எங்களை பற்றி

புரவலர் பற்றி


சித்தர் யோகா விருந்து அளிப்பவர்


யோகி . வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி

வணக்கம்  !!!

 என்னை பற்றி

குடும்பமும்
 இல்லற வெற்றியும் .  

வேலாயுதம் மற்றும் கன்னியம்மாள் தம்பதிக்கு 19- 6-1944 ஆம் ஆண்டு பிறந்தேன் .    இரண்டுவகை கல்வி கற்றேன்ஒன்று  உலக கல்வி , மற்றது சித்தர் கல்வி .  கருனை வடிவான பச்சைகிளி அம்மையாரை 10 12 1972 ஆம் நாள் வாழ்கை துனைவியராக அடயும் பாக்கியம் இறைவன் அருளாள்பெற்றேன். எனது  இல்லறம் மற்றும் யோக வெற்றிக்கு துனைவியரே காரணம்.  மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் இறைவன் இன்னருள் கொடையால் அமைந்தது. தற்பபோது சித்தர்கள் உத்தரவுப்படி துறவறம் மேற்கொண்டு உள்ளேன்.

உலக 
 கல்வி தகுதியும் வெற்றிகளும்  : LCE: BE; ME(AG); Ph.D; PGD YOGA. (Authorized yoga teacher ).  பொறியியல் தின கூலியாக சேர்ந்து வேளாண்மை பல்கலை கழகத்தில் துறை தலைவராக பணிசெய்தேன்.  அப்பழுக்கு இல்லாத பணிக்கு கேடயமும் தமிழ் நாடின் தலைசிறந்த விஞானிகளில் ஒருவன் என்ற பெருமையும் பெற்றேன் வந்த உயர் பதவிகளை உதறிவிட்டு சித்தர்கள் பற்றி ஆராய்ச்சி 40 ஆண்டுகளுக்கும் மேலாக  செய்து வருகிறேன்.

யோ
க பாதை வெற்றி
பரமகுரு முருகனை குவாக அடயும் பேறுகிட்டியது.  
திருமூலர், அகத்தியர் , புசுண்டர் பிறசித்தர்கள் உப தேச குரு வாகும் அருள் பெற்றேன்

சித்தர் கல்வி தகுதி : யோகா சித்தி பெற்றேன் ., வேதை சித்தி பெற்றேன் , காய சித்தி ஆறு ஆண்டுகள் முடித்து  ஆறு தீட்சை முடித்து  சித்தர் தகுதி பெற்றேன் . சித்தர்கள்  என்னை சித்தர்  என்று அழைப்பார்கள் . 
நாற்பது ஆண்டுக்கும் மேல் சித்தர் பற்றியும் அவர்கள் செய்து முடித்தது பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறேன் . சுமார் 4000.ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் செய்தவற்றை இன்றுசெய்ய முடியுமா ? இக்கேள்விக்கு தொடர்ந்து ஆராய்ச்சி செய்கிறேன் . செய்ய முடியும் என்பதில் பல வெற்றிகள் பெற்று உள்ளேன் . அதை
சித்தர்களை தொடர்புகொள்ளும் பாக்கியம் பெற்றேன் . அவர்கள் ஆணைப்படி அவர்கள் கற்றுக் கொடுத்ததை , நான் செய்து பார்த்ததை உங்களுக்கு சொல்லும் வாய்ப்பு பெற்றேன் உலக கல்வி தகுதி :. இந்தவலைதலம் உங்களுக்கு பெரிதும் பயன் தரும்.  உங்கள் அருமையான நேரத்தை என்னுடன் செல்விட்டமைக்கு நன்றி .

அன்புடன்
யோகி . வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி


வலை தலம் பற்றி

தமிழ் சித்தர்களின் .( சித்தர்கள் யார் பகுதி பார்க்க ) கோட்பாட்டின்படி இந்த வலைத்தலம் அன்புடன் உங்களுக்கு தருபவைகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன
. இறைவன் யார் ? நான் யார் ? இறைவனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்ன? ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறது .
நாம் பிறந்ததின் நோக்கம் என்ன ? அதை அடைவது எப்படி ? ஆகிய கேள்விகளுக்கு விடை தருகிறது
மிகுந்த சக்தி பெற்று ,அனைத்திலும் வெற்றி பெற்று ,விரும்பியதை பெற்று, அனைத்து செல்வங்களும் பெற்று இன்பமான உலக வாழ்க்கை வாழ வழி காட்டுகிறது
அனைத்து நோய்களையும் போக்கி , என்று இளமையாக , நீண்டகாலம் வாழும் தொழில் நுட்பம் கூறுகிறது .
அன்றாட வாழ்வில் வரும் பிரச்சினைகள், மன அழுத்தங்கள், துயரங்கள் தீர்க்கும் வழி முறைகளை பேசுகிறது .
இன்பமான இல் வாழ்க்கைக்கு அடிப்படை அமைக்கிறது

மனவலிமை அதிகரிப்பது ., நுண் அறிவை வளர்ப்பது , முடிவுசெயும் திறன் அதிகரிப்பது .
தமிழ் சித்தர்கள் பற்றி முழுமையான அறிவியல் தகவல் தருகிறது மனிதன் தன்னுள் இறைவனை ஒளி வடிவில் காணவும் , இறைவனுடன் கலந்து முக்திபெற்று பேரின்பம் பெற வழி வழங்குகிறது .
இவற்றை அடைய தேவையான வாசியோகத்தை ( அஷ்டாங்க யோகா/ ராஜயோக/குண்டலியோகா ) கட்டணம் இன்றி ஆண் லைனில் யோகி. இராஜா கிருஷ்ண மூர்த்தி krishna கற்றுத்தருகிறார். (யோகா பழகு பக்குதியில் “வீட்டில் வாசியோகா “ என்ற தலைப்பில் பார்க்க )