சித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 6

சித்தர்களின் பிரபஞ்ச பயணம் தொடர்ச்சி 

சென்றபகுதியில் திருமூலரரிடம் சொருப குளிகை திருடியவரை பிரபஞ்ச வெளியில் துறத்தி சென்று பிடுங்கி வந்ததை பார்த்தோம் . திருமூலர் பிரபஞ்ச பயணத்தை தொடர்கிறார்.. பலவித வேற்றுகிரக மனிதர்களை சந்தித்த அனுபவங்களை சொல்கிறார்.

வந்தே அடுக்கு வளமாக சோதித்து 
பந்திகீழ் அண்டம் பாய்தேன் அடுக்கொன்றில்
அந்தித்த மேனி அதிவென் சங்குபோல் 
சிந்தித்த சித்தர் சேர சமாதியே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 387 

சமதியைகண்டு சரண்ம் பணிந்தேகி
வாமாதிதத வனம் அதுவிட்டு ஓடையில்
ஓமாதித்த சித்தர்கள் ஒளிபார்கில் இரத்தம் போல் 
குமாதித்து உலாவையில் கூடிமுன் நின்றேனே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 388

நின்றவனை பார்த்து நீர் ஆரேன்றார் சித்தர்
தொண்டன் அடியேன்காண் சொற்பெறுமூலன் காண்
அண்டே இரும் என்றார் அப்பனே வாவென்றார் 
கண்டேனே சாரணை காட்டுறார் சித்தரே 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 389

காட்டுறீர் சித்தரே கடுமணி பேரேது 
தாட்டிய வட்டமா சித்தி மணியிது
நீட்டிகமலினி நேருண்டோ இல்லையோ
தாட்டிகம் போறாது தன மாத்திரைஉண்டே 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 390

உண்டென்றீர் மாத்திரை உறமேன் பிறக்காது 
மண்டிய தங்கம் வளமாய் குருகாண 
முண்டியே தொந்தனை யோடிடும் சூதத்தை 
தாண்டியே கட்டிட சார்பை அறியோமே 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 391

அறிய த்தினாலோ அப்பனே மாத்திரை 
மறியா சுருக்கு மகத்துவமும் இல்லை 
குறியாக சொல்லாயோ கூட்டுறோம் சாரணை .
பரிவான வண்டத்தில் பிறந்த பறிகேளே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 392

கேளே பறிதான் கெடியாயிர மாற்று 
நாளேற ரத்தினங்கள் நாலாற்றின் மேற்ரறுண்டு 
வாளே யுபரச மாற்றான் வெகுஉண்டு 
தானேறத் தாரோம் தங்க குரு சொல்லே 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 393

சொல்லுறேன் சித்தரே சூட்சாதி சூட்சமாய்
கல்லும் பழுக்க கவனமும் கொடுபோக 
மல்லிய தீபநீர் மாறாதம் உண்டிட 
நல்லுங் கமலினி நல மாறகம் கேளே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 394


என்னிடம் குளிகை திருடியவனை துரத்திசென்று என்னுடைய சொருபகுளிகையை அவனிடம் இருந்து பிடிங்கிவிடேன் . அவனை அந்த அண்டத்திலேயே விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் . அந்த அடுக்கில் உள்ள பிற அண்டங்களை பார்த்தேன் . அவற்றின் செழுமைகளை பார்த்தேன்.
அதன் பின் அடுத்த அடுக்குக்கு வந்தேன் . அங்கிருக்கும் அண்டங்களை பார்த்தேன் . அதில் ஒரு அண்டத்தில் சங்கின் வெண்மைநிறம் கொண்ட சித்தர்கள் இருந்தார்கள். அவர்கள் சமாதி நிலையில் இறைவனுடன் ஒன்றி இருந்தார்கள் . எனவே அவர் களுக்கு சரணம் செய்தேன் . அவர்களை தொந்தரவு செய்யாமல் பிற அண்டங்களை பார்க்க சென்றேன்.

அங்கு சிவப்பு ஒளிவீசும் உடல் பெற்ற சித்தர்கள் ஓம் என்று மந்திரம் செபித்துகொண்டு உலாவிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் முன்சென்று வணங்கி னேன் . அவர்கள் 

நீங்கள் யார் “. என்றனர் .

நான் உங்களின் தொண்டன் . என்பெயர் திருமூலன்” என்றேன் 
நீங்கள் சிறிதுநேரம் அங்கேபோய் இருங்கள்” என்றனர் .

சிறிது நேரம் கழித்து என்னை அழைத்தார்கள். அவர்கள் பாதரச குளிகைக்கு சாரணை கொடுத்து கொண்டு இருந்தார்கள் . அதை எனக்கு காண்பித்தார்கள் . 
சாரணை என்பது திரவநிலை பாத ரசத்தை திடபொருளாக்கி . அதை உருண்டை வடிவ குளிகை செய்வார்கள் . அதன் பின் தங்கம் வெள்ளி , போன்ற உலோகங்கள் வைரம், முத்து போன்ற சிலாசத்து நிமிளை போன்ற 120 உபரசங்களின் சத்துகளை பிரித்து எடுத்து அதை திடநிலை பாதரசத்திற்கு ஏற்று வார்கள் . இப்படி சாரணை ஏற்றப்பட்ட குளிகையை மணி என்றும் சொல்லுவார்கள்.சாரணை கொடுப்பதன் தன்மைக்கு ஏற்ப குளிகையின் தன்மையும், சக்தியும் பெயரும் மாறும் . ஆகையால் அவர்களிடம்

 நீங்கள் சாரணை செய்த மணியின் பேர் என்ன ? “என்று கேட்டேன் 
அவர்கள் “ இது பெரும் சக்தி வாய்ந்த அஷ்ட சித்தி குளிகை” என்றனர் 
நான் “ இந்த குளிகைக்கு சாரனை போதாது. கமலினி குளிகைக்கு சமமாகாது . சாரனையின் தன்மாத்திரைகள் என்ற நுட்ப முறை போதாது “ என்றேன் .
அவர்கள் “ எங்களுக்கு தங்கத்தை குருவாகசெய்து அதை பாதரசத்துடன் திணித்து குளிகை செய்யும் முறை அறியவில்லை . ஆகையால் நாங்கள் கொடுத்த சாரனையில் திறம் இல்லை. . ஆகையால் எங்கள் குளிகையில் மகத்துவம் இல்லை. . நீங்கள் சாரனை செய்வதில் நுட்பம் உண்டு என்று சொன்னீர்கள் . தங்கத்தை குருவாகும் முறை சொல்லி கொடுங்கள் . அதன்படி சாரணை ஏற்றுகிறோம் . எங்கள் புவனத்தில் ஆயிரம் மாற்று தங்கம் உண்டு . இருபத்தி நான்கு வகை ரத்தினங்களும் , பலவித உப ரசங்களும் உண்டு . அவற்றை உங்களுக்கு தருகிறோம் .” 

நான் “ சொல்கிறேன் சித்தர்களே . தங்க குருபன்னும நுட்பபமான சூட்சங்க்களை சொல்கிறேன் .. இதனால் கல்லும் பழுத்து தங்கமாகும் . கெவுணம் பாய்தல் என்ற ஆகாயத்தில் பறக்கும் சக்தி கிடைக்கும் . சாகாநிலை தரும் தீபநீர் உண்பதற்கு சொல்லி தருகிறேன் . கமலினி குளிகை செய்முறை சொல்லி தருகிறேன் . “ என்றேன் .
திருமூலர் சொல்லிக் கொடுத்ததை வரும் பதிவில் பார்ப்போம் !! 

Related Contents