பெண் சித்தர்கள் - வாசுகி

போகர் போற்றிய வாசுகி சித்தர் பெண்பால் சித்தர் 


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலில் அமிர்தம் கடைய மேரு மலையை மத்தாக்கினார்கள் . மேருமலையை மூன்று நான்கு சுற்று சுற்றும் நீளமும் , தேவர்கள் அனைவரும் பலத்தையும் அசுரர்கள் அனைவரின் பலத்தையும் தாங்கும் திறன் கொண்ட கயிறாக வாசுகி என்ற பாம்பை கயிறாக்கினார்கள் . இவை இரண்டும மூழ்காமல் இருக்க இறைவன் கூர்மா என்ற ஆமை வடிவில் மேருவுக்கு அடியில் இருந்து தாங்கினார் . இந்த அமைப்பை கொண்டு தேவர்கள் வால் பகுதியிலும் அசுரர்கள் தலை பகுதியிலும் இருந்து பாற்கடலை கடைந்து சாகா மருந்தான அமிர்தம் பெற்றனர். ஆகையால் .. கீதையில் இறைவன்  “சர்பங்களுள் நான் வாசுகியாய் இருக்கிறேன்” என்றார் இது வேதாந்தம் . . 

siddharyogam.com
திருவள்ளுவரின் மனைவியர் பெயர் வாசுகி . வாசுகி என்ற பாம்பை போன்றே சித்த தன்மையில் சக்தி மிக்கவர் திருவள்ளுவரின் மனைவியர் வாசுகி . சித்தர்கள் தங்களை போன்ற சக்தி மிக்க சித்தர்களை போற்றுவதுண்டு. அப்படி சித்ததன்மை பெற்ற வாசுகியை போகர் போற்றி உள்ளார். இதை கொங்கணர் 3000த்தில் பதிவு செய்து உள்ளார். ஏன் பதிவு செய்தார் என்பதை பார்ப்போம் . 

கொங்கணர் 3000 நூலில் வாசுகிப்ற்றி படித்தபோது ஆச்சரியப்பட்டேன் . இதைக்கொண்டு பதிவு செய்யலாம் என்று பதிவு செய்ய ஆரம்பித்தேன் . ஆனால் மூன்று முறை தடங்கள் ஏற்பட்டது எனக்கு சரியான தகவல் கிடைக்க வில்லை என்றால் சித்தர்கள் என்னை பதிவிட முடியாமல் செய்வார்கள் . எனவே நான் வாசுகி பற்றி தகவல் சொல்ல திருவள்ளுவரிடம் வேண்டிக்கொண்டு தூங்கிவிட்டேன் . கலையில் ஞானவெட்டியில் வாசுகி பற்றியும் அவர்கள் இல்லறம் பற்றியும் தகவல் கிடைத்தது. அவற்றை சொல்கிறேன்.


திருவள்ளுவரும் – வாசுகியும்


முதலில் திருவள்ளுவர் சொன்னதை பார்ப்போம் .
தவறானபாதையில் பயணித்தல் ..

எனது பெற்றோர்கள் எனது சிறுவயதிலேயே கல்வி கற்க செய்தனர் . பத்து வயதுக்குள் சாஸ்த்திரங்களும் பிற தொழில்நுட்பங்களும் கற்று முடித்தேன் .வயது கூடியது. வாலிபம் அடையும் போது எனக்கு முன்பு கற்ற அறமும் அறிவும் போயிவிட்டது . பொருள் மீதும் பெண்மீதும் ஆசை அதிகரித்தது . அதனால் பல வித பொய்கலள் பேசி சூதுகள் செய்து அறநெறியை மறந்து பொருள் தேடினேன்.. வாய்மை இல்லாமல் பிறர்க்கு தீமை செய்து வாழ்ந்தேன் . எனவே எனக்கு பலவித செல்வங்கள் சேர்ந்தன . இப்படி வாழும் போது காரிய குருக்கள் பலர் வந்தனர் .துன்பம் சிறிதும் வராமல் எட்டுவகை ஐஸ்வர்யங்கள் நாங்கள் தருவோம் என்றனர் . அவற்ரை பெறும் விதமான வேதங்கள் , மந்திரங்கள் , பூசைகள் , செய்முறை கற்று தருகிறோம் என்று எனக்கு தீட்சை கொடுத்தனர் அவற்றை செய்ய கற்று கொடுத்தனர். இதற்கு பெரும் பொருள் பெற்று கொண்டனர் . 
பலிகொடுத்தல் முதலான கனத்த பூசைகள் , தேவதைகளுக்கும் பிதுர்களுக்கும் செய்யும் ஹோமமங்கள் ,தர்பண முறைகள் கற்றேன் .அவற்றை முறையாக செய்ய கடைபிடிக்க உபதேசம் பெற்றேன் . இவ்விதம் மந்திரம் ஓதுவதில் எனக்கு நிகர் எவரும் இல்லை . 
காம ஆசையாலும் , பொருள் ஆசையாலும் இவற்றை செய்தேன் . எனவே நான் பூசை செய்யும் போது வேசியர் எண்ணமே மேலோங்கியது. ஆனால் நான் வெறுமனே பூசை மணியை ஒளித்துக் கொண்டிருந்தேன் .
பின்பு காரிய குருக்கள் சொல்லியபடி அணைத்து பூசை ஹோமம் செய்தேன் .இதனால் உலகில் முன்னேறி முக்தியும் சித்தியும் பெறுவேன் என்று தீவீர பூசை செய்தேன் . இதனால் நான் பொருள் எல்லாம் இழந்தேன் . எனது பெற்றோர்கள் மரணமடைந்தனர் . 
மீண்டும் காரிய குருக்கள் வந்தனர் . பிறரின் செய்வினையால் உனக்கு துன்பம் வந்தது . உனது முன்னோர்களின் தோஷம் உள்ளாது பிதுர் பூசை செய்து செல்வங்கள் பெறலாம் என்று சூது செய்து என் பொருளை பிடிங்கினார்கள் .வறுமை அடைந்தேன் ஆனால் அவர்கள் சொல்லியபடி எதுவும் நடை பெறவில்லை.


வாசுகி திருவள்ளுவரை திருத்துதல்

தவறான வாழ்க்கை மற்றும் தவறான வழியை மாற்றி திருமணம் செய்ய கருதி வாசுகியை திருமணம் செய்தேன் .. ஆரம்பகலங்களில் அவரின் கண்டிப்பு பிடிக்கவில்லை . திருமணத்தால் மனையாள் கையில் மாட்டிக்கொண்டேன் என்று தவறாக நினைத்தேன் . இருவரும் குருவும் சீடரும் போல் வாழ ஆரம்பித்தோம் . ஒரு தாய் தன மகனை பராமரிப்பது போல் என்னிடம் அன்பு கொண்டார் திருத்தினார் .( தனது துணைவியை” போதி “போதித்தவர் என்கிறார்). இல்லறம் இனிமையானது .
ரதியும் மன்மதன் போல் வாழ்ந்தோம் ... வறுமையின் காரணத்தால் பசிக்கொடுமை போக்க நெசவுசெய்து அறவழியில் பொருள் ஈட்டினேன் . அன்பான இல்லறம் நடத்தினோம் . .
இவ்விதம் இல்லறம் நடத்திவரும் போது அகத்தியரை தரிசித்தோம் . அவர் பலகலைகளும் கற்று தந்தார் . அவரின் அருளால் காய சித்தி , வேதை சித்தி , யோக சித்தி, ஞான சித்தி வெற்றி பெற்றேன். அவர் கற்றுதந்த கல்வியால் நாதவிந்து அறிந்து மருத்துவம் செய்து அறவழியில் பொருள் ஈட்டினேன். எனது தரித்திரமும் வறுமையும் நீங்கியது .. எனது அனுபவத்தை தெளிவாக திருக்குறள் , ஞானவெட்டி ஆகிய பல நூல்களில் தெளிவாக தமிழில் சொன்னேன் .
திருவள்ளுவரை நல்வழிப்படுத்தி யோகபாதைக்கு கொண்டுவந்தவர் வாசுகி . வாசுகி அம்மையாரை வள்ளுவர் குருவாகவே “ போதி” என்று அவருக்கு அறிவை போதித்தவர் என்று பாடி உள்ளார் . வாசுகியும் யோகா கற்று கொண்டார் அவரும் பல சித்திகள் பெற்றார்.


வாசுகியின் சித்த தன்மைகள்
தம்பன சித்தி 


வாசுகி அம்மையாரின் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் செவி வழி செய்தியாக உள்ளது . அதில் ஒன்று . 
அம்மையார் கிணற்றிலே கையால் , கயிறும் வாளியும் கொண்டு நீர் இறைத்து கொண்டிருந்தார் . வாளியை நீருடன் பாதி தூரம் தூக்கி இருந்தார் .. அப்பொழுது திருவள்ளுவர் அவரை வீட்டிற்குள் வருமாறு கூப்பிட்டார். வாளியை அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று வள்ளுவர் சொன்ன வேலைகளை செய்து விட்டு நீர் இறைக்க திரும்பினார் வாளியும் அதனுள் நீரும் அந்தரத்தில் விட்டபடி நின்று கொண்டிருந்தது.. அந்தரத்தில் தொங்கிய வாளியுடன் நீரை இறைத்து முடித்து வீடிற்கு கொண்டுவந்தார் . இந்த செய்தியில் வாசுகியரின் தம்பன சித்து பேசப்படாமல் கணவரின் சொல்லுக்கு கீழ்படிந்த செய்தி மட்டுமே பெரிது படுத்தப்பட்டது.


ஞானசித்தி 


வாசுகி அம்மையார் ஞான திருஷ்டி பெற்றவர் . ஞான சித்தி பெற்றவர் . இதை போகர் புகழ்ந்து கொங்கனரிடம் சொன்ன செய்தியை , கொங்கணர் 3000 நூலில் கடை காண்டத்தில் பதிவு செய்து உள்ளார். இச்செய்தியை பார்ப்போம் .

கொங்கணர் 3000 என்ற நூல் செய்து முடித்து , தனது குரு போகர் மற்றும் போகரின் பாட்டனார் ( குருவின் குரு ) 
திரு மூலரிடம் ஆசிபெற நூலை சமர்பித்தார் .
இருவரும் பட்டித்து பார்த்தபின் . “சித்தர் மரபுப்படி செய்முறைகளை , தொழில் நுட்பங்களை மறைப்பாக சொல்லாமல் நேரடியாக சொல்லி உள்ளாய் . ஏன் இப்படி நேரடியாக சொன்னாய் “என்று கேட்டார்கள் . கொங்கணர் அதற்க்கு “ எனது நூலுக்கு சாபம் கொடுத்துள்ளேன் . . அதன்படி வாசியோகம் சித்தி பெற்றவருக்கு பலிக்கும் . தீயவர்கள் இதை படித்து செய்துபார்த்தால் மாறாட்டமாக பயித்தியமாவார்கள் “என்றார் . 
இதை கேட்ட போகர் “ உன்சாபததின் வீரியம பற்றி நான் அறிவேன் . முன்பு ஒருநாள் நீ தவம் செய்து கொண்டிருந்தாய் அப்பொழுது ஒரு கொக்கு உன்மீது எச்சம் மிட்டது . உன் தவம் களைந்து அந்த கொக்கை கோபத்துடன் சபித்து உற்று பார்த்தாய் . உடனே அந்த கொக்கு எரிந்து போனது . அதன் பின் தவத்தை தொடர்ந்தாய் .

பிறகு ஒருநாள் திருவள்ளுவர் வீட்டிற்கு சென்று சித்தர் மரபுப்படி உணவு கேட்டாய் .. வாசுகி அம்மையார் வள்ளுவருக்கு உணவு படைத்து பணிவிடை செய்து கொண்டிருந்தார் . ஆகையால் அவர் உடனே வர முடியவில்லை தாமதமாக உணவு கொண்டுவந்தார் .
அவரின் தாமதத்தை பொறுக்காமல் அவர் மீது கோபம் கொண்டு அவரை சபித்து உற்று பார்த்தாய். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை . நீ திகைத்து போய். நின்றாய் . வாசுகி அம்மையார் உன் பாத்திரத்தில் உணவு இட்டுவிட்டு “ கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா “ என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார் . நீயோ மீண்டும் அதிர்ச்சி அடைந்தாய் . நீ கொங்கணன் என்றும் , நீ கொக்கு எரித்தது இந்த அம்மாவிற்கு எப்படி தெரியும் என்றும் ஆச்சரியப்பட்டாய் . 
கற்புடைய பெண்டிரை சாபம் ஒன்றும் செய்யாது என்று நினைத்தாய் . கற்ப்பு என்பது உடல் சார்ந்தது இல்லை . கற்பு என்பது ஒன்றின்மீது மனதை செலுத்தி அதனுடன் ஒன்றி அதுவாகவே மாறிப்போதல் கற்பு வாசுகி வள்ளுவருடன் ஒன்றி இறை நிலையில் உள்ள வள்ளுவராக மாறிப்போனார். வாசுகி இறைவனுக்கு சமமானவர் . இது ஞான சித்தி .. 

நீ முழுவதாக ஞானம் பெற வில்லை வாசுகியை போன்று உன்மனதை இறைவனுடன் ஒன்றி நீ இறைவனாக மாறவேண்டும் . இதுவே ஞானம்..”
. கொங்கணர் இதன் பின் ஞானம் பெற்றார் 
வாசுகி திருவள்ளுவர் வாழ்வில் இருந்து நாம் அறிவது . சித்தி பெற்ற சித்தரான வாசுகியிடம் சாபாம் செல்லவில்லை. ,காமத்தின் பிடியில் இருந்து மனதை இறைவன்பால் ஒன்றசெய்ய சிறந்த வழியும் .சித்தியும் முக்தியும் பெற எளிய வழியும் வள்ளுவர் அனுபவத்தால் திருக்குறளில் சொன்னவழியும் இல் வாழ்க்கைதான்


“அறத்தாற்றின் இல் வாழ்கை ஆற்றின். 
புறத்தாற்றின் போவோய் பெறுவதுஎன்”


“வையத்துள் வாழ் வாங்கு வாழ்வார் 
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் “


. சித்தர் வழியில் சித்தி பெற விரும்புபவர்கள் குறிப்பாக இளைஞாகள் திருமணம் செய்து அறவழியில் பொருள் ஈட்டுங்கள் . வள்ளுவர் வாசுகிபோல் அன்பான இல்லறம் நடத்துங்கள் .. சித்தர் நெறி முறைகளை கடைப்பிடித்து முக்தி பெறுங்கள் . 
இல்வாழ்வில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முக்தி உண்டு .

கற்றறிந்தேன் சாஸ்திரங்கள் கல்வி நூல்கள் 
கருத்தரிய வயதனக்கு ஈரைநதாச்சு 

ஞான வெட்டியான் பாடல் 515 . 


கருத்ததனில் முன்னிருந்த அறிவும போச்சு
கனத்த பொருள் ஆசை எனக்கு அதிகமாச்சு 
வருத்தமுடன் பலசூதும் பொய்கள் பேசி 
வாய்மை தெரியாமல்மிக வாழ்ந்தேன் யானும் 
உருத்தமுடன் தரித்தபடி யுலகுக் குள்ளே
உகந்து வெகு பாக்கியங் கொண்டிருந்தேனாண்டே

ஞான வெட்டியான் பாடல் 516


அஷ்ட அயிஸ்பரியமதும் யானளித்து வான்புவியில் 
கஷ்டமணு காமலுமே காரியகுருக்கள் வந்து 
இஷ்டமறை வேதசிவ இன்பருள் பூசைவிதி 
சிஷ்டை எனக்களித்து தீடசைவைத்து ஒதினரே 

ஞான வெட்டியான் பாடல் 519


கனமான பூசை பலிதூப தீப காரணமாய் 
இனமாக சொல்லி எடுத்துரைத்தா ரிந்தபூமிதனில் 
தானகன மேவி சிவபூசை ஓம தர்பணமே 
உனதனுஷ்டான உபதேச வாக்கிய மோதினாரே 

ஞான வெட்டியான் பாடல் 521


காசுபணம் பறிக்கும் கசடர்தம் சொல் கேட்டு
நேசமுடன் பூசைசெய்த நிச்சயம் விளம்புவேனே 

ஞான வெட்டியான் பாடல் 522


துதிக்கின்றமோட்சம் வரும்மென்று பூசை துணிந்து
செய்தேன் 
ஏற்கையில் மந்திரமோதலெனை யன்றி எதிரில்லை 

ஞான வெட்டியான் பாடல் 548


வேசிகள் ஆசைவைத்து விரகத்துடனே யான் 
வெறும் பூசை மணியாட்டி வீனுக்கேயான் 
நிமித்தமாய் கண்டுரு செய்தேன் யான் 

ஞான வெட்டியான் பாடல் 524


தீராப் பெருங்கவடு செவினையினா லுரைத்த 
நேராப்பொய் யாசை சொல்லி நேர்மை யாருளாலுரைத்த
எராப் பணம்பறிக்கு மிவ்வுலகில் சூதர்களால் 
பேரா விலகுபிதிர் பூசையில் மயங்கினேனே 

ஞான வெட்டியான் பாடல் 545


ஜெனன முக்தி சித்திபெறும் தெய்வசித்தி மோட்சவரை 
உலகுதனில் லீடேறிவாழ்வதற்கு வழ்வதற்கு 
கனரத்ன மேலதிகாரியமஞ் சற்குருவந்
தினமறிந்து தீச்சைவைத்து இயம்பினவா றெய்திலேனே

ஞான வெட்டியான் பாடல்  518


காயமேடுத் துலன்றதன்பின் கருத்து மாறி

உருவெடுத்து மனையாட்டி கையில் சிக்கி
உபாயமதா யான்விளங்கி யுலகத் துள்ளே 
இருவருமே ஒருமனதாய் குருவும் சீசன் 
இருப்பது போலில்லமதி லினிவாழ்ந் தேனே

ஞான வெட்டியான் பாடல் 358


இனிஇருந்து வாழ்ந்த சங்கை எவருங்காணார் 
இகத்தில் ரதிபுருடனிருந் ததுபோ லுள்ள 
வனிதையுடன் மைகைதனில் மயங்கிடாமல் 
மனுநீதி தவறாமல் மனையால் கையில் 
தனை நினைவாய் தாயுடனே மைந்தன் கூடி
தானிருக்கும் பாவணைபோல் தனதா யொத்து 
நானிந்தப் படி எரியுங் கும்பிக்காக 
நயந்து நெய்தல் செய்துமிந்த நாட்டில் தானே 

ஞான வெட்டியான் பாடல் 334


இந்தவித மாயிருந்து வுலகனந் தன்னில் 
இனிஇருந்து வாழ்ந்ததுபோல் லெடுத்தேன் ஞானம்
பைந்தமிழ் குயர்ந்த அகதீசர் வந்து 
பலகலையு மேனக்குரைத்து பாலிதாரே 
எந்தைகுரு பரனையணு தினமும் போற்றி 
எடுத்தவடி யறிந்து நாடு முடியுங்கண்டு
சுந்தரமாய் காயசித்தி யோகசிததி 
சிவரூபசித்தி ஞானசித்தி துதி பெற்றேனே 

ஞான வெட்டியான் பாடல் 544
ஞான வெட்டியான் பாடல் 361


தரித்திரமும் வறுமையகன் றருள் பெறறாசான் 
சமுசயங்கள் விளங்கசங்கை தமிழாற் சொன்னேன் 

ஞான வெட்டியான் பாடல் 363


போகர் போற்றிய வாசுகி


அருளான மூலநாயன் 
அடியேனை அழைத்து நன்று 
பொருளான போதம வாதம் 
போக்கோடு நன்றாய் சொன்னாய் 
மருளாதே லோகத் தோர்கள்
மறைப்பைஏன் வாங்கி போட்டாய்
கொங்கணர் கடை காண்டம் பாடல் 228

சாபம்தான் தாயும் போட்டால் 
தனிப்பின்பு யானும் போட்டேன்
கோபம்தான் கொடும் பாவிக்கு
தொழில்காணா மயங்கி போவார் 
கொங்கணர் கடை காண்டம் பாடல் 239


சபித்தாய் கொக்கை யன்று
தனிக் கோபம பெண்ணின்மேலே 
எபிததாய் நீ ஏறா தேனோ
இதமென்ன ஊணிப பாரு 
அபித்தாய் நீ கற்பினோடு 
ஆடாதேன் சித்தர் சொல்லாய் 
கபித்தாய் நீ கற்பே தென்னில்
கடுவென்றி யொன்றி னாளே
கொங்கணர் கடை காண்டம் பாடல் 240


ஒன்றினாள் பத்தா மேலே 
கொங்கணர் கடை காண்டம் பாடல் 241

தானென்ற அவளை போலே 
தனித்த தோர்மனதே யொன்றாய்
வானென்று கடந்து பாரு 
மகத்தான ஞான சித்தி 
கொங்கணர் கடை காண்டம் பாடல் 242