சித்தர்கள் பரம்பரை

சித்தர்கள் பரம்பரை இன்று உருவாக்க முடியுமா ?.

சித்தர்களிடம் சித்தர் கல்வி கற்று , அதை செய்முறை படுத்தியவர்கள் தான் சித்தர்களின் குழந்தைகள் . இதைதான் சித்தர்களின் பரம்பரை என்பார்கள் நந்தி என்ற சிவனுக்கு திரு மூலர் மகன் . திரு மூலருக்கு காலங்கி மகன் காலங்கிக்கு போகர் மகன் . போகருக்கு கொங்கணர் மகன் . இது திருமூலர் பரம்பரை அல்லது கைலாய பரம்பரை .. முருகனுக்கு அகத்தியன் மகன் . அகத்தியனுக்கு புலத்தியன் மகன் புலத்தியர்க்கு தேரையர் மகன் . தேரையர்க்கு. யூகி மகன் இது அகத்தியர் பரம்பரை அல்லது குமரகுரு பரம்பரை . நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சிதர்கலவியின் சரித்திரம் . 

இன்று இது சாத்தியமா ? . 

இன்று ஒரு சித்தர் தனது பரம்பரை உருவாக்குகிறார் என்பது சித்தர்களுக்கும் சித்தர் அறிவியலுக்கும் கிடைக்கும் வெற்றி .. 

சித்தர்களின் அறிவியலை சித்தர்கள் எனக்கு சொல்லி கொடுத்தார்கள் . நான் கற்றேன் . செய்தேன் . சித்தர் கல்வியில் முதன்மையான வாசி யோகாவை உலகம் முழுவதும் உள்ளவர்க்கு கற்றுக்கொடுக்க சொன்னார்கள் . அந்தப்பணி செய்து கொண்டு இருக்கிறேன் . 
அன்று சிதர்கள் செய்த வாசியோகம் இன்று நான் செய்தேன் . அதை என்னிடம் கற்றவரும் செய்தார்கள் என்பதே சித்தர் கல்விக்கு கிடைத்த வெற்றி . 
வாசி யோகத்தில் மூலாதாரத்தில் வாசி உருவாக்கல் 32 :64 : 16 என்பது முதல் படி . அதில் கல்பங்கள் உண்டு வாசியோகம் செய்து சிலதுளி அமிர்தம் உருவாக்கல் உயர்படி . இது அடிப்படை வாசியோக வெற்றி . 
இந்த படிக்கட்டை வாலிப அன்பர் அச்யுத் பாபு இல்லற வாழ்வில் இருந்து எட்டி யுள்ளார் என்பது சித்தர் கல்விக்கு கிடைத்த வெற்றி . இந்த சாதனை சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டு வீட்டில் வாசியோக பாடங்களின் மூலம் செய்தார் என்பது சிறப்பு . அவர் என்னை நேரில் சந்தித்தவர் இல்லை . . 
அவரின் சந்தேகங்கள், தடங்கள் ஆகியவற்றை என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டு தெளிவு பெற்றார் . அதன்படி பயிற்சி செய்தார் வெற்றி கண்டார் .. அவரின் கடிதத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி 
.

மதிப்பிற்குரிய அய்யா 

வசியோக பிரணாயமப்பயிர்சியில் (இரண்டு நாசி வழியாக ) முதல் முறையாக 32 :64 : 16 கால கணக்கை எட்ட முடிந்தது. 

சித்தர்களுக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவுத்துக்கொள்கிறேன். 

32 : 64 :16 கால கணக்கில் பிராணயமம் செய்யும் பொது எனது உடம்பில் தனி உற்சாகமும் மனதில் சந்தோஷமும் நிரம்பியது. அதிகநேரம் அமர்ந்து பயிற்சி செய்தால் எனது கால்கள் மரத்துப்போகும் , அனால் 32:64:16 காலக்கணக்கில் பிராணயமம் செய்து முடிக்கும்பொழுது மரத்துப்போன கால்களில் ரத்த ஓட்டம் உணர்ந்தேன். பின் எனது கால்கள் இயல்புநிலை அடைந்தது. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது எனது அன்னார்கிற்கு மேல் இனிப்பு சுவை உணர்கிறேன்.. 

ஆரம்பத்தில் என்னால் 16:32:8 முதல் 20 :40 :10 காலக்கணக்கில் தான் பயிற்சி செய்ய முடிந்தது. தங்களின் ஆலோசனைப்படி வழலை வாங்கல் பயிற்சி (கல்பம் உண்டு உடலில் விஷத்தை அகற்றுதல் ) தொடர்ந்து நாற்பது நாட்கள் செய்தேன். கல்பங்களை உங்கள் அறிவுரைப்படி என் தாயார் மிக அருமையாக செய்து கொடுப்பது மட்டுமில்லாமல் என்னுடன் சேர்ந்து அவர்களும் வழலை வாங்கல் செய்தார்கள். அது எனக்கு தொடர்ந்து செய்ய உற்சாகமாக இருந்தது . 

நாற்பது நாட்கள் வழலை முடிப்பதற்குள் எனது பிரணாயமம் பயிற்சி காலக்கணக்கு மெதுவாக உயர்வதை உணர்ந்தேன். படிப்படியாக காலக்கனைக்கை கூட்டி பயிற்சி செய்தேன். அவ்வபோது உங்களிடம் சந்தேகங்கள் கேட்டு தெளிவடைந்தேன். தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியாலும் சித்தர்கள் அருள் மற்றும் உங்கள் வழிகாட்டுதலாலும் என்னால் வாசியோகத்தில் ஒரு சிறிய மயிர்கல்லை எட்ட முடிந்தது. 

வாலை ஒளியைக்கான தொடர்ந்து பயிற்சி செய்வேன். உங்கள் வழிகாட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!!.
 

அடிப்படை வாசியோகம் அடைந்தபின் மேல்நிலை வாசியோகம் செய்து வாலை ஒளிகாணல் உயர்நிலை அடைந்து அவர்கள் யோகிநிலை அடைகிறார்கள் . 
வாசியோகா அங்கங்களில் எழாவது அங்கம் தியானம் . யோகிகள் தியானத்தில் துரிய தியான நிலை அடைதல் உயர்வு . துரிய தியானத்தில் இறைவனின் உருவங்கள் காண்பது சித்தர்கள் காண்பது சகுன தியானம் 

பலவித ஒளி வடிவு காண்பது நிர்குண தியானம் . இந்தநிலை வரை தான் பெற்ற அனுபவங்களை ஒரு யோகி சொல்ல இயலும் . அத்தகைய செய்திகளே சித்தர் கல்வியாக நாம் படிக்கிறோம் . இதைதான் நானும் சொல்கிறேன் . இது யோகிகளில் உயர்நிலை . 
இதற்க்கு மேல் துரியா அதிதநிலை தியானம் என்ற ஒன்று உண்டு அது நிற்குனதியானத்தின் மிக உயர் நிலை . இந்த தியானத்தில் தான் பெற்ற அனுபவங்களை சொல்ல இயலாது . இதை உணர்ந்து பார் என்று திரு மூலர் சொல்கிறார் . இதை தான் கண்டவர் விண்டது இல்லை என்று அனைத்து சித்தர்களும் சொல்கிறார்கள் . இந்த நிலை அடைந்த யோகியே சிவ யோகம் செய்ய தகுதி பெற்றவர் . இது இன்று சாத்தியமா? .

இந்தநிலை நான் அடைந்தேன் என்றால் நம்புபவர் இல்லை . என்னிடம் அலைவழி வாசியோகம் பயின்றவர் அடைந்த அனுபவத்தை சொன்னால் மறுக்க முடியாது . 
அறுபது வயது கடந்த ஜெர்மணியை சேர்ந்த யோகினி. cabriel கபிரியாளி சில்லமான். . சிறந்த ஹோமியோபதி மருத்துவர் ரெய்கி மாஸ்டர் . சிறந்த ஓவியர். பல நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் ஆண் லைனில் என்னிடம் வாசி யோகம் கற்றார் அடிப்படை வாசியோக வெற்றி பெற்றார் . வாலை ஒளி கண்டார் . அவர் கண்ட வாலை ஒளியை பல ஓவியங்கள் வரைந்து எனக்கு அனுப்பி உள்ளார் . ஆகையால் யோகினி நிலை அடைந்தார். இவை அவர் துரிய தியான நிலை அடைந்தது .
அவர் தற்போது எனக்கு அனுப்பிய செய்தியில் துரியாதீத நிலை அடைந்தது தெளிவு . அதாவது இறைவனோடு ஒன்றும் நிலை . துரியாதித நிர்குண தியானம் 
அவரின் கடிதம் 

I'm just reading your letters / postings in our beginning of Yoga. And I'm proud to know you. There you wrote "Raja Krishna Moorthy I am jealousy of you..proud of you.. happy of you. I have nothing in my credit except healing." - You have another credit - You are a very good teacher. I thank you for that. I do learn a lot with your guiding. 


I have reduced my meals to 2-3 times the day. perhaps you remember - we spoke about. 

And: going into meditation it becomes pictureless (Nirkuna?). 
I see light meandering in a changing space. Not to paint, not possible. The light is warm. If there is a path, I cannot see. But it is fulfilling the space by time.
My answer to her 
All these are part of out come of Nirguna meditation .. 

I had assumed - I thank you.
Have happy times .Good night . 

Good night to you, too - and your nice family 
Tuesday 1:34am அவரின் கடிதத்தை பகிர்வதில் எல்லையற்ற ஆனந்தம் .. . 
சித்தர்கல்வியும் சித்தர் அறிவியலும் பால் இனம் மொழி சாதி நிறம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு மனித இனத்தை உயர்விக்கும் அறிவியல் . . இன்றும் நிரூபிக்கப்பட்டு உள்ளது . சித்தர்களின் வாரிசுகள் உருவாக்குவதில் கிடைக்கும் வெற்றி . 
வீட்டில் வாசி யோகம் கற்கும் அனைவரும் இத்தகைய வெற்றிபெற வாழ்த்துக்கள் . 
வாசியோக சாதனையாளர்க்கு வாழ்த்துக்கள் 

நீங்கள் பெற்ற வெற்றியை தெரிவிப்பது பிறருக்கு வழிகாட்டும் . 
இறை அருள் பெறுக !!! தான் அவன் ஆகுக !!! . . .