சித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 2

சித்தர்கள் பிரபஞ்ச பயணம் தொடர்ச்சி

திருமூலர் செய்த பிரபஞ்ச பயண அனுபவம்

சென்ற 3 ஆம் பகுதியில் திரு மூலர் அண்டத்தில் புகுந்தது , அறிவில் வெகு உயர்ந்த மனிதரை சந்தித்தது , மௌன யோகா சித்தர்களை பார்த்தது , நம்மை போன்ற அறிவுடைய மனிதர்களை சந்தித்து உரையாடுவது ஆகியவற்றை பார்த்தோம் . இந்தப்பதிவில் அவர்களின் உரையாடல் தொடர்ச்சி பற்றி  பார்ப்போம்.

இந்தபிரபன்ச்ம ஐந்து மடக்குடன் 1008 அண்டம் கொண்டது என்று சித்தர்கள் கணக்கிட்டு உள்ளனர். இன்றைய பிரபஞ்ச அறிவியல் காணாதது , மேலும் நமது பூமி பிரபஞ்சத்தில் எந்த இடத்தில் உள்ளது என்பதை சொல்லி உள்ளார் திடுமூலர் . அவற்றை பார்ப்போம் .


பார்த்திடு என்றிறே நீர்பார்கும் நூல் எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்றுஅறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பபதே

திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 361

படிக்கின்ற நூலில் பயனெல்லாம் சொல்லுமோ
படிக்கின்ற நூலில் பாய்சுமோ சாரணை
படிக்கின்ற நூலில் பறித்தான் குருவாமோ
படிக்கும் பதினாறும் பாங்காமோ சித்தரே

பாங்காமோ எட்டெட்டும் பலபல சித்தொடு
வாங்காமல் ஆடலாம் மற்றோர்க்கு கிட்டாது
தேங்காமல் தேங்கும் சிவயோக பூரணம்
தூங்காமல் தூங்கும் சொருபத்தை காட்டுமே

வேற்று கிரக (சித்தர்கள் ) மனிதர்கள் என்னிடம் (திரு மூலரிடம் ) “ சிவன் எழுதிய எழு லட்சம் பாடல்களை சுருக்கி ஆயிரம் பாடல்களாக பாடப்பட்ட நூலை படிக்க சொன்னிரே, அந்த நூல் எங்கு உள்ளது:? “
என்றனர் .
நான் (திருமூலர்) “” இந்த அண்டம் உள்ள மடக்கிற்கு( அடுக்கு ) முன்பு உள்ள அடுக்கில் 160 ௦ வது அண்டத்தில் பூமியில் சித்தர்கள் குழுவாக விரும்பிப்படிக்கும் நூல் ( திரு மூலர் ) நந்தி நூல் 1000 “

பொருள் பாடல் 3 6 2 

மேல் உலகத்தோர் “இந்தநூல் சிவன் சொன்ன எல்லா பயன் பாடுகளை சொல்லுமா ? பாதரசத்திர்க்கு சாரணை செய்து குளிகை ஆக்கும் முறை சொல்லுமா ? தங்கத்தை குரு மருந்தாக மாற்றும் முறை சொல்லப்பட்டு இருக்கிறதா ? சிவன் சொன்ன பதினாறு அத்தியாயங்கள் அதில் உண்ட ?” என்றனர்

பொருள் பாடல் 3 6 3

நான் “ இவை அனைத்தும் உள்ளது . மேலும் 64 சித்திகள் பெறும்முறை ,. பல சித்து என்னும் அபூர்வ செயல் முறைகள் சொல்லப்பட்டு உள்ளது செய்து பயன் பெறலாம். சிவயோகம் செய்முறை முழுமையாக சொல்லப்பட்டது . துங்காமல் தூங்கி என்ற சொரூப சித்தி என்ற முக்தி நிலை பெறலாம். இது சிவ யோகிக்கு கிடைக்கும் பிறருக்கு கிடைக்காது .” என்றேன்


திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல்


காட்டும் மென்றீர் நூலை கைக்குள்ளாறீபேர்சொல்லும்
நாட்டிய வாசிக்கு குருநாத நந்தி தான்
கூட்டினார் சித்தர்க்குக்கொடுத்தார் தான் இந்நூலை
ஆட்டிய மூலர் தான் அறைநத நூல் என்பரே

திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 364


அறைநதுநீர் சொல்லவோ என்ற திருமூலர்
மறைத்தே மயங்கியே வார்த்தையால் நீர்சொன்னீர்
குறைந்திடுமோ நூலை கொடுத்தாக்கால் பூரணம்
உரைதேழு லட்சமும் ஒண்ணாக் கரிதென்னே

திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 365


அரிதல்ல காணும் அகப்பட்டால் வாசிதான்
புரிதல்ல மூலத்தில் புகட்டினால் வாசியை
எருதல்ல நந்தி எழுநூறும் ஒணறாகப
பெரிதல்லோ நூலை பேசவறி நீரே

திரு மூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 366


பொருள் பாடல் 364

“சொருப சித்தியை காட்டும் நூல் எழுதியவர் பெயர் சொல்லுங்கள்”
என்றனர் ( வேறு உலகத்தார் )
நான் “ எனக்கு வாசி யோகம் சொல்லிக் கொடுத்து இந்த நூல் எழுத குருவானவர் நந்தி என்ற சிவன் . அதை சுருக்கி எழுதி சித்தர்களுக்கு கொடுத்தவர் திரு மூலர் என்று சொல்லு வார்கள் “ என்றேன்.

பொருள் பாடல் 365

“சிவன் சொன்ன ஏழுலட்சம் பாடலை சுருக்கி எழுதுவது அரிதான செயல் . அத்தகைய அருமையான நூலை திரு மூலனாகிய நான் எழுதினேன் என்றால் siddharyogam.comநூலின் பெருமை குறைந்து விடும் என்று கருதினீர்கள் . ஆகையால் நூல் எழுதியவர் பெயரை மறைத்தும் தெளிவாக சொல்லாமல் மயக்கியும் நீர் சொன்னீர் “ என்று சொன்னார்கள் வேறு உலக வாசிகள்

பொருள் பாடல் 366

பேசுவதற்கு அரிதான நந்தி எழுதிய எழுலட்சம் பாடல்களை அவரே சுருக்கி 7 0 0 பாடல்களாக எழுதி உள்ளார் . மூலாதாரத்தில் இருந்து வாசி யோகம் செய்து வாசி யோகம் சித்தி பெற்றவருக்கு . இவ்விதம் சுருக்கி எழுதுவது அரிதான செயல் இல்லை . siddharyogam.comவாசி யோகா சித்தர்கள் பெற்ற உயர்ந்த அறிவால் சிவனின் பாடல்களை.. புரிந்து அதன் சாரத்தை சுருக்கி விடுவார்கள் ..

இந்த பாடல்களில் ஒரு பெரிய உணமை உள்ளது . சிவன்இந்த பூமியிலுள்ளவர்களுக்கு அறிவியல் போதித்து உள்ளார் . மேலும் வேற்று உலக மக்களுக்கும் அதே அறிவியல் சொல்லி உள்ளார் . . சிவ வழிபாடு இந்த பூமி தவிர பிற அண்டங்களிளும செய்யப்பட்டு உள்ளது .. .

Related Contents