சித்தர்கள் இந்த பிரபஞ்ச குடிமகன்கள். அக்காலத்திய அறிவியலார் . அன்பின் அடிப்படையில் இன்பமாக வாழும் மகத்தான நெறிமுறைகளை மனித இனத்துக்கு வகுத்துக் கொடுத்தவர்கள் . மனித பிறவியின் குறிக்கோளைச் சொல்லி அதை அடையும் முறையையும் சொன்னவர்கள் .. மனிதன் இந்த உலகில் இரண்டு வகை இன்பம் பெறவேண்டும் . ஒன்று உலக வாழ்வில் பெரும் சிற்றின்பம் . மற்ற ஒன்று இறைவனை தன்னுள் கண்டு siddharyogam.comஅடையும் பேரின்பம் . இரண்டு இன்பங்களையும் பெறும் அறிவியல் தொழில் நுட்பம் சொன்னார்கள் . அந்த வழிமுறைகளில் வெற்றி பெறுவதைச் சித்தி என்றார்கள் . அவ்விதம் வெற்றி பெற்றவரைச் சித்தர் என்றார்கள் . இந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுக்கும் கல்வியைச் சித்தர் கல்வி என்றார்கள் .இந்த கல்வியைச் சொல்லி கொடுப்பவர் யோக குரு அல்லது ஞானகுரு என்றனர் , இந்த சித்தர்கள் அறிவியல் நிகழ்வாகச் செய்ததை அமானுஷ்ய சக்தி என்றும் அற்புதங்கள் என்றும் சாதாரண மனிதர்கள் நினைத்தனர் . மனிதன் சிற்றின்பமும் பேரின்பமும் பெற அடையவேண்டிய சித்திகள் நான்கு . 1. காயசித்தி = நோய்கள் நீங்கப்பெற்று, ஆரோக்கியமான ,இளமையான நீண்ட ஆயுள் உள்ள மரணம் இல்லாத உடல் பெறுதல் .. இத்தகைய உடலே சிற்றின்பம மற்றும் பேரின்பம் அனுபவிக்கத் தகுதி வாய்ந்தது . 2. வேதை சித்தி =அறிவியல் முறையில் ஒரு பொருளை வேறு பொருளாக மதிப்பு மிக்கதாக மாற்றுதல் . உலக ஆதாயம் பெறுதல் . தொழில்வெற்றி . பாசானங்களை மருந்தாக மாற்றுதல் . தீராத நோய்கள் தீர்த்து காய சித்திக்கு உதவுதல். 3. யோகசித்தி = (யோகா பற்றி , முகப்பில்பார்க்க ) யோகா என்றால் இணைத்தல். இல்லறவாழ்வில் இணைந்து உலக இன்பம் பெறுதல் , இறைவனுடன் இணைந்து பேரின்பம் பெறுதல் ஆகிய இரண்டுக்கும் அடிப்படையானது . யோகசித்தி பெற்றால் யோகி. siddharyogam.comயோகியே உயர்நிலை யோகம் செய்து சித்தர் ஆவார் . சித்தரே ஞான சித்தி பெறமுடியும் . 4.. ஞானசித்தி இறைவனை தன்னுள் ஓளியாகக் கண்டு இறைவனுடன் இணைதல் . அதில் கிடைக்கும் பேரின்பத்தை அனுபவித்தல். இதுவே முக்தி . முக்தி பெற்ற சித்தர்கள் ஞானிகள் . பேரின்பப் பாதை : நான்கு படிகளைக் கொண்டது சரியை = இறைவனை வணங்குதல் , போற்றுதல், பாடல் , வேண்டுதல் . பூஜை செய்தல் . கிரியை = இறைவனை வேள்விகள், சடங்குகள் செய்து பூசித்தல் யோகம் =வாசியோகம் முதலிய வழிகளில் இறைவனைத் தன்னுள் ஒளியாகக் காணுதல் ஞானம் = இறைவனைக் கண்டு இறைவனுடன் ஒன்றுதல் . சரியை கிரியை பக்தி மார்க்கம் . இதை பக்தி யோகம் என்று சொல்லுவார்கள் . ஆனால் இது யோகமார்க்கம் இல்லை . யோகமும் ஞானமும் யோக மார்க்கம் . யோகா மார்க்கத்தில் சித்தி அல்லது வெற்றி பெற்றவர் சித்தர்கள் . சித்தர்கள் செய்ததை அறிந்தால் சித்தர்களை நன்கு புரிந்துகொள்ள முடியும் Related Contents இந்த வலைத்தளத்தில் உள்ள பாடம் மற்றும் செய்திகளுக்கு விளக்கம் அளிக்கப்படும். பாடங்களை கற்று பயிற்சி செய்து அதில் வரும் சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெளிவுபெறுவதற்காகவே நிறுவப்பட்ட siddaryogam discusion குரூப்பின் Link இதோ https://t.me/joinchat/AAAAAEKomRN-aMSEFHINbA |