அகத்தியர்

பதினெட்டு சித்தர்களில் தலையா சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக வும் பல சித்தர்கள் நூல் வழியும் , புராணங்கள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். siddharyogam.com
அகத்திய முனி ஆதியில் வேதகாலம் ஆரம்பமான முதல் மன்வத்ரம்மாகிய ஸ்வாயம்பு மன்வந்த்திரத்தில் வாழ்ந்ததவர் . சப்த்த ரிஷிகளில் ஒருவர் என்றும் விஷ்ணு புராணம் சொல்கிறது . ராமாயண காலத்திலும் மகாபாரத காலத்திலும் அகத்தியர் வாழ்ந்துள்ளார் . முதல் தமிழ் சங்க காலத்திலும் வாழ்நதுள்ளார். . இவரது காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு . இவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாக தெரிகிறது . சித்தர்கள் காயசித்தி என்ற மரணமில்ல தன்மை பெற்றவர்கள் எனவே இவர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதில் வியப்பு இல்லை .தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார் அகத்தியர்.


புதுச்சேரிக்கு  அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.


அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.

siddharyogam.com
தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.


* அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.


அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.


கைலையில் நடந்த [[சிவபெருமான்]] திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே பொதிகை மலை நோக்கிப் பயணித்தார். அகத்தியர் பொதிகை செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.


தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளிடம் தமிழ் கற்றார். சித்தர் கல்வியும் கற்றார்.அவரின் ஆணைப்படி தமிழுக்கு அகத்தியம் என்னும் இலக்கண நூல் எழுதினர் . பல சித்தர் கல்வி நூ;கள் இயற்றினார்.


இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்


[[சிவ பூசை]] செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை [[விநாயகர்]] காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.


இலங்கை மன்னர் [[இராவணன்|இராவணனை]] தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.


அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். [[ஊர்வசி]] இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.


[[வாதாபி]], [[வில்வளவன்]] என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

siddharyogam.com
இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல.

அகத்தியர் பற்றி சித்தர் நூல்கள் சொல்வதை பார்ப்போம் .
அகத்தியர் மரபு பெயர்காரணம்
" கேளப்ப அகத்தியர் தன் சாதிகேளு
கேடியான சூத்திரன் அவன் வேளாண் ணப்பா"

"வளமாண என்பேரன் அகததி கண்டானே
கண்டதினால் அகத்தியன் என்ற பேருமாச்சு
கனமான அகதியனட கண்டான் பரு
விண்டதினால் யான் விண்டேன் யார்விண்டார்கள் . "
தன்வந்திரி நிகண்டு 300 பாடல் 3௦௦ மற்றும் 301
அகத்தியர் வேளாளர் மரபை சேர்ந்த சூத்திரர் இறைவன் தன்னுள் அகதத்தீயாக இருப்பதை பார்த்தார் . அதை பார்க்கும் முறையை வெளிப்படையாக முதலில் சொன்னான் என்பேரன் . அதனால் அகத்தியன் என்ற பெயர் வந்தது . . அதன்பின் தன்வந்திரி யாகிய நான் சொன்னேன் .
அகத்தியரின் குரு
அகத்தியருக்கு இரண்டு குருக்கள் உண்டு . தன்வந்திரி சீடராகிய அஷ்வினி தேவர்கள் மற்றும்
தமிழ் நாட்டில் முருகப்பெருமான் ..
அகத்தியர் ஆறு லட்சம் பாடல்கள் பாடி உள்ளார் . அவற்றை சுருக்கி
எழுதிய நூல்களில் முக்கியமானவைகள்
பெருநூல் என்ற 12000
அகத்தியர் 2000
சொவ்மியசாகரம் 12௦௦
இலக்கிய சௌமியசாகரம்
அமுத கலைஞானம் 1200
பரிபூரணம் 1200
வாத சௌமியம் 1200
சௌமியசாகரம் 1200
வைத்திய காவியம் 1000
வாத காவியம் 1௦௦௦
மந்திர காவியம் 1௦௦௦
ஞான காவியம் 1000
இலட்சன காவியம் 1௦௦௦
பஞ்ச காவிய நிகண்டு 800
வல்லதி 600
நிகண்டு 500
பரிபூரணம் 400
அந்தரங்க தீட்சவிதி 400
பூஜா விதி 200
தீச்சா விதி 200
அகத்தியரின் சீடர்களில் முக்கியமானவர்கள்
புலத்தியர்
சுந்தரானந்தர்
இராமதேவர்
தேரையர்
திரு வள்ளுவர்
தொல் காப்பியர்
விக்கிர மாதித்தன்
அகத்தியர் செய்த தலை இரண சிகிச்சை
பாண்டிய அரசருக்கு தீராத தலை நோவு ஏற்பட்டது . இதை தீர்க்க அகத்தியர் பொதிகை மலையில் இருந்து வரவழைக்க பட்டார். அவர் மன்னரை பரிசோதித்து பார்த்தார் . மன்னரின் தலைக்குள் ஒரு பொருள் இருக்கிறது . அதை எடுக்க மன்னரின் தலையை திறந்து பார்க்க வேண்டும் என்றார் . மன்னரின் ஒப்புதலுடன் தலை திறந்து பார்க்கப்பட்டது .
தலைக்குள் மூளையில் ஒரு தேரை இருந்தது .
மூளைக்கு சேதம் இல்லாமல் தேரையை அப்புறப்படுத்துவது எப்படி என்ற பிரச்சினை எழுந்தது . . அவரின் உதவியாலரான ஒரு சீடர் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்தார் . அடுத்த சீடர் நீர் நிறைந்த பாத்திரத்தை தேரை அருகே பிடித்தார் . தேரை நீரில் தாவியது .
மன்னரின் திறந்த தலை மூடப்பட்டது . மன்னர் நலமானார் . சீடர் ஒருவருக்கு தேரையர் என பெயரிட்டார் . மற்றவர்க்கு இராமதேவர் என பெயாரிட்டார் .
மன்னர் அகத்தியருக்கு பொற்பல்லக்கு, யானை மற்றும் பெரும் செல்வங்கள் கொடுத்து அனுப்பினார் .
அகத்தியர் வாழ்ந் இடம்
பொதிகைமலை திருநெல் வேளி மாவட்டம் பாபநாசம் என்ற இடத்தில உள்ளது . மலை மேல் அகத்தியர்க்கு கோவில் உள்ளது . இங்கே அவர் அடங்கியதாக சொல்லுவார்கள் ..