புறப்பட்டு திருசெந்தூர் வந்து சேர்ந்தர் .மரபுப்படி தேவர்களை விடுவிக்க கோரி வீரபாகுவை தூதனாக  சூரபத்மனிடம் தூது அனுப்பினார்  சூர பத்மன் அதற்கு மறுத்ததுடன்  போரிட்டு தேவர்களை மீட்டுகொள்ள அரைகூவல் விடுத்தான். போர் துவங்கியது. முதலில் கிரவுஞ்சமலை என்ற அரணை தூலாக்கினார் முருகன்.  பத்மாசூரன் தம்பி கஜமுகனையும் அவன் படைகளையும் அழித்தார். தொடர்ந்து போரிடவந்த சிங்கமுக அசுரனையும் கொன்றார் . பத்மாசூரன் பெரும்படையுடன் போருக்கு வந்தான் .  சூரன் மீது சக்திவேலை செலுத்தினார்  . சக்திவேல் சூரனை இரனண்டாக பிளந்தது. . சூரன் வீழ்ந்தான் . ஆனால் முருகன் அவனை கொல்லவில்லை. இரண்டு துண்டில் ஒன்றை மயிலாக மாற்றிதனது வாகணமாக்கினார்   அதனால் மயில் வாகணன் என்ற பெயர் பெற்றார் .மற்றதை  சேவலாக்கி தனது கொடியாக்கினார் இதனால் சேவல் கொடியோன் என்றுஅழைப்பார்கள்.. பகைவர்க்கும் இறங்கும் கருணை மிக்கோன் முருகன்  . சூரனை வென்றதால் வெற்றி வேல் என்றும் ஜெயந்தி நாதர் என்றும் போற்ற படுகிறார்.

 தற்காலத்தில் நடந்த நிகழ்வு
 சில ஆண்டுகளுக்கு முன்பு திருசெந்தூர் முருகனுக்கு கானிகையாக சர்பித்த வைரவேல் மற்றும் செல்வங்களை கோவில் அறங்காவலர் திருடினார். இதை கண்டுபிடித்த கோவில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அவர் மீது புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த  அறங்காவலர் நிர்வாக அதிகாரியை கொலை செய்தார் . கோர்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  இதை பத்திரிக்கைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டன.  அறங்காவலர்  தனது காரில் கோர்டில் இருந்து வந்து கொண்டிருந்தார். மயில்வாகனன் என்ற லாரி காரில் மோதியது. விபத்தில் அறங்காவலர் இறந்து போனார் இச்சம்பவம் முருகணே தண்டித்தார் என அதிசயமாக பேசப்பட்டது .
முருகன் பற்றி 2ஆம் பாகம் தொடரும்   
 இறை அருள் பெறுக !!!தான் அவன் ஆகுக!!!  


  Murugan part 2
 முருகன் பாகம்2 
முருகாபோற்றி
!!!முருகாபோற்றி!!!முருகாபோற்றி!!!
 
குருவாய்வருவாய்!!!அருள்வாய்குகணே!!!!
எனது குரு முருகன் அருள் ஆசியுடன் அவன் அனுமதி பெற்று இப்பதிவு செய்கிறேன்.
இன்றும் முருகனை குருவாய் வரவேண்டி மனது உருக பிரார்த்தித்தால் எனக்கு குருவாக வந்தது போல் உங்களுக்கும் குருவாக வந்து அருள்புரிவான் . .நம்புங்கள் முருகன்  நடத்தி காட்டுவான்.
உண்மை செய்திகளின் அடிப்படையில் புராணங்கள் எழுதப்பட்டு பக்தி இலக்கியமாக பக்தர்களால் நம்பப்படுகிறது . சித்தர்கள் மூட பக்தியை சாடுபவர்கள் ஆகையால் புராணங்களை முழுமையாக ஏற்பது இல்லை. ..
 முருகனை பற்றி புராண செய்திகளை பதிவிட்டபின் சிதர்கள் மற்றும் முருகன் சொன்ன உண்மை செய்திகளை பதிவிடுவேன்.

திருபரம்குன்றம்….. தெய்வயானை திருமணம்.

        சென்ற முதல் பாகத்தில் முருகன் அவதாரம் ,ஒம் என்ற பிரணவ மந்திரம் பொருள் சொன்னது , சூரசம்காரம்  ஆகியவை பார்த்தோம் . பாலனாக பிரணவபொருள் சொன்னதால் பாலசுப்ரமனியன் என்பார்கள் அல்லது .  பாலமுருகன் எனபெயர்.. தேவர் படைக்கு பொறுப்பேற்றதால் தேவசேனாதிபதி என்றும் பெயர். குமரனாக இருந்து போர்செய்ததால் குமரவேல் ஆனார்.. திருசெந்தூரில் படை வீடு அமைத்து சூர சம்காரம் செய்ததால் செந்தில்வேல் செந்தூரான் என அழைக்கபட்டார். .
           சூரபத்மனால் சிறை வைக்கப்பட்ட தேவர்கள் விடுதலை செயய்யப்பட்டார்கள்.  இந்திரன் மீண்டும் பதவி பெற்றார். அதன் நன்றி கடனாக ,  சக்தி ஆண்டுவரும் சிவன் வீடான மதுரையில் உள்ள திருப்பரம் குன்றத்தில் இந்திரன் , தனது மகளாகிய தெய்வயாணையை முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.. எனவே தெய்வயானை மணாளன், பரம்குன்றன் என்று பெயர் உண்டானது . ஆறு படை வீடுகளில் ஒன்றாக திருப்பரம் குன்றம் விளங்குகிறது..

ஞானப்பழமும்…..பழநியும்
 கைலாயத்தில்  சிவன் பார்வதி கணபதி மற்றும் முருகன்  ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது நாரதர் முனிவர் அங்குவந்தார். நாரதர் ஒரு பழத்தை கொடுத்து ,  இது ஞானப்பழம் . இதை ஒருவருக்கு கொடுக்க வேண்டுகிறேன் என்றார்.  யார் உலகை முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு இப்பழம் பரிசாக கிடைக்கும் என போட்டியும் அறிவித்தார் .  . முருகனும் கணபதியும் போட்டியை ஏற்றனர் . . முருகன் மயில் மீது ஏறி உலகை சுற்றதொடங்கினார்.. கணபதி , சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து “அம்மை அப்பணே உலகம் ஆகையால் நான் உலகை சுற்றி முதலில் வந்துவிட்டேன் . பழத்தை தாருங்கள்” என்றார். எனவே சிவனும் பழத்தை கணபதிக்கு கொடுத்தார் .. உலகை சுற்றிவந்த முருகன் கணபதி கையில் பழம் இருப்பதை பார்த்தார் . “உலகை சுற்றாதவருக்கு பழம் எப்படி கொடுக்கலாம் “ என வாதிட்டார் . சிவன் “ ஞானம் இல்லாதவருக்கு ஞானப்பழ வேண்டும் . நீஞானம் பெற்று ஞானப்பழமாக இருக்கிறாய் . உனக்கு எதற்கு ஞானப்பழம் “ என சமாதானம் செய்தார் . இதை ஏற்காத முருகன் எனக்கு என்று தனி உலகு படைத்து நானே படைத்தல் காத்தல் அழித்தல், மறைத்தல் அருளல் ஆகிய ஐந்தொழில் செய்வேன் என கைலையை விட்டு வந்து பழநியில் அமர்ந்தார் . இதனால்  பழனி ஒரு படைவீடு ஆனது . சித்தர் போகர் முருகனுக்கு நவ பாசாணத்தால் சிலை செய்து பழநி மலையில் நிறுவி ஆராதணை செய்து பழநியில் சமாதி ஆனார்…இந்த நவபாசானண சிலைபற்றி பல கருத்துகள் தேடல்கள் இன்றும் உண்டு.
திருத்தணியும் வள்ளிதிருமணமும்  
 இரண்டு சகோதரிகள் முருகனே தாங்கள் இருவருக்கும் கணவனாக வர வேண்டும் என்று வேண்டி தவம் செய்தனர். அதில் ஒருவர் தெய்வயானையாகவும் மற்றவர் வள்ளியாகவும் பிறந்தனர். சகோதரிகளின் தவத்தை நிறைவு செய்ய முருகன் முடிவு செய்தார் . அதன் படி குரவர் அரசனின் மகளாக இருந்த வள்ளியை  வேடனாகவும் , விருத்தனாகவும் வடிவு கொண்டு சந்தித்தார் . கணபதியும் அதற்கு உதவினார். அதன்பின் நானே முருகன் என காட்சி தந்து வள்ளியை திருத்தணியில் திருமணம் செய்தார் . இதனால் திருத்தணி ஒரு படை வீடு ஆனது .
.
 பழமுதிர் சோலையும் தெய்வயானைமற்றும் வள்ளிஇணைந்தது.
 
 வள்ளி திருமனம் முடிந்தபின் வள்ளிக்கும் தெய்வயானக்கும் அவர்களின் தவத்தை நியைவு படுத்தி அதை நிறை வேற்றியதை தெரிவித்து இருவருடன் இணந்து அமர்ந்த  உலகிற்கு அருள் பாலிக்கும் இடம் பழமுதிர் சோலை.
 படை வீடு ஆனது   

ஆறு படை வீடுகள்
 1. சிவனுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொண்ணதால் தகப்பன் சாமியாகி சுவாமிமலை படை வீடு ஆனது.
2.சூரபத்மனை திருசெந்தூரில் வதம் செய்ததால்  திருசெந்தூர் படை வீடானது.
3.  திருப்பரம்குன்றத்தில் தெய்வயானையை மணம் செய்ததால் திறுப்பரம் குன்றம் படைவீடு ஆனது
4.ஞானபழ பிணக்கால் பழநி வந்து அமர்ந்ததால் பழநி படை வீடு ஆனது .
5 திருத்தணியில் வள்ளியை மணம் முடித்ததால் திருத்தணி படை வீடு ஆனது.
6 தெய்வயானை மற்றும் வள்ளியுடன் இணைந்து அமர்ந்து அருள் பாலிக்கும் இடமான பழமுதிர் சோலை  படை வீடு ஆனது .

  முருகனுக்கு ஆயிரக்கணக்கில் தணி கோவில்களும் அனைத்து கோவில்களிளும் தணி சன்னிதியும் முருகனுக்கு அமைக்கப்பட்டு இறைவனாக வணங்கபட்டு வருகிறார்  .
      முருகனை பாற்றி அய்யா வைகுண்டர் அகில திரட்டு என்ற ஆகமத்தில் சொல்லியதை முருகன் மூன்றாம் பகுதியில் பார்ப்போம்.
இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!!  

                                                 Murugan paakam 3.
                                             முருகன் பாகம் 3
முருகன் பாகம்3 
முருகாபோற்றி
!!!முருகாபோற்றி!!!முருகாபோற்றி!!!
 குருவாய்வருவாய்!!!அருள்வாய்குகணே!!!!
எனது குரு முருகன் அருள் ஆசியுடன் அவன் அனுமதி பெற்று இப்பதிவு செய்கிறேன்.
இன்றும் முருகனை குருவாய் வரவேண்டி மனது உருக பிரார்த்தித்தால் எனக்கு குருவாக வந்தது போல் உங்களுக்கும் குருவாக வந்து அருள்புரிவான் . .நம்புங்கள் முருகன்  நடத்தி காட்டுவான்.
உண்மை செய்திகளின் அடிப்படையில் புராணங்கள் எழுதப்பட்டு பக்தி இலக்கியமாக பக்தர்களால் நம்பப்படுகிறது . சித்தர்கள் மூட பக்தியை சாடுபவர்கள் ஆகையால் புராணங்களை முழுமையாக ஏற்பது இல்லை. ..
 முருகனை பற்றி புராண செய்திகளை பதிவிட்டபின் சிதர்கள் மற்றும் முருகன் சொன்ன உண்மை செய்திகளை பதிவிடுவேன்


  அகிலதிரட்டு அம்மானை   ஆகம நூலில் முருகன்

 மனிதனாக பிறந்து வாசிதவம் செய்து சாகா நிலை பெற்று அதன் பின்  சாயுச்ய முக்தி பெற்று இறைவனின் நிலை ஆடைந்தவர்கள் அரூபநிலை  சித்தர்கள்.இத்தகய அரூஉ நிலை சித்தர்கள் இன்றும் நமக்கு அருள் புரிகிறார்கள்.  வாசிதவம் செய்து அரூபனிலயில் இன்றும் அருள்புரிபவர் அய்யா வைகுண்டர். இதை குறிக்கும் வகையில் இன்றும் அய்யாவழி மக்கள் “அய்யா உண்டு “ என்ற சொல்லின் அய்யாவை உச்சரித்து அதன் பின்  சிவ விஷ்ணு  மந்திரமாக
“அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா’
 என்று ஓதுகிறார்கள் (ஆகிலதிரட்டு முதல் பாடல்).

அய்யா அவதாரம்
சைவ வைஷ்ணவ மோதல், சாதீய கொடுமைகள் உசத்தில் இருந்தநிலையில், இறைவன் உயர் சாதியில்தான் அவதரிப்பார் என்ற தீர்மாணத்தில் இருந்த காலகட்டமான   கிபி 1000த்தில், கன்யாகுமரி நாடு ,தாமரைகுளம் , சுவாமிதோப்பு    பதியில் முத்துகுட்டி என்று மனிதனாக அய்யா பிறந்தார். !008ஆம் ஆண்டுவரை  மனிதனாகஇருந்தார். வாசிதவம் செய்து சாகானிலை பெற்று திருசெந்தூர் கடலில் சலசமாதியில் மூன்று நாள் இருந்து விஞ்சை பெற்று வைகுண்டராக 1016ம் ஆண்டு மாசிமாதம் 27 ஆம் நாள்  வெள்ளி கிழமை வைகுண்டராக கலியை வெல்ல அய்யா அவதாரம் செய்தார் . நானே சிவன் விஷ்ணு பிரம்மா என்றார். சாதிகளில்லை. அனைவரும் தவம் செய்து உயர் நிலை பெற முடியும் என்றார். அன்றய ஆட்சியாளர்கள் இவரை பெரும் சித்ரவதை செய்து கொல்ல பார்த்தனர் . தனது தவவலிமையால் அவற்றை வென்றார். பல அறிய அற்புதங்கள் செய்தார் .மன்னும் தண்ணீரும் கொடுத்து கொடிய நோய்களை போக்கினார் வாலையை குருவாக கொண்டார் . ஆட்சியாளர்கள் அவறிடம் பணிந்தனர் .
. இன்றும் சுவாமி தோப்பு பதியில் பதம் என்ற நீரும் பூமியில் விளைந்த நாமமும் அடியவர்க்கு கொடுக்கபடுகிறது. கொடிய நோய் உள்ளவர்கள் பதியில் தங்கி மன்னும்,  நீரும், ஒரு நேரம் உப்பில்லா உண்வுஅருந்தி நோயை போக்குகிறார்கள்.பலரும் தவம் செய்து சித்தி பெறுகிறார்கள்.
ஆதாரம்
 1 அகிலதிரட்டு முக உரை
 2  கீழ் கண்ட அகிலதிரட்டு பாடல்வரிகள்
 “வணங்கும் தவத்தால் வந்தார் தாமரை பதியில்”…பக்கம் 248
“ போர் மேனிமாயன் பிறந்து தவமிருந்து
ஓர்மேனிசாதி ஒக்க வரவழைத்து” பக்கம் 1
“சாணாரிணத்தில் சுவாமி வந்தாறென்ரவரை 
மனிதனே சுவாமி வம்பென்று தானடித்து
தனுவறியா பாவி தடி இரும்பிலிட்டதுவும்”…. பக்கம்3
 “மனுக்கண் காணாமல் மறைந்ததொரு மூன்று நாளாய்
தானும் தவமதுவாய் சாயுச்யமே புரிந்து”…. பக்கம் 3
 “வாலை குருவே வாராமலே காரும் “
 “வாசியது பூவாய் வழங்க வரவழையும் …பக்கம் 9
தோசிமறலியையும் சொல்லி விலக்கிடு நீ “
“சான்றோர் முதலாய் சக்கிலியன் வரையும்
உண்டானசாதி ஒக்க வொக்கவொருயிணம் போல்” …பக்கம் 10
“ மருந்தாக தண்ணீர் மன்வைத்யம் செய்ததுவும்”….பக்கம்3
 
 “மும்மூர்தி எல்லாம் ஒரு மூர்த்தியாயிருக்கும்
 வைகுண்ட பொம்மான் வாய்தச் செந்தூர் கடலில்”…. பக்கம் 244
  “தனுவை அடக்கி தவமிருந்தார் அம்மானை”
“ சாகா விஞ்சை தலைவனாய் சமயவென்று
நீதிய ரோமம் வீசி நினை வொன்றை கருணை வாசி
 சாதிக்க” …..பக்கம் 249
  ஆகிலதிரட்டில் முருகன் .

  விஷ்ணு ஏழுஅவதாரங்கள் செய்தார் எங்கிறது அகிலதிரட்டு  . அதில் மூண்றம் அவதாரம்தான் முருகன். ஏழாம் அவதாரமாக கலியை அழிக்க அய்யா வைகுண்டர் அவதரித்தார்.முருகனாக விஷ்ணு அவதாரம் செய்ததை பார்ப்போம்.
ஆதியில் சிவன் ஒரு யாகம் செய்தார் அதில் ஒரு தீயசக்தி  மாபெரும் உருவத்துடன் குரோணி என்ற அசுரனாக பிறந்தது.அது கைலாயத்தை விழுங்க முயற்சித்தது .அங்கு இருந்த விஷ்ணு அவனிடம் இருந்து தப்பித்து வந்தார் .  குரோனியை அழிக்க, அழிக்கும் கடவுலளாகிய சிவனை நோக்கி தவம் செய்தார் .    குரோணியை ஆறு துண்டமாக வெட்டி அழிக்க விஷ்ணுவிற்கு சிவன் வரம் தந்தார். ஆயிணும் சிவன் ஒவ்வொரு துண்டையும் ஒவெவொரு யுகத்திலும் அசுரனாக படைப்பார் . . விஷ்ணு ஒவெவொரு யுகத்திழும் அவதாரம் செய்து இந்த அரக்கர்களை அழித்தால் தான் குரோணி என்ற தீய சக்த்தி  முழுமை யாக அழியும் என்றும் தெரிவித்தார். இதில் ஆறாவது துண்டம் பெரும் புத்தியும் சக்தியும் கொண்ட கலியாக உருஎடுக்கும். அதை அழிக்க சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் ஒருவராக கலியை அழிக்க வைகுண்டராக விஷ்னு அவதாரம் செய்தார்.  
முருகன் அவதாரம்.
  குரோணியை ஆறு துண்டாக வெட்டி வீழ்த்தினார் விஷ்ணு . அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து உலகை அழிக்க தொடங்கியது . . விஷ்ணு அவதாரம் செய்து குண்டோமசாலியை அழித்தார் .அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது அவர்களை சுருதி முனி   அந்த யுகம் முடிந்தது.  ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாக பிளந்து சிங்கமுகசூரன் சூரர்பர்பன் என்று கிறேதா யுகத்தில் பிறப்பித்தார். இவர்கள் இருவரும் தவம் செய்து  ,ஐந்து முக கடவுளாளும்(சிவனாளும்) கொல்லமுடியாது என்ற வரத்தை  சிவனிடம் பெற்றனர்.    
   சூரபர்பன் மூஉலகும் வென்று தேவர்களை சிறை பிடித்து அடிமை ஆக்கினான். தேவ லோக பெண்களையும் சிறை பிடித்து வந்தான் .     
 மிகவும் துன்பபட்ட தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் விஷ்ணுவை அழைத்து அவதாரம் செய்து சூரனை அழிக்க சொன்னார். விஷ்ணு ஆற்தலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து  சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார்.  தேவர்களை  படை வீரர்களா ஆக்கி கொண்டு  ஒரு சன்யாசி போல் வேடம் கொண்டு திருசெந்தூர் வந்து பாசறை அமைத்தார் . தேவர்களை விடுவிக்க தூதுஅனுப்பினார் . சூரன் எற்காமல் போர்புரிய தொடங்கினான் .  முருகன் சூரபர்பன் படைகளை அழித்தார் சிங்கமுக சூரன் இறந்தான் .  .சூரபர்ப்பன் நேராக  போரிட வந்தான் . சூரபர்பன் மீது வேலாயுதை எறிந்தார் முருகன் . சூரன் துடிதுடித்து மடிந்தான்.
 ஆகிலதிரட்டு சொல்வது .
விஷ்ணுவின் மூன்றாம் அவதரம் முருகன் அவதாரம் .
 ..   சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் இனணைந்த ஏழாம் அவதாரம் அய்யா வைகுண்டர் .
 மனிதனாக பிறந்து தெய்வ நிலை பெற்றவர் .
 வாசியோகம் செய்து சாகானிலை பெற்றவர் .
அரூப நிலை பெற்று இன்றும் அருள் பாலிப்பவர்
தாழ்தபட்ட மக்களுக்காக போராடி மரணதண்டனைகளை வென்று .
அவர்களுக்கு உரிமை பெற்று தந்தவர் .

 இல்லறவழ்கையில்  வாழ்ந்து அரசு ஆண்டவர் .
 முருகன் பற்றி சித்தர்கள் சொன்னதை நான்காம் பகுதியில் பார்ப்
போம்!!!
இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!!
 அன்புடன், 
 யோகி. வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி
  

                                                 Murugan paakam 4.
                                            
முருகன் பாகம் 4
முருகன் பாகம்4
முருகாபோற்றி
!!!முருகாபோற்றி!!!முருகாபோற்றி!!!
 குருவாய்வருவாய்!!!அருள்வாய்குகணே!!!!
எனது குரு முருகன் அருள் ஆசியுடன் அவன் அனுமதி பெற்று இப்பதிவு செய்கிறேன்.
இன்றும் முருகனை குருவாய் வரவேண்டி மனது உருக பிரார்த்தித்தால் எனக்கு குருவாக வந்தது போல் உங்களுக்கும் குருவாக வந்து அருள்புரிவான் . .நம்புங்கள் முருகன்  நடத்தி காட்டுவான்.
உண்மை செய்திகளின் அடிப்படையில் புராணங்கள் எழுதப்பட்டு பக்தி இலக்கியமாக பக்தர்களால் நம்பப்படுகிறது . சித்தர்கள் மூட பக்தியை சாடுபவர்கள் ஆகையால் புராணங்களை முழுமையாக ஏற்பது இல்லை. ..
முருகன் பற்றி சித்தர்கள் மற்றும் முருகன் சொல்வதை பார்ப்போம்.

முருகன் கடவுளா அல்லது மனிதனா
  போகர் 7000 என்ற பெரு நூலில் முருகன் பற்றிய பதிவை பார்ப்போம்.

 செப்பலாம் சுப்ரமணியன் என்பார் பாரு
சிறப்பான மனிதனல்லால்  வேறொன்றில்லை
ஒப்பமுடன் நீனினைத்த சுப்ரமண்யன்
 ஓகோகோ நாதாந்த கடவுளாச்சு
போகர் 7000 பாடல் 5622
புல்லவே கவிவாணார் கட்டு வாக்கியம் 
புகழாக பலபலவாம் நாமம்தன்னை
 சொல்லவே நற்கடவுள் என்று கூறி
செம்மலுடன் மதி கெட்டு துதிப்பார்பாரே
போகர் 7000 பாடல் 5623

.
தென்திசையில் அகத்தியர்கு உபதேசங்கள்
செய்ததொரு வடிவேலர் சித்துதாமும்
பன்றி பெருச்சாலியின் மேல் சாரி ஏகும் 
பன்பான விநாயகர்கு தம்பியாமே
தம்பியே எந்தனுக்கு குருவும் மாகும்
 போகர் 7000 பாடல்5942

போகர் 7000 பாடல் 5943

 புல்லவே கவிவாணார் கட்டு வாக்கியம் 
புகழாக பலபலவாம் நாமம்தன்னை
 சொல்லவே நற்கடவுள் என்று கூறி
செம்மலுடன் மதி கெட்டு துதிப்பார்பாரே
போகர் 7000 பாடல் 5623


 
……
கடவுள் என்று நீ நினைத்த சுப்ரமணியன் மனிதனாக பிறந்து வாசி யோகத்தில்  நாதாந்தம் என்ற  இறை நிலை அடைந்து கடவுள் நிலை ஆனவர்.
……..
வடதிசையில் குரு முனிவர் அகத்தியர்கு வட மொழி கிரந்தத்தில் அஷ்விணி தேவர்கள் குரு . அது முழுமை இல்லை என்பதால் தென்திசையில் ஞானம் பெற முருகனை தேடிவந்தவர் அகத்தியர் .(முருகனை சந்தித்ததை பிறகு பார்ப்போம்.) தென்திசையில் தமிழ் மொழியில் அகத்தியர்கு ஞானகுரு முருகன். வடிவேலர் என்ற முருகன் சித்தர்.  ஆனால் முருகனை பன்றி போன்ற பெருச்சாலி மீது சவாரி செய்யும் விநாயக கடவுளுக்கு தம்பி என்று புராணங்களும் சாத்திரங்களும்  தவறாக சொல்கின்றன. விநாயக கடவுளுக்கு தம்பி என்று சொல்லப்பட்ட முருகன் எனக்கு குரு.. இத்தகய மகா சித்தரை  பலபல பெயர்கள்  சொல்லி இறைவன் என்று கவிவாணார்கள் சொலியதை நம்பி மதி கெட்டு துதிக்கிறார்கள் . போகர் தனது குருவான முருகனுக்கு பழநியில் நவபாசான சிலை வைத்து  அபிசேகம் செய்து ,அபிசேக பிரசாதத்தால்  தீராத நோய்களை தீர்த்தார் . சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது நடந்தது. தற்போது இச்சிலை அகற்றப்பட்டது.
 


 மேற்சொன்ன பாடல்களில் உள்ள கருத்துகள் .  
 முருகன் மனிதன்.
வாசியோகம் செய்து அதில் நாதத்தின் முடிவு கண்டு நாதர் நிலை பெற்ற சித்தராகி கடவுள் நிலை அடைந்தவர். புராணங்கள் முருகணை பரமசிவன் மகன்  என்றும் விநாயகருக்கு தம்பி என்றும் கட்டுகதை மற்றும் புராணம்கள் செய்தனர் .   முருகன் போகருக்கு குரு.
 முருகன் மூன்று யுகங்க்
முருகன் மனிதன் என்றால் அவர் தோன்றிய கலம் மனிதநிலையில் வாழ்ந்தகாலம் எது ?
போகர் சொல்வதை பார்ப்போம்
துன்னவே  மூன்று யுகம் கடந்த வேலர்
துப்புறவாய் பிறந்த தொரு நேர்மையப்பா
 சொன்னபடி ஆவனியாம் திங்களப்பா
சொல்லுகிறேன் முதற் பூசங்கால்தான் ஒன்றே
 போகர் 7000 பாடல் 5941 
 மூன்று யுகங்களுக்கு முன்பு ஆவனி மாதம் பூச நட்சத்திரம் முதல் காலில் பிறந்தவர் . வயது காலம் நிர்ணயம் செய்ய முடியாது. முருகன் வாழ்ந்த காலம் பற்றி காக புசுண்டர் சொல்வதை பார்ப்போம்.
பேச்சப்ப வேலவரும் தோக்கி தக்கி
 பிரளயங்கள் முடிந்த உடன் னிவிடம் வந்தார்
மூச்சப்ப  யென்னவென்று வினவி கேட்டேன்
மூதறிவி னோடு டெனக்கு முறையை சொன்னார்
வாச்சப்பா யிருவென்று யுகங்கள் தோறும்
மறைந்து நான் வெளியேறும் வகையுஞ் சொன்னேன்
காச்சப்பா யிரு என்ற் யிருத்தி யென்னை
கருதிவந்த விபரமெல்லாம் கேட்டிட்டாரே
காக  புசுண்டர் பெருநூல் காவியம் பாடல்923
   வாட்டமிலாதே கேட்டு  குமரனுந்தான்
 மலை மேலே சென்று விட்டான் மார்கதோடே.
காக  புசுண்டர் பெருநூல் காவியம் 1000 பாடல்924
 
 
   குமரிகண்டம் இருந்த போது முதல் தமிழ் சங்கம் இருந்தது . குமரி கண்டத்தில் முருகன் அரசனாகவும் தமிழ்சங்க தலைவனாகவும் கடம்ப மாலை தரித்து வாழ்ந்தார்  .  இவர் கந்தமுருகன் என்றும் குறிப்பிட படுகிறார்.  இது பல சங்க நூல்கள் மூலம் அறியபட்டது .
இதை உறுதி செய்யும் வகையில் காக புசுண்டர் பாடல் உள்ளது.
  பல பிரளயங்கள் எற்பட்டு குமரி கண்டம் அழிந்து உள்ளது .  பிரளயங்கள் முடிந்த பின்பு  பிரளயங்களில் இருந்து பெரும் முயற்சியால் தப்பி பிழைத்து
காக புசுண்டர் வாழ்ந்த இடம் வந்தார்   வேலன் என்ற முருகன் .  காகபுசுண்டர் முருககனிடம் “ என்னை தேடி வந்த காரணம் என்ன என்று” கேட்டார் .
அதற்கு முருகன்  மூதறிவுடன் மிகுந்த ஞானத்துடன் தான் பிரளயத்தில் இருந்து தப்பிவந்த தொழில் நுட்ப முறையை சொன்னார்.  மேலும் நான் பிரளயத்தில் இருந்து தப்பியயதை கேட்டார் . . நான் எப்படி ஒவ்வொரு பிரளயத்தின் போது மறைந்து மீண்டும் பிரளயம் முடிந்தபின் வருகிறேன் என்ற தொழில் நுட்ப வகையை சொன்னேன்.  மேலும்  அவர் அறிய விரும்பிய பல தொழில் நுட்ப விபரங்களை கேட்டு  அறிந்தார் .
 அதன்பின் என்னை நான் இருந்த இடதில் இருக்க சொல்லி அவர் மலை மேல் சென்று அமர்ந்தார்..

    முருகன், ராமாயாண காலத்திற்கு முற்பட்டவன்  என்பதை வசிஸ்டர் ராமனுக்கு உபதேசம் செய்த ஞானோதயம் என்ற நூலில் அறிகிறோம்  மேலும் முருகனை பார்த்து ஞனம் பெறுவதையும் சொல்கிறார் .
வசிஸ்டருக்கும் முருகனுக்கும் எப்படி தொடர்பு . ? என்ற கேள்வி வருகிறது.
  காக புசுண்டர் வசிஸ்டருக்கு குருவாக இருந்து உப தேசம் செய்த நுல் காக  புசுண்டர் பெருநூல் காவியம் 1000   
 சென்ற பாடலில் முருகனும்  காக புசுண்டரும் தங்களது தொழில் நுட்பத்தை பகிர்ந்ததை பார்த்தோம்.     காகபுசுண்டர் வசிஸ்டருக்கு குருவாக இருந்து, அவர்  முருகனிடம் பெற்ற யோக ஞனத்தை வசிஸ்டருக்கு கற்பித்துள்ளார்  .இந்த யோக ஞானத்தை முருகனிடம் ராமன்  பெறுவதை கீழ்கண்ட  பாடல் சொல்கிறது. ...
 யோகமதில் ரேசக பூரகம் பண்ணி
யுண்மையுடன் கும்பகத்தில் நின்று கொண்டு
ஏகமென்ற  மனதுறமாய் செபித்தாயானால்
என்மகனே வடிவேலன் பிரகாசிப்பான்
தாகமாய் அவர் பதமே பணிந்து போற்றி
தண்மையுள்ள சிவாய குரு  சிவமே என்று
வேகமுடன் பூட்டுமுனை திறக்க வென்று
 வேண்டினால் திறவு கோல் தருவார்தானே
  வசிஸ்டர் ஞானோதயம் 16 பாடல் 10
வாசி யோகத்தில் ரேசக  பூரகம் செய்து கும்பக நிலையில்  மனதை ஒருமுகபடுத்தி முருகனை துதி. அப்போது முருகன் பிரகாசிப்பான் . சுழிமுணை திறக்கும் சூட்சமத்தை வேண்டு அப்போது பத்தாம் வாசலாகிய சுழிமுணை திறக்கும் வழியை சொல்வார். இப்பாடலில் அறிவது
 முருகன் ராமாயாண காலத்திற்கு முந்தயவன் . ராமாயானகாலத்தில் வேண்டியவர்க்கு ஞனம் வழங்கியவன் . ராமனும் முருகனின் வாசியோகம் கற்றவன் ..
 நாமும் வாசியோகம் கற்று ஞானம் பெறுவோம்.
 முருகன் செய்தது, உபதேசித்தது , முருகனின் தற்பபோதய ரூபம் மற்றும் உண்மைகளை முருகன் பாகம் 5 ல் பார்ப்போம் ..
 இறை அருள் பெருக!!! தான் அவன் ஆகுக
 அன்புடன்.
 யோகி . வே இராஜா கிருஷ்ணா மூர்த்தி