சித்தர்கள் பிரபஞ்ச பயணம் [Space Travel] - பகுதி 7

எச்சரிக்கை
மேலே சொன்ன பாடல்களில் மற்றும் சித்தர்கள் பாடல்களில் பாதரசம், பாசாணாங்கள்,உப்பு, புளி, தங்கம், வங்கம் ஆகிய வேதிப்பொருள்களை பயன்படுத்தி தங்க குரு செய் முறை மற்றும் மருந்துகள் செய்முறை , குளிகைகள் செய்முறை பரி பாசையில் சொல்லப்பட்டு உள்ளது .
எச்சரிக்கை அறிவிப்பு -சித்தர்கள் எச்சரிக்கை..
வாசியோகம் சித்தி ஆகாமல் வேதை செய்ய முற்பட்டால் பிணமாவார்கள் என்று சட்டை முனி எச்சரிக்கை செய்கிறார். 

siddharyoga.com
காணப்ப லேகுவாக மூலம் பார்த்து 
கைமுறையாய் வாசிகொண் டூதியூதி 
ஊணப்பா சக்கரத்தில் நின்று நின்று 
உத்தமனே நந்தி கண்டால் வாதங்கானும் 
தோணப்பா வெறும் பேச்சால் வார்த்தை சொன்னால் 
சுடுகாட்டில் பிணமான சொல்லுக்கொக்கும் 

சட்டமுனி வாத காவியம் பாடல் 5

சட்ட எச்சரிக்கை
பாசாணங்களும் சில மூலப்பொருள்களும் சட்ட அனுமதி பெற்றவர் கையாள வேண்டும். இல்லையென்றால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். உதாரணம் வெடி உப்பு : இது அம்மோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் .. இது தீவிர வாதிகளால் குண்டு செய்யப் பயன்படுத்தப்படுகிறது . அனுமதி இன்றி வைத்திருந்தால் சட்டப்படி கைது செய்ய ஏதுவாகும் .
இது போன்றே பாசாணங்கள் தெரியாமல் அல்லது தவறுதலாக உட்கொண்டால் மரணம் ஏற்படும் . அப்பொழுது சட்டநடவடிக்கை ஏற்படும் .
siddharyogam.com
இந்தப் பதிவிலும், பிற பதிவுகளிலும் சொல்லப்படும் வேதிப் பொருட்கள் அல்லது மூலப்பொருள்கள் அறிந்துகொள்ள தகவலுக்குச் சொல்லப்பட்டவை . செய்து பார்க்க வேண்டாம் . 
பல அன்பர்கள் வேதியை துல்லியமாக வெளிப்படையாக அறிய விரும்புகிறார்கள் . நான் வேதை பற்றி முழுமையாக அறிந்தவன் இல்லை . எனக்குச் சொல்ல அனுமதி இல்லை . சித்தர்களும் சட்டமும் அனுமதி தரவில்லை. யோகமும் ஞானமும் சொல்ல அனுமதி ..
.
சித்தர்களின் பிரபஞ்ச பயணம் . தொடர்ச்சி 

சென்றபகுதியில் திருமூலரிடம் வேற்று கிரக மனிதர்கள் தங்க குரு என்ற பறிகுரு செய்யும் விதம் கேட்டனர் . அதற்கு திருமூலர் பறிகுருவுடன் கமலினி குளிகை செய்வதையும் சொல்கிறேன் என்றார் . அவர் சொல்வதைக் கேட்போம்.

கேளீர்நற் கார்முகில் கெடியான மாசூத 
மாளீர் புளி உப்பு மத்தி கொளுத்திடு
வாளீர் விசைதான் வளமாக வொன்பது 
நாளிர் தவமித்ரம் நாடி உருக்கிடே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 395 


உருக்கிய சூதத்தில் ஊட்டிய சாரணை 
பருக்கும் பிரிக்கும் பகை எல்லாம் தீதானே 
தெருக்கில் விடுவிக்க நிர்மலமாய் நிற்கும் .
தருக்கிய தங்கத்தில் தாங்கும் சரியிதே . 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 396 


சரியா விச் சூதம்போல் தாக்கு நிமிளையை 
விரிவாய் உருக்கி மணிபோல் அதை வாங்கி 
தரியான வீரம் சமைத்திடு வென்கண்டர் 
பிரிவு ஆயிரத்தோடு பேணும் குருவண்டே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 397 


குரு வண்டினொடு கூட்டிட்டு வண்டதோல்
மருவிய சூதம் மகத்தான பூரமாம் 
தருவிய ஏழும் தணிக்காம நீரால் 
மருவி அரைத்துநீ பைச்சாய் மணிக்கேதான் 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 398 


மணியை ரவிபட வைப்பாய் தினம் பத்து 
அணியவே காமநீர் அப்பி வாசித்தலும்
பிரியா திறிவங்கம் பேராம் அடர்த்துதங்க 
கணிய அரைத்து கவசித்து உலர்த்திடே 
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 399 


உலர்ந்தபிறகு உறவை மிறிவிலே 
கலந்தே நாள்திக்கும் காட்டிடாய் நாள் பீடம்
தலத்தே வெளியிலே தாக்கு புடம் ஒன்று 
வளத்த குருவாகும் அற்புதம் சித்தரே
திருமூலர் கருக்கிடை வைத்தியம் 600 பாடல் 400 குளிகை சாரணை விளக்கம் 
தங்கத்தை குருவாகச் செய்ய வேண்டும் . அதைப் பயன்படுத்தி திரவ பாதரசத்தை , திட பாதரசமாக மாற்ற வேண்டும் . அதை வாயில் அடங்கும் அளவு உருண்டையாகச் செய்ய வேண்டும் .அதில் பாசாணங்களும் , உபரசங்களும் , ரத்தினங்களும் , உலோகங்களும் சத்தாக மாற்றிக் கொடுக்க, அதை திடபாதரச உருண்டை உண்டுவிடும் .. இது சாரணை .. இவ்விதம் குளிகைக்குச் சாரணை செய்ய வேண்டும் . 
இது வியத்தகு வேதை . இங்கு பொருள் திணிவு கொள்கை (Law of conservation of mass ..) தோற்கடிக்கப்படுகிறது . மேலும் கருங் குழி தியரி நிரூபிக்கப்படுகிறது (Theory of Black hole ) . அதாவது ஒரு கருங் குழியில் கொடுக்கப்படும் பொருள்கள் அனைத்தும் உட்கொள்ளப்பட்டுவிடும் ஆனால் அதன் அமைப்பு மாறாது . இங்கு பாதரசத்தில் ஒரு கருங்குழி உருவாக்கப்படுகிறது . ஆகையால் அதில் கொடுக்கப்படும் பொருள்கள் தன்மயமாக்கப்படுகிறது . . இதுவே சாரணை என்ற அறிவியல்அத்தகைய பாதரச குளிகைக்கு 120 உபரசங்களும் , 64 பாசாணங்களும், நவரத்தினங்களும் , நவ லோகங்களும் சாரணை கொடுக்க அதன் தன்மை உயரும் இது ஒரு சாரணை இதனால் . கருங்குழி விசை அதிகரிக்கிறது . இதுசகடு குளிகை . இதுபோல் ஒன்பது சாரணை கொடுத்தால் கமலினி குளிகை . பதினைந்து சாரணை கொடுத்தால் சொரூப குளிகை . இப்படி கருங்குழி உருவாக்க தங்க குரு செய்யவேண்டும் . அதைக் கொண்டு பாதரச குளிகை செய்யவேண்டும் . வேற்று கிரக மனிதருக்கு தங்க குரு செய்யும் தொழில் நுட்பம் தெரியவில்லை இங்கு திருமூலர் அவர்களுக்கு தங்க குரு செய்யும் தொழில் நுட்பம் சொல்லிக் கொடுக்கிறார் 
இவ்வித சாரணை செய்த கமலினி மற்றும் சொரூப குளிகைகள் கருங்குழி உருவாக்குவதுடன் ( Black hole ) அதிவேகப்பயணம் செய்யும் புழு துளை( worm hole ) உருவாக்கும் .. எனவே இவற்றை வாயில் அடக்கினால் மனிதன் ஒளிஉடம்பு பெற்று வெகு வேகமாக பயணம் செய்ய முடியும் . இதை சட்டைமுனி வாதகாவியத்தில் பாடல் 257 இல் சொல்லி உள்ளார் . 
siddharyogam.com

ஆட்டான சொரூப மணி ஆட்டைகேளு . 
அப்பனே வாயில் இட தேகம் இல்லை 
மூத்தான கண்டிப்பு தீபம் போலாம் 
. மூச்சற விடம் போலே சுற்றி ஓடும் 
நீட்டான நொடிக்குள்ளே அனந்தவரை ஓடும் 
நிமைக்குள்ளே நூருசங்கம் நேராய் வாங்கும் 
ஓட்டான தமர்கடந்து பூரணத்தில் ஓடும் .
சட்டைமுனி வாதகாவியம் பாடல் 257 இத்தகைய தொழில் நுட்பத்தால் திருமூலர் ,அகத்தியர் , திருவள்ளுவர் , சட்டை முனி , கொங்கணர் , போகர் முதலிய சித்தர்கள் பிரபஞ்ச பயணம் செய்தனர் ... சித்தர்கள் கருங்குழியை பாதரசத்தில் உருவாக்கி அதில் நுண் புழு துளை உருவாக்கி தனது உடம்பை ஒளியுடம்பாக்கி, 5000 ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சபயணம் செய்தனர் . இன்றைய அறிவியலால் இதை சிந்திக்கக் கூட முடியவில்லை .. 
. ..
பாடல்கள் பொருள்
சூதம் என்ற பாதரசத்தை சுத்திசெய் அதனுடன் கார்முகில் பாசாணம் சேர் . . திரவ நிலை பாதரசத்தைக் கட்டி திடமாக கெட்டியாகச் செய் . புளியையும்உப்பையும் அரைத்து திடபாதரச கட்டிமேல் பூசு . இதை புடமிடு . . மீண்டும் புளி உப்பு விழுதை கெட்டியான புடமிட்ட பாதரசத்தின் மீது பூசு . அதைப் புடமிடு . இவ் விதம் ஒன்பது முறை புடமிடு 
அப்படி புடமிட்டால் பாதரசம் மடியும் பாதரசம் வெட்டை ஆகும் . அதனுடன் பாதரசத்திற்கு உறவான நட்பான பொருட்களை கலந்து உருக்கு .
இவ்விதம் உருக்கிய பாதரசம் குற்றம் இல்லாமல் இருக்கும் மற்றும் அதில் கொடுக்கப்படும் சாரணை பொருள்களை ஏற்கும் . ஆகையால் அதற்குச் சமமாக தங்கம் சாரணை செய் . அது தங்கத்தை ஏற்றுவிடும் . . ஆயினும் அதன் எடைமற்றும் பருமன் மாறாது . 
இந்த பாதரசத்திற்கு சம எடை நிமிளை சேர்த்து உருக்கி மணியாகச் செய் . 
அதன்பின் விரம் சுண்ணம் , வெள்ளை துருசு குரு , காரம் ஏற்றப்பட்ட குருவண்டு சுண்ணம் , அண்டசுண்ணம் , தோல் சுண்ணம் , பாதரச சுண்ணம் , கற்பூர சுன்னாம் , ஆகிய எழு சரக்கை காமநீரால் அரைத்து பாதரச நிமிளை மணிக்கு கவசம் போல் பூசு.

இந்தக் கவசம் செய்த மணியை பத்துநாள் வெயிலில் வை .. மூன்று வகை வங்கத்தையும் காம நீரில் ஊறப்போட்டு சுண்ணம்மாக்கி அதை ஜெயநீர் விட்டு அரைத்து மணிக்கு பூசு . 
அதை வெயிலில் காய வைத்து உலர்த்து .
இவ்விதம் உலர்ந்த மணியை நாள் பீடம் என்ற குகையில் வைத்து புடமிடு . . அவ்விதம் செய்தபின் தங்கம் குருமருந்தாகும் இது அற்புதமான வேதை சித்தரே . 

Related Contents