கலந்துரையாடல்

அன்பர்கள் கருத்து

posted Mar 24, 2017, 2:06 AM by சித்தர் யோகம்

My name is Prem
Wednesday, March 1, 2017
என் இரகசிய வாழ்க்கை - சுருக்கம் - 2017
எனது குழந்தை பருவத்தில்,எனது முதல் குரு எனது கொள்ளு பாட்டி விநாயகர் முருகன் சிவன் என விக்ரஹ வழிபாட்டை சொல்லித்தந்தாள். தர்மம் செய்தால்மட்டுமே இறைவனை நெருங்கமுடியும் என்று என்னை மூளைசலவை செய்துவிட்டாள். இந்த பக்தி மார்க்கத்தில் நான் எனது பதினைந்து வயது வரை எல்லோரையும் போல் சென்றேன்.

எனது பதினைந்தாவது வயதில், வேதாத்திரி மஹரிஷியின் ( அறிவு திருக்கோவில் ) மனவளக்கலை மன்றத்தில் சேர்த்து யோகா மற்றும் தியானம் கற்றுக்கொண்டேன். கடவுளுக்கான ஒரு புதிய விளக்கம் அங்கு எனக்கு கிடைத்தது. அறிவு திருக்கோவிலின் யோகா, அகத்தாய்வு, புறத்தாய்வு மற்றும் காயகல்ப பயிற்சிகள் கற்று "அருட்செல்வர்" என்ற சான்றிதழ் கிடைத்தது. இந்த மகரிஷி யோக மார்க்கத்தில் பத்து ஆண்டுகள் ( எனது இருபத்தி ஐந்து வயது வரை ) இருந்தேன். ஆனாலும் எனக்குள் முழு தெளிவு இல்லை. இன்னும் ஏதோ ஒரு விஷயம் குறைவாக இருப்பதாக உணர்ந்தேன், ஆனால் எது என்று தெரியவில்லை.

எனது இருபத்தி ஆறாவது வயதில், இருசக்கரவாகனத்தில் செல்லும்போது ஒரு விபத்து ஏற்பட்டு பத்து நாட்கள் படுக்கையில் கிடந்தேன். இந்த காலத்தில் ஒரு மனமாற்றம் என்னுள் ஏற்பட்டது. ஒரு மனிதனுக்கு மனமகிழ்வு மிகவும் முக்கியம். வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடையாளப்படுத்தும் கடவுள் மஹாவிஷ்ணுதான் என்று என் மனதில் ஆழமாக தோன்றியது. எனது சகோதரனும் ஆருயிர் தோழனுமான பழனி சிவராமராஜா என்னை முதன்முதலாக திருப்பதி அழைத்துச்சென்றான். திருப்பதி பெருமாளை நெருங்கும்போது பெற்றதாயை வெகுகாலம் பிரிந்துசேர்வதுபோல் அழுகை பீறிட்டது. இரண்டுமணிநேரம் தொடர்ந்து விம்மி அழுதேன். நான் தீவிர விஷ்ணு பக்தனாக ஆனேன். இது என் மனதை மிகவும் மகிழ்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்தது. பல விஷ்ணு கோவில்களுக்கு சென்று வணங்கினேன். விஷ்ணுவின் நூற்றியெட்டு நாமம், ஆயிரத்தியெட்டு நாமம், ஜெப மாலை வைத்து ஓம் நமோ நாராயண என ஜெபித்தல் என்று வாழ்க்கை சிறப்பாக பதினைந்து வருடங்கள் சென்றது. இந்த காலகட்டத்தில் திருமணம், குழந்தைகள், பொருளாதார மேம்பாடு, தொழில் மேம்பாடு, மேற்படிப்பு (MCA ) மற்றும் பல அயல்நாட்டு பயணங்கள் என அனைத்தும் சிறப்பாக சென்றது. இதே காலகட்டத்தில் இயற்கை உணவுகள் மற்றும் நமது தமிழ் சித்த வைத்திய குறிப்புகளை இணையதளத்தில் நிறைய படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது (siththarkal.com ,  machamuni.com ...). சித்த வைத்திய குறிப்புகளை படிக்கும் போது அகத்திய மஹாமுனிவரை பற்றி படித்தேன். தமிழுக்கு முதல் இலக்கணம் எழுதியவர், சித்த வைத்திய நூல்கள் பல எழுதியவர், வர்மக்கலை மருத்துவம் மற்றும் நோக்கு வர்மத்தை கண்டுபிடித்தவர், ஒலி அலைகள் எப்படி மனதிலும் பிரபஞ்சத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆராய்ந்து பல மந்திர நூல்களை எழுதியவர், இறைவனை நமக்கு உள்ளேயே எப்படி மிகச்சரியாக உணர்ந்து அனுபவிப்பது என பல நூல்கள் எழுதியவர், ரசவாத நூல்கள்  என சொல்லிக்கொண்டே போகலாம். அகத்தியரிடம் எனக்கு பக்தி ஏற்பட்டது. என்னைப்பொறுத்தவரை தமிழை நேசிக்கும் ஒருவனின் முதல் கடவுள் அகத்தியர், தமிழனின் மத வேதநூல் திருக்குறள்.  இந்த காலகட்டத்தில் நான் மாமிசம் உண்பதை முழுதுமாக நிறுத்தினேன். அயல்நாடு பயணத்தில் எவ்வளவு குளிரடித்தாலும் ஒரு துளியும் மது அருந்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன். மாற்றாக திரிகடுகு சூரணம் மற்றும் நிலவேம்பு எடுத்துக்கொண்டேன்.

கடந்த 2014 -2015 ஆம் வருடம் நான் ஜெர்மனில் ஒரு வருடம் குடும்பம் இல்லாமல் தனியாக சமைத்துஉண்டு பணிபுரிந்தேன். இந்த ஒரு வருடம் என் வாழ்வில், அடுத்த பெரிய மாற்றத்தை கொடுத்தது. ஒருமுறை என் நண்பர் தேவராஜ் ஒரு ஜேர்மன் நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்று நீச்சல் கற்று கொடுத்தார். அப்போது அவர் என்னை முடிந்தவரை மூச்சை பிடித்துக்கொண்டு நீருக்குள் அமர்ந்து பயிற்சி எடுக்க அறிவுறுத்தினார். நான் என் வாழ்வில் முதன்முறையாக என் மூச்சை பிடிக்க முயற்சித்தேன். ஆனால் என்னால் ஐந்து வினாடிகூட மூச்சை பிடித்து நீருக்குள் அமர முடியவில்லை. நான் மிகவும் வருத்தத்தோடு என் அறைக்கு திரும்பிவந்து, மூச்சை பிடித்து நீச்சலடிப்பது எப்படி என்று இணையதளத்தில் தேடினேன். அந்த தேடல் என்னை பிராணாயாமத்திற்கு கொண்டுசென்றது. முதல் தேடல் பதிவாக, எழுத்து சித்தர் பாலகுமாரனின் சிங்கப்பூர் மேடைபேச்சு பிராணாயாமம் பற்றியது வந்ததை கேட்டேன். உடனே அகத்தியரை வணங்கி என் மூச்சை 10 வினாடிகள் பிடிக்க முயற்சித்தேன். மூச்சை பிடிக்கும்போது என் மனதில் பெரிய பெரிய பேய் உருவங்கள் வந்து பயமுறுத்தியது. அகத்தியர் அருளிய ஆஞ்சநேயர் வசியக்கட்டு மந்திரம் தேவையற்ற பயத்தை போக்கியது. என் மூச்சை சிறிது சிறிதாக எண்பது வினாடிகள்வரை அடக்கிக்கொள்ள பயின்றேன். இது என்னை முழுதுமாக பக்திமார்கத்திலிருந்து யோகமார்க்கத்துக்கு கொண்டுசென்றது. நான் ஆறு மாதத்தில் பன்னிரண்டு கிலோ எடை குறைந்தேன். தினமும் நல்ல சுறுசுறுப்பு, மைனஸிலுள்ள கடும்குளிரை எளிதாக தாங்கினேன். ***எச்சரிக்கை: இதைப்படிக்கும் நீங்களும் வழிகாட்டுதல் இல்லாமல் முயற்சிக்கவேண்டாம். இது உங்கள் உயிருக்கு ஆபத்தானது.  இருப்பினும் என் இஷடத்துக்கு மூச்சை அடக்குவது சரியா? என தெரியாமல் சிறிது வருந்தினேன். பக்கவிளைவாக எனக்கு அடிக்கடி வயிற்றில் ஊசியால் குத்துவதுபோன்ற வலி ( சூலை நோய் ) ஏற்பட்டது. இந்த நோய்க்கு தீர்வு என்னவென்று குரு அகத்தியரை தியானம் செய்தேன். இரவு உறங்குமுன் திரிபலா சூரணம், காலையில் ஒரு கட்டி வெண்ணை உண்டேன். ஒரு மாதத்தில் நல்ல பலன்கிடைத்தது, வயிற்று வலி குருவருளால் குறைந்தது.

எனது பிராணாயாமத்திற்கு ஒரு நல்ல வழிகாட்டியை காண்பிக்குமாறு குரு அகத்தியரை தினமும் வேண்டினேன். குருவருளால் மதுரையில் உள்ள ஒரு பேராசிரியரின் தொடர்பு கிடைத்தது. அவர் தனது இணையதளத்தில் உள்ள "வீட்டில் வாசியோகம்" படித்து பயில சொன்னார். மேலும் அவர் வாசிபிராணாயாமத்தை மூலாதாரத்தில் மட்டும் செய்து இல்லற வாழ்வை நன்கு முழுமையாக அனுபவிக்க அறிவுறுத்தினார்.  இது எனக்கு மிகுந்த புத்துணர்வையும் நிம்மதியையும் தந்தது. விரும்புகிறவர் அவரின் இணையதளம் பார்க்கலாம் ( http://www.siddharyogam.com/yoga/yogapalagu/vasiyogam).

நேரம் கிடைக்குபோதெல்லாம் குருவருளால் யோகமார்கத்தின் பல சித்தர்களின் நூல்கள் படிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. மேலும் அனுபவத்தை சில காலம் கழித்து பதிவிடுகிறேன்.

உங்கள் பிரேம்கலை

Prammenthiran Rajendran at 3:49 AM

THE HIGHEST RESPECT TO WOMEN

posted Mar 13, 2016, 10:39 PM by Siddhar Admin   [ updated Mar 13, 2016, 10:39 PM ]

THE HIGHEST RESPECT TO WOMEN
Every day is Women's day at Madurai , Tamil Nadu , India.. Every day the first Pooja to goddess Meenaakshi then to Siva . 
The modern ladies are tagging their husband name behind their name . 
The name of Siva at Madurai is" Meenakshi Sundhares warar" . The revolutionary thinking in the God Siva who put his wife's name in the first place.
Meenakshi sundaram is a common male name in my town Madurai . The 
Sakthy worship is one of the spiritual way in Hindu spirituality .

It is unfortunate only one day is allotted to women .in Western culture . . I am pity on Western women when I see in cinema , club or in festival march . Because the women are half dressed EVEN IN VERY COLD DAYS . where as her male partner is fully dressed
The highest respect given to women is to respect them every day and every where

நாசி துவாரங்களில் வாசி யோகம் பழகுதல்

posted Oct 16, 2014, 10:57 PM by Siddhar Admin   [ updated Dec 20, 2014, 10:07 PM ]

கேள்வி 
 
வாசி யோகத்தில் ; இரண்டு நாசி சுவாசம் , இடது நாசி சுவாசம் வலது நாசி சுவாசம் ,  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 நாடி சுத்தி
, பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
பதில் 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை பிங்கலை சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம் . 

இடகலை பிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன .. ஆயினும்   இடகலை என்ற சந்ரகலை 16  நாத கலை சக்தி கொண்டது .   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை.இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில்  உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது . . இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும் .இந்த பிரபன்ச்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது .  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை .. 
.  
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம் 
அப்பொழுது நாத கலை !விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலில் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம்இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது 

அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்க்கு 

  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  
இது பிராணயாமம்

 
இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசி யோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில்  பிராணாயாமம் செய்வது வாசியோகம் 
பழக வேண்டும்   .

 
இதனால்  பிரபன்ச்சத்தில் பெறும் நாத மற்றும் விந்து சக்திகள் உடலில் நாத விந்து சக்திகளை உருவாக்கி . உடலில் சக்தி சம நிலை உருவாக்கும் . இவிதம்  படிப்படியாக நாடிகளை நெறிப்படுத்தி சக்தி சமநிலை பெறுவதால் மனம் அமைதிஆகி ஒருநிலைப்படும். உடல் உறுதி பெறும் 
.

இப்படி படிப்படியாக வாசி பழகாவிட்டால்  சக்தி சமநிலை கெடும் . 
மூச்சுப்பிடிப்பு மற்றும் துன்பங்கள் வரும் .  

இவ்விதம் படிப்படியாக வாசி பழகுவதால்  உடல் முழுவதும் சக்தி ஓட்டபாதை சீராகும் . அனைத்து அவயவங்களும் சக்தி பெரும் . இதனால் நோய்கள் தீரும். துன்பம் நேராமல் சக்தி பெறுகிறோம் .
 
அன்புடன்
 
 
யோகி . வே . இராஜா  கிருஷ்ண மூர்த்தி
 

சூக்குமமும் கடவுளும்

posted Sep 25, 2014, 6:27 PM by Siddhar Admin   [ updated Sep 25, 2014, 6:28 PM ]

Purushothaman Lakshmana Naidu அவரவர் கடவுள் நிலை பற்றி உணர்ந்ததை அவரவருக்கு எப்படிப் புரிந்ததோ அதைப் பற்றிகூறுகின்றனர். அவற்றை நாம் அப்படியே ஏற்கவேண்டுமா?


Raja Krishna Moorthy தெரியாதவர் கேட்டால் சொல்வேன் . ஆயினும் தெரிந்ததைச் சொல்கிறேன் .
சித்தர்கள் அனைவரும் அடிப்படையில் ஒன்றுபோல் சொல்கிறார்கள் . நான் சித்தர்கள் சொல்வதைச் சொல்கிறேன் . இது யோகா பாதை . முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் . உங்கள் அறிவுக்கு எது சரி என்று படுகிறது, அதைச் செய்யுங்கள் . . அதுவே உங்கள் படித்தரம் ..

Purushothaman Lakshmana Naidu ஸ்ரீ ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களே "நம் அறிவுக்குத்தெரிந்தவாறு இறைச் சக்தியை எல்லா உயிரினங்களும் ஏதாவதொரு வகையில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்களாகிய நாமும் அந்த இறைச் சக்தியை அவரவர் தன்மைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். நமக்குத் தெரியாத நம்மால் புரிந்துகொள்ளமுடியாத சூக்குமமான அந்த இறைச் சக்தியைப் பற்றி தெரிந்துகொள்வதினால் என்ன பயன்? நாம் தான் நம் தகுதிக்கேற்ப அந்த இறைச் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோமே! அந்த இறைச் சக்தி தன்னைப் பற்றி நமக்குத் தெரிவிக்கும்வரை நாம் காத்திருப்போமே. பிறர் கூறுவதை நாம் ஏன் ஏற்கவேண்டும் என்று வினவுகிறேன்.

Raja Krishna Moorthy அன்பு Purushothaman Lakshmana Naidu
"
நம் அறிவுக்குத்தெரிந்தவாறு இறைச் சக்தியை எல்லா உயிரினங்களும் ஏதாவதொரு வகையில் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்களாகிய நாமும் அந்த இறைச் சக்தியை அவரவர் தன்மைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம்"
இது சத்தியமான உண்மை .
இறைவன் எல்ல உயிர்களிலும் தன்னை உணர்த்திக்கொண்டு இருக்கிறான் ..
உயிர் இனங்களில் மனிதன் மட்டுமே இறைவனை உணரவும் ஒளி வடிவில்பார்க்கவும் முடியும்

அதைக் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐந்து அறிவுடன் பகுத்துஅறியும் 6வது அறிவு , கற்றதால் கிடைக்கும் 7 ஆம் அறிவு அனுபவத்தால் வரும் 8 ஆம அறிவு ஆகியவற்றால் இறைவனைக் காண முடியாது உணரவும் முடியாது. . 9ஆம் அறிவால் ஆராயும் போது( விஞ்ஞானமய கோஷத்தால் இறைவனை உணர முடியும் . . 
9
ஆம் அறிவு முடிவில் இறைவனைக் காணவும் அவனோடு இணையவும் தேவைப்படுவது 10 ஆம் அறிவு .இதை ஆனந்தமய கோஷத்தால் அடையமுடியும் .. 
9
மற்றும் 10 ஆம் அறிவு முயன்று அல்லது குரு சொல்லிகொடுகக வரும் . 
வெறுமனே காத்திருப்பதால், சோம்பேறிக்கு ஒருநாளும் ஞானம் கிட்டா. உணர்த்திக்கொண்டு இருக்கும் இறைவனை உணரவோ , காணவோ முடியாது . 
இறைவனோடு இணைந்து மரணமில்லா வாழ்வு பெறுவதே சித்தர்களின் குறிக்கோள் . 
இதற்கு வாசி யோகமும், கற்பங்கள் செய்யவும், உண்ணவும் . பயிற்சியும் முயற்சியும் தேவை ...

Purushothaman Lakshmana Naidu ஸ்ரீ ராஜா கிருஷ்ணமூர்த்தி அவர்களே மனிதர்களாகிய நாம் முதலில் அன்னமய சூக்கும உடல் அல்லது கோசத்தை உண்டாக்கி உடலெங்கும் பரவச் செய்யவேண்டும். அடுத்து இரண்டு வகையான பிராணமய கோசங்களை உண்டாக்கவேண்டும். அடுத்து, இரண்டு மனோமய கோசங்களை உண்டாக்க வேண்டும். அதற்கு அடுத்து விஞ்ஞானமய கோசத்தை உண்டாக்க வேண்டும். முடிவாக ஆனந்தமய கோசத்தை உண்டாக்கவேண்டும். ஆக ஏழு சூக்கும உடல்களை நாம் நமக்குச் சொந்தமாக்கவேண்டும். பிறகு அவைகளைப் பயன்படுத்தும் முறைகளையும் பயிலவேண்டும். இந்த உடல்களெல்லாமே உணர்பவை. இந்த உடல்களெல்லாம் பிறப்பிலேயே நம்மிடம் உள்ளதா. அல்லது வெளியிலிருந்து பெறப்படுபவையா?

Raja Krishna Moorthy அன்பு Purushothaman Lakshmana Naidu தெரியாதவர் கேட்டால் சொல்வேன் . ஆயினும் தெரிந்ததைச் சொல்கிறேன்
காத்திருக்காமல் முயல வேண்டும் என்ற கருத்தை ஆதரித்ததற்கு நன்றி .
நம் உடலில் இயற்கையாக ஐந்து கோஷம்(உடல் )மட்டும் உண்டு . இவை 28 கலை பிரபஞ்ச சக்தி பெற்று 56 கலை சக்தி உடல் உருவாக்கி மொத்தம் 84 கலை சக்தி உடல் உருவாக்குகிறது . இதனால் உடல் 12 கலை சக்தியை விரயமாக்குகிறது .
நான் என்னும் 96 தத்துவங்களும் 96 கலை சக்தி அடைந்தால் மரணம் இல்லை .

பிரபஞ்சத்தில் இருந்து 32 கலை சக்தியைப் பெற்று, 64 கலை சக்தியை உடல் உற்பத்தி செய்து, 96 கலை சக்தி உருவாக்கவேண்டும் 
எனவே வெளியே பிரபஞ்சத்தில் இருந்தும்.உள்ளே உடலில் இருந்தும் சக்தி தேவை. .உருவாக்கவேண்டும் . இதற்கு வாசியோகம செய்து கற்பங்கள் உண்ண வேண்டும் இதனால் விரயமாகும் 12 கலை சக்தி உடலில் சேரும் . மரணம் வராது. மற்றும் அதீத சக்தியும் இளமையும் நிலை பெறும் . . இதனால் சூக்குமத்தை அறியமுடியும் . 
. . 
சூக்குமம் என்பது புரியட்டம் என்ற எட்டு நிலை உடையது .. மற்றது சக்கர சூக்குமநிலை .இதில் சகஸ்ராரம் உடலுடன் கணக்கிடப்பட்டால் எழு .. சக்கர சூக்குமத்தில் உள்ளே 6. வெளியே ஒன்று. . இது வாசியோகம் செய்து சிவயோகம் செய்து உடலில் உள்ளே இருக்கும் இறைவனைக் காண்பது .

புரியாட்டம் என்னும் சூக்குமம் உடலில் உள்ளே மூன்றும் வெளியே 5-ம் ஆக மொத்தம் 8. இவற்றை இணைத்துப் பெறுவது மௌன யோகம் . இது உயர் நிலை சிவயோகம் . இது வெளியே இருக்கும் இறைவனைக் காண்பது. ஆகையால் சூக்குமம் உள்ளேயும் உண்டு வெளியேயும் உண்டு .. இறைவன் உள்ளேயும் உண்டு வெளியேயும் உண்டு . இரண்டையும் கண்டு, தான் அவன் ஆதல் மனிதன் இறை நிலை அடைதல் . இதை திருமூலர் நான் நந்தி ஆனேன் என்றார் .

ஜோசியம் பொய்யா? யாத்திரை வீனா?

posted Sep 25, 2014, 6:24 PM by Siddhar Admin   [ updated Sep 25, 2014, 6:25 PM ]

தோஷம் ,பரிகாரம் இதெல்லாம் உண்மையா?
பரிகாரம் செய்தால் தோஷம் போய்விடுமா?
ஜாதகம் கர்மாவால் ஏற்படும் போது கோவிலில் சென்று செயும் பரிகார கள் நமது தோசத்தை போக்குமா?

நாம் கும்பிடும் தெய்வங்கள் , பூஜைமுறைகள் ஜோதிடம் ஆகியவை .
பக்தி யோகா வழியாகும் இது சரியை கிரியை என்ற அனுபவத்தையும் நம்பிக்கையும் சார்ந்தது .
வேதாந்த வழி யாகும் மக்கள் துன்பநிலையில் இருந்து விடுபட்டு மகிழும் படி செய்பவை . இங்கு அறிவை விட அனுபவம் மேலோங்கும் .. இந்த அடிப்படையில் அமைத்தது ஜோசியமும் பரிகாரமும் 

சனி தோசம் போக்க திருனள்ளறு,
ராகு கேது தோஷம் போக்க திரு நாகஸ்வரம் .
நவக்கிரக தோஷம் போக்க சூரியனார் கோவல் ,
குரு பார்வை பெற பட்டமங்கலம், பிச்சண்டர் கோவில்
எல்லா பாவம்களை போக்க காசி , கைலாயம் ,ராமேஸ்வரம்
ஆகிய கோவில்களில் பரிகாரம் பூஜை செய்கிறோம்
நம்ம்பிக்கை உள்ளவர் செய்கிறார் . . இத்தகை யவர் 90% க்கும் அதிகம் . நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்தி கற்கும் தெய்வம் உண்டு .அவரை தவறு என்று சொல்ல முடியாது

நீங்கள் கேட்டது அறிவு சார்ந்தது. அறிவியலை அடிப்படையாக கொண்டது .இது சித்தாந்தம் என்பது . சித்தர் வழி . யோகமும் ஞானமும் சித்தாந்த வழி ... சரியை கிரியை ஆகியவற்றை கடந்தவர்களே சித்தாந்திகள் , யோகிகள் ,சித்தர்கள் . மக்களில் மிக குறைவு ...
உங்கள் கேள்விக்கு சித்தர் களின் பதில் ::
அகத்தியர் சொல்கிறார்

கூறுவேன் லோகதி மா ந்தறெல்லாம்
குறிப்புடனே சொல்லுகின்ற ஜோதிடங்கள்
மாறுதலாம் பொய் யன்றி மெய் யொன்றில்லை


பாடல் 902 5 ஆம் காண்டம் அகத்தியர் பெரு நூல் 12000 தொடக்கி
அதை நிருபிக்க 10 பாடல்கள் பாடியுள்ளர்
அகத்தியர் 912 ஆம் padalil பரிகாரம் சொல்ல்கிறார், அப்பாடல்
.
தேடியாதோர் விதி போலே அமைககும்மபபா
தெளிவு அறிந்த ஞானிகள் தன அறிவரப்ப
நாடியே தேவ வழிபாடு கண்டு
நலமுடனே இருந்தவருக்கு எல்லாம் சித்தி .


கருத்து
ஜோசியம் பொய் . இதை அறிவு உள்ள ஞானி அறிவார்கள் , நீங்கள் செய்த கரியங்களின்படி நடக்கும் .தேவவழிபாடு செய்யுங்கள் . எல்லாம் வெற்றியாகும்

கோவில் குளம் போவதால் வினை தீராது ... பாடல் 837 , அகத்தியர் !2000 காண்டம் 5 பாடல் 837

யாத்திரை தான் போனதினால் ஆவதென்ன
அறிவில்லா கொடுமை
............................................பாடல் 272 அகத்தியர் சௌமிய சகரம் !200

வாசியோகம் கேள்வி பதில்கள்

posted Sep 13, 2014, 9:16 AM by Siddhar Admin

கேள்வி கேட்டவர் - Gopinathan R
(1) கேள்வி
பூரகம்,கும்பகம்,ரேசகம் - இம்மூன்றின் போதும்  மனம் ஒடுங்க மறுக்கிறது..  ஏற்கனவே மனதிற்கு மூச்சை இழுக்கும் வேலையும் நொடிகளை கணக்கு வைக்கும் வேலையும் கொடுத்து உள்ளேன்.."

பதில்

 மனம் ஒடுங்காது . சுழிமுனை திறக்கும்வரை இப்படித்தான் இருக்கும் . கவலை வேண்டாம் ., நெறிபடுத்தலே செய்ய முடியும் ." மூச்சை இழுக்கும் வேலையும் நொடிகளை கணக்கு வைக்கும் வேலையும் கொடுத்து உள்ளேன்.."
 இது சரியான வழி..  . 
 வீட்டில் வாசி யோகா பாடத்தில்  மனம் குவிய மனதை பழக்க த்ராடக, சூரிய யோக சந்திர யோகம் ஆகிய பயிற்சி சொல்லி உள்ளேன் . .பயிற்சி  
பழகி பின் மனம் நெறிப்படும் குவியும். ஆயிரம் நினைவுகள் மறையும்.

(2) கேள்வி

பயிற்சி செய்ய ஆம்பித்த சில நிமிடங்களில்லேயே , அடி வயிறு கலக்க ஆரம்பித்து, மலம் கழிக்க உந்துகிறது.. அபாண வாயுவும் வெளியேறுகிறது.... காலை மற்றும் மாலை பயிற்ச்சி செய்யும் போதும் இது போல நடக்கிறது .

 இது  என் உடலில் உள்ள குறையா? இந்த பயிற்சியின் இயல்பு விளைவா அல்லது நான் முறையாக செய்வதில்லையா..??

குடலை சுத்தம் செய்துவிட்டு அமர்ந்தாலும் கூட இந்த பிரச்சனை இருக்கிறது

இந்த இரு பிரச்சினைகளால் என்னால் பயிற்சியை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியவில்லை..

வழி நடத்தவும் குரு இல்லாமலும் தவித்து வருகிறேன்...!!


பதில்

தவறு இல்லை . வாசியோகம் உடல் அழுக்கை போக்கும் . அதன் காரணம்  .கழிவு வெளியேறுகிறது. கவலை வேண்டாம் விட்டு விட்டு செய்வதால் தவறு இல்லை. 
 வீட்டில் வாசி யோகா பாடத்தில் உடல் சுத்திசெய்ய கல்பங்கள் சொல்லி உள்ளேன் , 
செய்து பார்க்கவும் .. உடல் சுத்தி பெற்று வலுபெற்றால் இந்த தொந்தரவு தீரும் .
முடிந்தவரை பயிற்சி தொடருங்கள் .. 
 
 குரு சீடன் உறவு இன்று பொருந்துவதில்லை .  ஆகையால் நான் யாருக்கும் குரு இல்லை .வழிகாட்டி .இன்றைய 
 சூழ்நிலைக்கு ஏற்ப்ப வீட்டில் வாசி யோகம் பாடம் வடிவமைத்து நீங்களே செய்யும் படி சொல்லப்படுகிறது .
 சந்தேகத்திற்கு பதில் சொல்ல, தொடர்ந்து வழி காட்டி உதவ சித்தர் யோகம் வலைத்தளம் உருவாக்கபபட்டது 
 "குரு இல்லா மாணவர்க்கு . நூலே குரு "என்று சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் ... அக்காலத்திற்கு நூல் . இக்காலத்தில்  வலைத்தளம் இந்தகுறையை போக்கும் .உங்கள் பயிற்சியை தொடருங்கள். ..

இறைஅருள் பெறுக
   அனபுடன்
 யோகி. வே.இராஜா கிருஷ்ண மூர்த்தி 

1-6 of 6