சித்தர்கள் செய்யும் உடல் தங்கம்

தங்கம் செய்யலாம் வாங்க.!!!

அறிவியலில் தங்கம் செய்தல் .
உலோகங்களின் அணு நிறையை மாற்றி தங்கம செய்ய முடியும் என்று இன்றைய அறிவியல் சொல்கிறது . ஆனால் இதற்கு ஆகும் செலவு இயற்கை தங்க விலையை போல் பல நூறு மடங்கு ஆகும் என்கிறது. ஆயினும் இயற்கை தங்கம் போல் இன்று பலரும் என்னிடம் முப்பூ பற்றியும்,தங்கம் செய்வது பற்றியும் கேட்டுள்ளார்கள் .


திருமூலர் , போகர் , கொங்கணர் , சிவவாக்கியர் மற்றும் பல சித்தர்கள் தங்கம் செய்தார்கள் என்ற குறிப்பு உள்ளது. தங்கம் செய்வதுபற்றி நான்குவரி சுருக்க சூத்திரம் முதல் நானூருவரி வகார சூத்திரம் வரை நூற்றுகணக்கான செய்முறைகள் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் . ஆறுமாத்து தங்கம் செய்வது முதல் 1008 மாத்து தங்கம் செய்வதுவரை பலநூறு பாடல்கள் உள்ளன . இரும்பு, செம்பு , வெள்ளி , நவலோகம் என்னும் உலோகக்கலவை ,பாதரசம் ஆகிய உலோகங்களை தங்கமாக மாற்றும் முறைகள் சொல்லப்பட்டு உள்ளன .

வேதை சித்தி 
சித்தர் கல்வியில் வேதை அல்லது வாதம் என்ற ஒரு பகுதி உண்டு, ஒரு பொருளின் அனுதன்மையை மாற்றுதல் . பாசானங்களின் அனுதன்மையை மாற்றி பயனுள்ள மருந்தாக்கல். எரியும் கற்பூரத்தை எரியா மருந்தாக்கல் . ஓடும் பாதரசத்தை ஓடாத திடபொருளாககி குளிகை மற்றும் மருந்து செய்தல். வேதையின் ஒருபகுதி தங்கம் செதய்தல் என்று சித்தர்கள் பாடி உள்ளார்கள் இதற்கு அடிப்படையாக பயன் படுத்திய ரசாயனம் முப்பூ மற்றும் உலோகங்களும் . இந்த முப்பபூவே சாகாமல் இருக்க பயன்படும் ரசாயனம். மேலை நாட்டினர் தங்கம் செய்வதை Alchemi என்றனர் முப்பூவை Philasopher stone என்றனர் .. பராசிளஸ் தங்கம் செய்ததாய் குறிப்பு உண்டு . நியுடனும், ஐன்ஸ்டீன்ணும் சாகாமருந்து செய்ய முயற்சித்து தோற்று போயினர். சித்தர் நூல்களில் பரங்கி முப்பூ என்ற குறிப்பு உண்டு 

முப்பூ செய்து முடிப்பதை வேதை சித்தி என்றார்கள் சித்தர்கள் . 


சமீபத்திய செய்தியிகளில் தங்கம் செய்தல் பற்றி . 

வள்ளலார் தங்கம் செய்தார் என்று சொல்கிறார்கள் , ஜட்ஜ் . பலராமையா தனது நூலில், அவரின் குரு கருணாகர ஸ்வாமிகள் தங்கம் செய்து காண்பித்தார் என்று சொல்லி உள்ளார் . முப்பூ என்ற கற்பமருந்து என்ற நூல் எழுதிய முப்பூ. அப்துல்ஜபார் அவரின் சீடர் அலி ஆகியோர் . முப்புசெய்து தங்கம் செய்ய முயன்றனர் . இன்றும் பலர் தங்கம் செய்ய முயல்கிறார்கள் . வலையில் முப்பு செய்வது பற்றி பல செய்முறைகள் வீடீயோகள் காண முடிகிறது . 

இவை எல்லாம் தங்கம் செய்ய தூண்டும் குறிப்புகள் .
ஆழந்து சிந்தித்தால் சில கேள்விகள் எழும் . 
தங்கம் செய்த சித்தர்கள் தங்கத்தை விற்று ஜீவனம் செய்யவில்லை . ஏன்? 
தங்கம் செய்வது பற்றி ஏன் பாடினார்கள் . ?
காயசித்திக்கும் தங்கம் செய்யவும் ஒரே அடிப்படை மருந்து முப்பூ ஆயினும் தங்கம் செய்ய பலநூறு முறைகள் சொன்னார்கள் காய சித்திக்கு ஒரேமுறையை எல்லா சித்தர்களும் சொன்னார்கள் . ஏன் ? 

சித்தர்களில் பெரும்பாலோர் . வைத்தியம் செய்து பொருள் ஈட்டி வாழ்ந்தார்கள். சிவவாக்கியர் விறகு வெட்டினார் .பட்டினத்தாரும் பத்ரகியாரும் பிறர் கொடுத்ததை உண்டு வழ்ந்தனர். தங்கத்தை உயிர் கொல்லி என்றார் சிவ வாக்கியர் . ஏமன் சிவன் சொத்து, சிவன் சொத்து குலநாசம் என்றார் அகத்தியர் . பிறகு ஏன் தங்கம் செய்வது பற்றி பாடினார்கள்? . இந்தகேள்விகளுக்கு சித்தர்கள் சொல்லும் பதில் என்ன? என்று ஆராய்வோம். 

தங்கம் செய்வததில் நடை முறை அனுபவம் 

எனது பெற்றோர்கள் யோகிகளையும் ஆன்மீக குருக்களையும் உபசரிப்பதை கடமையாக செய்து வந்தனர் அத்தகைய சாமியார் ஒருவருக்கு உணவும் பூசை பொருட்களும் பெற்று செல்ல அவரின் சீடர் எங்கள் வீட்டிற்கு வந்தார்
என்தாயாரிடம் ..siddharyogam.com
"அம்மா நேற்று சாமிகள் ஒரு ஓட்டை காலணாவை ( அந்தகாலத்து செம்புகாசு ) தங்கமாக்கி பக்தருக்கு கொடுத்தார் .பொற் கொள்ளரும் அதை தங்கம் என்று உறுதி செய்தார் . சாமிகள் பலருக்கும் தங்கம் செய்து கொடுக்கிறார் . உங்களுக்கும் தங்கம் செய்து கொடுப்பார் “ என்றார் . 
என் தாயார் சீடரிடம் 
“ சீனாகாரம் வெடியுப்பு தினமும் தினமும் 
தின்னும் கறியுப்பு ஏநாய் பாலில் 
விட்டரைத்து எட்டேருவில் புடம் போடு 

சுட்டுக்கேட்டவன் பாதி சுடாமல் கேட்டவன் மீதி . உன் சாமியிடம் போய் சொல் . இனி இங்கு வராதே “ என்றார் . 
எனது தாயாரின் கோபம் என் மனதை விட்டு அகலவில்லை
சீடரோ பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டார்...siddharyogam.com

அருகில் இருந்த உறவினர் என்தாயரிடம் “ அமைதியான நீங்கள் அவர் மீது ஏன் கோபம் கொண்டீர்கள்” என்றார் 
எனது தாயார் “ தம்பி சித்தர்களின் பாடலை சொல்லி தங்கம் செய்ய சொல்லி கொடுக்கிறேன் என்று ரகசியமாக சிலரை சேர்ப்பார்கள் .. அவர்கள் வீட்டில் தங்கி பல பொருட்ட்கள் வாங்கியும் , siddharyogam.comஉபகரணம் செய்தும் செலவு வைப்பார்கள் . பொன்செய்தேன் என்று சிறிதளவு அவர் வைத்திருந்த தங்கத்தை கொடுப்பார் . . நேரம் பார்த்து பெரும் தொகையை அல்லது வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார் . . அவர் செய்த முறையை பார்த்து இவர்கள் பல பொருளகளை சுட்டு புடமிட்டு பயித்தியம் பிடித்து திரிவார்கள் . தனது சொத்து முழுவதும் இழப்பார்கள் . இவர்கள் சுட்டு கெட்டவர்கள் . சிலநாட்களில் சுடாமல் கெட்டவர் தெரியும்“
இந்த சாமியார் போலி சாமியார் என்று பலரிடம் சொன்னார் . யாரும் கேட்பதாக இல்லை . 

சிலநாட்கள் சென்று என் தாயாரிடம் சிலர் சொன்னது “ அம்மா நீங்கள் சொன்னதை கேட்கவில்லை .. ஒருபங்கு தங்கமும் ஒன்பது பங்கு தாமிரமும் தந்தால் பததுபங்கு தங்கம் செய்து தருவேன் . என்று சாமியார் சொன்னார் . அதை நம்பி எங்கள் நகைகளை கொடுத்தோம் . ஆனால் நேற்று முதல் சாமியாரை காணவில்லை. என்ன செய்ய? “

“ நீங்கள் சுடாமல் கெட்டவர்கள் . ஆசை படுங்கள் பேராசை படாதீர்கள் போலீசில் புகார் செய்யுங்கள் “ என்றார் என் தாயார். இத்தகைய ஏமாற்று இன்றும் நடக்கிறது ..
முப்பூ மற்றும் தங்கம் செய்யும் .ஆராய்ச்சியில் தனது வாழ்நாள் முழுவதும் அர்பணித்து தனது உடல் , பொருள் ஆவி இழந்தவர் பெரியவர் முப்பூ. அப்துல்ஜபார் அவர்கள் . அவர்களின் சீடர் அலி அவர்கள்களும் இன்னுயிர் நீத்தார் .. இருவரும் முப்புப்ற்றி நூல் எழுதி அவை தாமரை நூலகத்தில் பதிப்பிக்கப்பட்டன.

நான் முதன் முதலில் ஜபார் அய்யாவை சந்தித்து அவர் செய்த முப்புவை காட்ட சொன்னேன் . அதை காட்டியதுடன் நீதிபதி . பலராமைய்ய எழுதிய நூல்களும் கருப்பூர் கருணாகர ஸ்வாமிகள் எழுதிய நூல்களையும் படிக்க கொடுத்தார் . அதன்பின் அலி அவார்கள் உதவியுடம் அவர் செய்த முப்பு செய்முறைகளை செய்து காண்பித்தார் . வெளிப்படையாக அனைத்தும் சொன்னார் ,செய்தார் . அவர் எழுதிய முப்பு என்னும் கற்ப மருந்து என்னும் நூலில் சொன்னதை கேட்டேன் . அதில் சொல்லியவை பெரும பகுதி பொய் மறைப்பு என்றார் வெளிப்படையாக. 

அவர் சொல்லி கொடுத்தபடி முப்பு செய்து காண்பித்தேன். “ அய்யா இதை உண்டு நான் காயா சித்தி செய்யலாமா “ .
அந்த உயர்ந்தமனிதர் “ வேண்டாம் . எனது சீடர் இதை உண்டு மரணமானார் “ என்றார் 
மேலும் “ இந்தமருந்து தங்கம் செய்ய பயன்படும் “ என்றார் . 
அருகில் இருந்த அலி “அவர் இதய நோயால் இறந்தார் முப்பூவுக்கு சம்மந்தம் இல்லை” என்றார். 

முப்பூ என்றால் இதய நோயை சுகபடுத்தவேண்டும் . ஆனால் சுகபடுத்தவில்லை . எனவே இது முப்பு இல்லை என்று முடிவு செய்து . நான்செய்த முப்பு என்ற மருந்தை உண்ணவில்லை இவர்கள் தங்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று அறிந்தேன் . 
ஜபார் அய்யா கடைசி வரை தங்கம் செயவில்லை . தனது பொருள் அனைத்தும் இழந்து வாடகை வீட்டில் இருந்து மறைந்தார் .. 
சில மாதங்களில் சர்க்கரை நோய் அப்துல் ஜபார் அய்யாவை ஆட்கொண்டது . 
உண்மையை சொல்லி “போலி முப்பு “ உண்ணாமல் என்னை மரணத்தில் இருந்து காத்த பெருந்தகை ஜபார் அவர்களை எனது வழிகாட்டியாக தொழுகிறேன் . ஆகையால் இன்று இந்த செய்தி சொல்ல முடிகிறது . 

ஆனால் அலி அவர் செய்த முப்புவை அவரது சர்க்கரை நோய் தீர்க்க தொடர்ந்து உண்டார் . சிலமாதங்களில் மரணித்தார் . அவர் செய்த முப்பு காரணமா அல்லது நோய் காரணமா ? கேள்விகுறி 
ஜபார் அய்யா சேகரித்துவைத்த அண்டகல் என்ற கற்களை அவர்களிரிடம கொடுத்துவிட்டார் . அலியின் மறைவுக்குப்பின் அவர் குடும்பத்தார் அண்டகல்லை அலியின் சீடர்களிடம் கொடுத்துவிட்டார்கள் . இந்தகர்களை வைத்து இன்னும் தங்ககம் செய்தல் தொடர்கிறது . 
.
பலராமையா செய்திக்கு வருவோம் . . 
.. 
கருணாகர சுவாமிகளின் ஆதி சீடர்களில் ஒருவர் அறிவாற்றல் அரசன் என்ற ராஜாபாதர் . அவர் சொல்வதை பார்ப்போம்
“ சுவாமிகளின் தொடர்பு பலரமையவுக்கு ஏற்பட்டது . . ஸ்வாமிகள் பாதரசத்தை உயர்ந்த உலோகமாக மாற்றி பலரமையாவுக்கு காட்டினார் “ .
இந்தசெய்தி ராஜாபாதர் எழுதிய நூலின் முகவுரையில் பதிவுசெய்யப்பட்டு உள்ளது .. 
இங்கு கவனிக்கத்தக்கது “பாதரசத்தை உயர்ந்த உலோகமாக மாற்றினார் “
ஸ்வாமிகள் வேதை செய்தார் என்பது உண்மை . 
கருணாகர சாமிகள் தங்கம் செய்தார் என்பது கேள்விக்குறி
.. 
பலராமையா அமிர்தகலச நூலின் முகவுரையில் கருணாகர ஸ்வாமிகள் பற்றி குறிப்பிட்டவை . 
“இவர் ரசத்தை எளிதில் தங்கமாககுவதை பலதடவை கண்டுள்ளேன் “
அதே சாவாத மருந்து (ரசவாதமருந்து) கற்பத்துக்கு ஆகும் என்று சொல்லி இருந்தும் ஏதோ சந்தேகம் உள்ளுர இருந்து வந்ததால் கற்பம் சாப்பிட தயங்கினார் . “ 
“காய சித்தி செய்யும் காரியத்தில் ஈடுபட முடியாமல் போய்விட்டது என்று ஸ்வாமிகள் சொல்லியுள்ளார் .” . 
கருணாகர ஸ்வாமிகள் நீண்ட ஆயுள் பெறவில்லை. அவரது முப்புவை அவரே உண்ணவில்லை .
பலராமையா தங்கம் செய்ததாக எங்கும் சொல்லவில்லை . கருணாகர ஸ்வாமிகள் செய்த தங்கம் விற்கப்பட்ட குறிப்பு இல்லை . பலராமைய வீட்டில் மருத்துவம் செய்தார் . அருள் ஜோதி பதிப்பகத்தில் சித்தர் பற்றி நூல்கள் வெளியிட்டார் . ரசவாதிகள் வாசியோகமோ காய சித்தியோ செய்வாதில்லை . ஆகையால் சராசரி மனிதர் போல் மறைந்தனர் . . 
இந்த செய்திகளில் தெளிவாவது . 


ரசவாதிகள் வேதை செய்தார்கள் ஆனால் தங்கம் செய்தார்களா என்பது கேள்விக்குறி ? அவர்கள் செய்த தங்கம் விற்கப்பட்டதா என்பதும் கேள்விக்குறி ? தங்கம் போன்ற ஒன்று சிறிதளவே செய்ததாக குறிப்புகள் சொல்கின்றன .
அவர்கள் செய்த முப்பு அவர்களின் நோயை போக்கவில்லை , சிலர் முப்பு உண்ணவில்லை . முப்பு உண்டவரின் நோய் போகவில்லை மாறாக மரணித்தார்.
அவர்கள் செய்து உண்ட முப்பு .அவர்களுக்கு நீண்ட ஆயுள் தரவில்லை . காய சித்தி தரவில்லை சராசரி மனிதர்போல் மரணித்தனர் ..
எனவே தங்கம் என்று ரசவாதிகள் செய்ததது தங்கம் இல்லை . அவர்கள் செய்தது முப்பு இல்லை. 

தேனான கற்பமென்ன வாதமென்ன 
தரிசனத்தால் சமாதிகண்ட சித்தர்க்கெய்தும் 
கூரான கற்பத்தை அறியாவிட்டால் 
கொடும் பச்சை நாபிதனை கொண்டு மாள்வான் 
அகத்தியர் கற்பதீச்சை 1 0 0 


தேனான கற்ப மென்ற முப்பூ காய சித்தி தரும் . வேதை சித்திதரும். இந்த முப்பூ வாசியோகம் செய்து வாலை ஒளி கண்டவற்கு சித்தி யாகும் காய சித்தி தரும் கற்பத்தை அறியா விட்டால் கொடும் நஞ்சை உண்டு மரணிப்பார்கள் .

இந்த உலகம் முழுவது சொந்தமாக்கி தண் உயிரை விட்டு விடுவதால் நீ அடயபோவது என்ன ?” இயேசு 

தங்கம் செய்வது பற்றி சித்தர்கள் சொல்லியதை பார்ப்போம் . 

பகட்டியே பம்பரம்போ லாடினாலும் 
பாலகனே செம்பதுவும் பொன்னாமோ சொல் 
அல்லான பொன்னதனை செய்யும் யோகி 
அருந் தவத்தில் காசதுவும் கேட்பான சொல் 
அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி 4 1 1 


பகட்டாக பேசியும் , பம்பரம்போல் சுத்தி பல முயற்சி செய்வதால் செம்பை தங்கமாக்க முடியாது அப்படி தங்கம் செய்து தருகிறேன் என்று சொல்லும் யோகி அவன் உயிர்வாழ உன்னிடம் பணம கேட்பானா சொல் . உனக்கு ஏன் தங்கம் செய்ய சொல்லிகொடுக்க வேண்டும்? . அவனே தங்கம் செய்து விற்று பிழைக மாட்டான ? 

சித்தர்கள் தங்கம் என்று பரி பாசையாய் சொன்னது எதை ? 

பரியான தங்கமடா பரபிரமம மாச்சு
பாலகனே தங்கம் மென்றால் பூரணமே தங்கம் 
அகத்தியர் அந்த்தரங்க தீஷை விதி பாடல் 411 

தங்கமது மாதுபென்னால் காரத்தாலே 
தங்கமமது உடலலெல்லாம் ஆகுமப்பா 
அங்க தங்கம் மாதினுட காரத்தாட்டு 
அப்பனே சொல்லுதற்கு என்னாவில்லை 
அகத்தியர் அந்த்தரங்க தீஷை விதி பாடல் 70 

தங்கம் என்பது பர பிரம்மமான இறைவன் . அவன் உன்னுள் பூரணம் என்ற ஒளியாக உள்ளான் . அந்த வாலை ஒளி தான் தங்கம். வாலைபென்னின் காரம் என்ற அமிர்த சுரப்பாள் உடலில் உள்ளா அங்கங்கள் தங்கமாக அழிவற்றதாக மாறும் . . 

வாதிகள் தங்கம் செய்தேன் என்பது பொய்யா ? 

அகடன் கழுதையை குதிரை யாக்கி 
குன்றான காக்காயை கொக்குமாக்கி 
தென் திசையாய் இந்தவிதம் செய்வானாகில் 
தேசிகனே முற்றிளும்தான் பொன்னே செய்வான்.
வென்றிடவே பூமியின்கற்பந் தன்னில் 
விளயுதே பொன் வெள்ளி தங்கமப்பா
அகத்தியர் லச்சனகாவியம் பாடல் 81 

தேர்வேந்தே வாதமது செய்திட்டாலும் 
பாணான நிறையதுவும் பகர் வீரோ சொல் .
பாரினிலே நிறைகானார் வாதம் காண்பார் 
மானான வாதமது கடவுள் வாதம் 
மன்னவரே ரசவாதம் இல்லை தானே . 
அகத்தியர் லச்சனகாவியம் பாடல் 83


பொருள்
கழுதையை குதிரை யாகாவும் காக்கையை கொக்காக மாற்றுபவன் இருந்தால் அவன் தங்கம் செய்வான் . எனவே தங்கம் செய்ய முடியாது .. தங்கமும் வெள்ளியும் பூமியில் இயற்கையாக விளைவது .
வாதிகள் செய்த தங்கம் என்னும் பொருள் இயற்கை தங்கத்தின் குணநலன்கள் தராது . தங்கம் இயற்கையாக கிடைப்பது . ரசவாதத்தால் தங்கம் செய்ய முடியாது . கருணாகர ஸ்வாமிகள் செய்த தங்கம ஒரு உயர் தன்மை கொண்ட உலோகம் என்று திரு . ராஜாபாதார் பதிவு செய்தார் . ஸ்வாமிகள் தங்கத்தின் குண நலன் கொண்ட தங்கத்தை செய்யாததால் பெரிய அளவு செய்யவில்லை விற்கவில்லை. . பலராமையவோ அல்லது கருணாகர சுவாமிகளோ வாசியோகம் செய்யவில்லை முப்பு உண்ணவில்லை . அவர்கள் செய்தது முப்பூ என்பது கேள்விக்குறி . 

அப்படி என்றால் சித்தர்கள் ஏன் தங்கம் செய்வதை பாடினார்கள் .? 

பூதலத்தில் அநேகங்கோடி புண்ணியராய் போவாரென்று 
வாத வித்தை என்றதொரு மாய்கை தனை கட்டிவைத்தார் 
சாதகத்திலே தெளிநத்த தன்மையோரித்து அறிந்தார் , தொடர் 
பாதகத்தில் லாழ்ந்தினோர் பாரிர் கான்கவும் மாகுமே 
திரு வள்ளுவர் பஞ்ச ரத்தினம் பாடல் 149 


பொருள் 
பேராசை கொண்ட பல தீயவரும் சித்தர் கல்வி கற்க வருகிறார்கள் . இவர்களுக்கு சித்தி கிடைக்காமல் செய்ய வாதவித்தை என்ற தங்கம் செய்யும் பொய்யான முறைகளை கட்டிவைததனர் சித்தர்கள் . இத்தகைய பாதகர்களை இன்றும் காண்கிறோம் . அகையால் பெரும்பாலோர் சித்தியும் முக்க்தியும் அடையவிலலை . அறவழி பொருள் ஈட்டி வாழும் சிலரே சித்தியும் முக்தியும் பெறுகின்றனர் .. 
வாசி யோகத்தில் வாலை ஒளி உருவாக்கி . அமிர்தம சுரக்கசெய்து , உடலை தங்கமாகசெய்வோம் வாருங்கள் அளப்பறி ஆற்றலும் . அரியசெயல் செய்யும் சித்திகளையும் பெறுவோம் வாருங்கள் .
இறைவனோடு ஒன்றி முக்க்திபெற்று தான் அவன் ஆவோம் . வாருங்கள் !!!!

Related Contents