சித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 8

சென்ற பகுதியில் வேற்றுகிரக சித்தர்களுக்கு தங்க குரு அல்லது தங்ககலங்கு குரு செய்யும் முறை சொல்லிக் கொடுத்தார் அதன்பின் நடப்பதை பார்ப்போம் . 

அற்புதம் சொன்னேன் அடங்கா பறிகுரு 
கற்பகம் ஈடோ கலங்கா குரு முன்னே 
நிற்புத சங்கம் நிறைந்தேறும் தொந்தனை 
நாற்பதஞ் சூதத்தை நாட்டி குருபாரே 
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 401 

பாரேன்றீர் மூலர் பராபரர் வென்னையா 
வாரின்றி பண்ணவும் மார்றோர்க்குங் கூடாது 
கூரேன்ற வித்தை குரு தெடசனை கேளும் 
தாரென்றதங்கமும் தாக்குங்க்கான் ரத்னமே 
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 402 

ரத்தினத்தோடே நலமான தங்கமும் 
ஓதித்த சாரணை யோர்முன் குளிகைக்கு 
மத்திதகு எடுத்தது வாய்பேச் சிருக்கையில் 
கொத்தித்த காந்தியும்ங் கொடிய ரவியாச்சே 
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 403 

ஆச்சே குளிகையால் அப்பால் கடந்திட்டே
பாச்சே சலமாய்ப பரவிச்சு வோரண்டம் 
நீச்சே கடந்தே நிறைய நுழைந்திடில் 
வாச்சே சமாதியில் வல்லோர் இருந்தாரே 
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 404

இருந்தோரைச் சுற்றி எழிலாய் மறுவண்டம்
பரிந்தே நுழைந்தேன் நான் பட்டம் பகல்போலே
தெரிந்தே நல்வரவு திரண்டது அவ்வண்டம் 
அறிந்தே கடந்தேன் அடுக்கெல்லாம் போனேனே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 405

நுழைந்தேன் அதுக்கெல்லாம் நுகர்ந்து ஆயிரத்தெட்டு 
மலைந்தேன் திரிந்தபின் ஆசையும் வர்சித்தேன் 
நுழைந்தேன் சகலமும் ஓடினேன் ஆடினேன் 
தழைந்தே சமாதியில் தானானேன் நந்தியே
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 406 

தானே அவனாகத தான் அவன் நானாக 
ஊன நற்கோட்டம் உறுதி முத்தப்பண்னு
வானே நல்வாசியை வைத்துவைத் தங்கங்கே 
பானே பழக்கமாய்ப பார்த்து தெளிந்திடே 
திரு மூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 407

பொருள்

அற்புதமான சக்தி வாய்ந்த தங்ககலங்கு குரு சொன்னேன் . கேட்டது எல்லாம் தரும் கற்பக விருச்சம் இந்த தங்க கலங்கு குருவுக்கு ஈடு ஆகாது ., இந்த தங்க கலங்கு குருவுடன் பாதரசம் சேர்த்து செய்த குளிகைக்கு உறிய சாரணை கொடுங்கள் . இந்த குளிகை ஒரு சங்க வேகம் தரும்.
தங்க குரு (செய்முறை) செய்ய சொல்லிக் கொடுத்து செய்து பாருங்கள் என்றீர்கள் இறைவனுக்கு ஒப்பான உங்களை போல் யாராலும் சொல்லிக் கொடுக்க முடியாது. மிகவும் நுணுக்கமான வித்தையை குருவாக இருந்து கருகக் கொடுத்தீர்கள் . அதற்கான குரு தக்ஷ்சனை கேளுங்கள் . நாங்கள் உங்களிடம் சொன்னது போல் இயற்கை தங்கமும் , இரத்தின்ங்களும் தருகிறோம் என்றனர் .
நான் “ குளிகைக்கு தங்கமும், இரத்தினங்களும், பிறவற்றையும், சாரனையாக, கொடுங்கள் . நான் சொன்னபடி கமலினி குளிகை செய்து அதை வாயில் அடக்குங்கள் .. உங்கள் உடல் ஒளிவுடம்பாகி சூரியன் போல் பிரகாசிக்கும் .இதுவே குரு தக்ஷ்சனை” 

எனக்கூறிவிட்டு சொரூப குளிகை உதவியால் அங்கு இருந்து புறப்பட்டு வேறு அண்டம சென்றேன். அந்த அண்டம் முழுவதும் நீரால் நிறைந்து இருந்தது . அதைவிட்டு வேறு ஒரு அண்டம் சென்றேன். அந்த அண்டத்தில் சித்தர்கள் சமாதி நிலையில் இருந்தார்கள் 

அவர்களை சுற்றி வணங்கினேன் மேலும் அழகான மறு அண்டம் சென்றேன் . அங்கு பகல்போல் ஒளி வீசிக்கொண்டு இருந்தது . அங்கு இருந்தவர்கள் திரண்டு வந்து நல்வரவு கூறினார்கள் . அவர்களை பற்றி அறிந்தேன் அந்த அண்டத்தை கடந்தேன் . இந்தபிரபஞ்சதின் ஐந்து அடுக்குகளுக்கும் அதில் உள்ள ஆயிரத்து எட்டு அண்டங்களும் சென்றேன் . 
அதன்பின் சகல இடங்களுக்கும் அலைந்து திரிந்து சித்து விளையாடினேன் . அனால் அவை எல்லாம் எனக்கு நிறைவை தரவில்லை . வாசி யோகத்தில் ஆசைவைத்து வாசியோகம் செய்தேன் . . வாசி யோகா சமாதியில் ஆழ்ந்தேன் . அந்த சமத்தில் நான் நந்தி என்ற சிவனாக மாறி முக்தி பெற்றேன் . 
நான் குளிகைகள் செய்தேன் அறுபது கோடி சித்து விளையாடினேன் ஒளிஉடம்பு பெற்று பிரபஞ்சத்தில் உள்ள ஐந்து அடுக்குகையும் அதில் உள்ள ஆயிரத்து எட்டு அண்டங்களையும் சுற்றிவந்தேன் . பல மேலுலக சித்தர்களை கண்டேன் சகல இடங்களும் ஓடித்திரிந்து சித்து விளையாடினேன். அதில் நிறைவு இல்லை பயன் இல்லை வாசி யோகம் செய்து சமாதி நிலையில் நந்தி என்ற சிவனானேன் . பேரின்பம் பெற்று முக்தி அடைந்தேன் . 
எனவே என்போல் , நீங்களும் வாசி உருவாக்கி அதை எழுதளங்களில்வைத்து வாசியோகம் செய்யுங்கள் அதனால் உடலை காய சித்தி செய்யுங்கள் . அதன்பின் சமாதி நிலையில் தான் அவன் என்ற இறைநிலை அடையுங்கள் . இதுவே முக்தி . பேரின்பம் . 
திருமூலரின் பிரபஞ்ச பயணம் நிறைவு பெற்றது. நமது சித்தர்கள் பற்றிய பயணத்தை தொடருவோம் . 

Related Contents