சித்தர் என்பவர் யார்?

யோகி.வே. ராஜா கிருஷ்ணமூர்த்தியுடன் சித்தர்கள் பற்றியும்,வாசியோக பாடங்கள் பற்றியும், இந்த வலைதள செய்திகள் பற்றியும் கலந்துரையாடல் செய்வதற்க்கு Telegram App-ஐ உங்களது கைபேசியில் பதிவிரக்கம் செய்துகொண்டு பின்வரும் குழுவில் இணைந்துகொள்ளவும்.

Telegram Downloadable Link  :   https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=en  

குழு1: கேள்விகள் கேட்க                  :   https://t.me/joinchat/AAAAAEKomRN-aMSEFHINbA
குழு2: வாசியோகம் பாடங்கள்     :   https://t.me/joinchat/AAAAAEHqG3J3Oal1cojdrg


சித்தி என்றால் வெற்றி பெறல் , அடைதல் என்று பொருள்படும் .

காய சித்தி , வேதை சித்தி , யோகசித்தி, ஞான சித்தி ஆகிய சித்திகளை பெற்று இறைநிலை அடைந்தவர்கள் .

படைத்தல், காத்தல், அழித்தல் , மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில் செய்பவர்கள் . 
இறவா நிலை பெற்று ஒளி உடலுடன்  வாழ்பவர்கள் . 
சிலர் துரிய தியான நிலையில் இருப்பவர்கள் . 
சமூக சீர்திருத்தவாதிகள். 
அறிவியலார் . 
இறைவனோடு ஒன்ற அஷ்டாங்க யோகம் என்ற வாசி யோகம் சொன்னவர்கள் . இது சித்தர்கள் செய்த யோகம் சித்தர் யோகம் மற்றும் சிவயோகம் (இது வாசி யோகத்தின் உயர் நிலை)

சித்த மருத்துவம் என்ற மருத்துவ முறை நிறுவியவர்கள் .

மனிதன் இறந்து போகாமல் நோய் இல்லாமல் இளமையுடன் வாழும் சாகாக்கலை  எனும் அறிவியலை உலகிற்கு கொடுத்தவர்கள் . அதில் இன்றைய மருத்துவ அறிவியல் முன்னேற்றமான ஸ்டெம் செல் தியரி பற்றி சொன்னவர்கள் . 


கேன்சர் , எயிட்ஸ் போன்ற தீரா நோய்களுக்கு மருத்துவ முறை சொன்னவர்கள் . 

எல்லை அற்ற கருணை மிக்கவர்கள் . வேண்டியதை தரும் வல்லமை மிக்கவர்கள் 

பிரபஞ்ச பயணியாக பிரபன்ச்சத்தை சுற்றி வந்தவர்கள் . பிறகோள் களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை சொன்னவர்கள் .

காலப்பயணம் செய்தவர்கள் .. 

அல்கெமி என்ற ரசவாதம் சொன்னவர்கள் . 

அஷ்டமா சிக்தி என்ற அதீத எட்டுவகை சக்திகள் பெற்றவர்கள் . 

பத்து அறிவுகள் பெற்றவர்கள் .

அறுபத்து நான்கு வகை சித்திகள் பெற்றவர்கள் . 

எப்படி சித்தர் ஆகிறார்கள் . ? 

சாதாரண மனிதர்கள் சித்தர் கல்வி கற்று வாசி யோகம் செய்து சித்தி பெற்று அதன் பின் 1 0 ஆண்டுகள் சிவயோகம் என்ற தச தீச்சை செய்து சித்திபெற்று சித்தர் ஆகிறார்கள் .

சித்தர்கள் எந்த வடிவில் உள்ளார்கள் ?

1. மனித உடலுடன் மனிதர்களாக வாழ்பவர்கள் . மக்களோடு மக்களாக வாழ்பவர் . சிலர் . குகைகளில் வாழ்பவர் . 

இவர்கள் தனது மூச்சு காற்றை அதன் வழியில் இயக்காமல் மூச்சு காற்றை தனது விருப்பம் போல் இயக்குபவர்கள் . இது அவர்களை அடையாளப்படுத்தும் .

2. துரிய தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவர்கள் .இவர்களுள் இரண்டு வகை உண்டு . முதல் 
வகை சமாதி செல்பவர் .(போகர் : இவர் முதல் சமாதி பழனி யில் உள்ளது இவர் சமாதியில் இருந்து வெளியே வந்து அருள் பாலிப்பதாக கோரக்கர் சந்திர ரேகை என்ற நூலில் சொல்கிறார் ..siddharyogam.com ) ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் 1000 ஆண்டுகளாக துரிய தியான சமாதியில் இருக்கிறார் . இத்தகைய சித்தர் சமாதியில் இருந்து மீண்டு வந்து மக்களுக்கு அருள் புரிவார் . இரண்டாம் வகை சமாதி செல்பவர் மீண்டு வராமல் சமாதியில் இருந்து அருள் பாலிப்பவர் சுந்த்தரா ஆனந்தர் மதுரையில் முதல் சமாதி ஆகி பின்பு பட்டமங்கலத்தில் இரண்டாம் சமாதி ஆகி சமாதியில் இருந்து அருள் செய் கிறார்.

3. இறைவனுடன் ஒன்றி ஒளிவுடம்பு பெற்றவர்கள் .

இவர்கள் ஒளி வடிவில் தரிசனம் தருபவர்கள் . திருமூலர் , காக புசுண்டர் , அகத்தியர் ஆகியவர்கள் இத்தகைய சித்தர்கள் .. 

சித்தர்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா ? பேச முடியுமா?

முடியும் 
வழி 1 
சித்தர்கள் இருக்கும் நிலையான துரிய தியான நிலைக்கு நம்மை தயார் செய்யவேண்டும் . அகத்தியர் ஞானம் 3 0 இதுபற்றி சொல்கிறது . . காகபுசுண்டர் வாசியோகத்தில் ஒளிகண்டால் அந்த ஒளியில் (ஒளி உடலுடன் ) இருக்கும் சித்தர்களில் நானும் ஒருவன் உன்னை காண காத்திருப்பேன் என்கிறார் பாடல் 522 மற்றும் 523னில் ( துரிய தியானம்..siddharyogam.com )
வழி 2 
கனவு நிலையில் தொடர்பு . 
இரவு துங்கும் முன் சித்தர்களை வணங்கி தியானம் செய்து நீங்கள் கேட்கவேண்டியத்தை கேட்டு தூங்குங்கள் . . இறவு கனவில் பதில் சொல்லுவார்கள் . அல்லது காலையில் விடை கிடைக்கும் .
வழி 3 
சித்தர் நூல்களில் உங்களுக்கு உத்தரவு அல்லது வழி சொல்லி இருப்பார்கள் . நீங்கள் படிக்கும் போது உங்களுக்கு மட்டும் தெரியும் 


Subpages (21): View All